மா லாங் (Ma Long, Chinese;马龙 பிறப்பு 20 அக்டோபர் 1988) ஒரு சீன மேசைப் பந்தாட்ட வீரர் ஆவார். [1] இவர் 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர். இவர் 2015, 2017 மற்றும் 2019 இல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக வாகையாளர் போட்டிகளில் வாகையாளர் பட்டம் பெற்றவர் ஆவார். இவரது சாதனைகளுக்காக சர்வதேச மேசைப் பந்தாட்ட கூட்டமைப்பு இவருக்கு "தெ டிக்டேட்டர்" மற்றும் "தெ டிராகன் " (இவரது பெயரிலிருந்து பெறப்பட்டது, லோங் ) எனும் புனைப்பெயரை வழங்கியது. 2014 முதல், இவர் சீன தேசிய ஆண்கள் மேசைப் பந்தாட்ட அணியின் தலைவராக இருந்தார்.

2016 ஆம் ஆண்டில், மா லாங் பெருவெற்றித் தொடர் ( ஒலிம்பிக், உலக வாகையாளர் மற்றும் உலகக் கிண்ணம்) வென்ற ஐந்தாவது வீரர் ஆனார், ஜான்-ஓவ் வால்ட்னர், லியு குலியாங், காங் லிங்ஹுய் மற்றும் ஜாங் ஜைக் ஆகியோர் இதற்கு முன்னர் இந்தச் சாதனையினை படைத்திருந்தனர். அதிக நாட்கள் முதலிடம் பிடித்த வீரர் எனும் சாதனையினையும் இவர் வைத்துள்ளார். 64 மாதங்கள் இவர் முதலிடத்தில் இருந்தார். மார்ச் 2015இல் இருந்து தொடர்ச்சியாக 34 மாதங்கள் முதலிடத்தில் இருந்தார். [2] 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், மா லாங் தனது வாழ்க்கையில் இருமுறை பெரு வெற்றித் தொடர் போட்டியை வென்ற முதல் மற்றும் ஒரே ஆண் வீரர் எனும் சாதனை படைத்தார். இதன் மூலம் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மேசைப் பந்து வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். [3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மா லாங் நாஞ்சிங்கின் சியா லு எனும் தனது காதலியினை மணந்தார். [4] டிசம்பர் 10, 2017 அன்று, சினா வெய்போவில் இந்தத் தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. [5]

சாதனைகள்

தொகு
ஒற்றையர் பிரிவு (ஜூலை 2021 நிலவரப்படி) [6]
  • ஒலிம்பிக் விளையாட்டுக்கள்: வெற்றியாளர் (2016, 2020)
  • உலகக் கோப்பை : வெற்றியாளர் (2012, 2015); இரண்டாம் இடம் (2014, 2020); மூன்றாவது இடம் (2008, 2009, 2017).
  • ITTF உலக சுற்றுலா வெற்றியாளர் (28)
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வெற்றியாளர் 2010
  • உலக இளையோர் வாகையாளர் போட்டி: வெற்றியாளர் (2004), காலிறுதி (2003)
  • ஆசிய இளையோர் வாகையாளர் போட்டி: வெற்றியாளர் (2004)

சான்றுகள்

தொகு
  1. "MA Long – Biography". gz2010.cn. Guangzhou Asian Games Organizing Committee. Archived from the original on 16 June 2011. பார்க்கப்பட்ட நாள் 25 January 2011.
  2. "ITTF world ranking". International Table Tennis Federation. Archived from the original on 17 December 2011. பார்க்கப்பட்ட நாள் 5 January 2012.
  3. "Undisputed G.O.A.T Ma Long Breaks New Ground In Tokyo". World Table Tennis. 30 July 2021.
  4. "马龙战胜张继科比爱心 马龙女友是谁". crionline. 30 July 2021.
  5. "马龙当爹!未摆宴先抱子 孩子降生第二天回归赛场". sports.sina. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.
  6. "ITTF Statistics". International Table Tennis Federation. Archived from the original on 3 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா_லாங்&oldid=3904212" இலிருந்து மீள்விக்கப்பட்டது