மா டோங் சியோக்கு
மா டோங் சியோக்கு அல்லது டான் லீ (ஆங்கில மொழி: Ma Dong seok) (பிறப்பு: மார்ச்சு 1, 1971) என்பவர் தென் கொரிய நாட்டு நடிகர் ஆவார். இவர் 'ரெயின் டு பூசன்'[1] போன்ற அடுத்தடுத்த பல திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தென் கொரியாவில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவரானார். இவர் 2018 இல் கேலப் கொரியாவின் ஆண்டின் சிறந்த திரைப்பட நடிகராகவும் இருந்துள்ளார்.
மா டோங் சியோக்கு | |
---|---|
பிறப்பு | லீ டோங் சியோக்கு மார்ச்சு 1, 1971 சியோல், தென் கொரியா |
மற்ற பெயர்கள் | டான் லீ |
கல்வி | கொலம்பஸ் மாநில சமூகக் கல்லூரி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–இன்று வரை |
2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'கில்காமேசு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் மார்ச் 1, 1971 இல் தென் கொரியாவில் சியோல் நகரில் பிறந்தார்.[3] இவருக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது.[4] இவர் தனது இளமை பருவத்தில் அமெரிக்காவில் உள்ள ஒகையோ மாநிலத்திற்கு குடிபோனார். கல்லூரி படிப்பை கொலம்பஸ் மாநில சமூகக் கல்லூரியில் பயின்றார், பின்னர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடர மீண்டும் தென் கொரியாவுக்கு வந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Train to Busan' takes Don Lee to Hollywood". The Korea Times. September 28, 2016.
- ↑ Gonzalez, Umberto (April 17, 2019). "Marvel Studios Taps Ma Dong-seok for 'The Eternals' (Exclusive)". TheWrap இம் மூலத்தில் இருந்து April 17, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417202839/http://www.thewrap.com/marvel-studios-ma-dong-seok-the-eternals/.
- ↑ "마동석-예정화, 3개월째 교제중이다". 허프포스트코리아 (in கொரியன்). Huffington Post. 18 November 2016. Archived from the original on 14 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Actor Ma Dong-seok Cast in New Marvel Film". Chosun Ilbo. பார்க்கப்பட்ட நாள் 2019-07-23.