மிசிசாகா
மிசிசாகா (Mississauga /ˌmɪsɪˈsɔːɡə/ (கேட்க)[3] என்பது கனடிய மாகாணமான ஒண்டாரியோவின் ஒரு நகரமும், தொராண்டோ மாநகரின் ஒரு புறநகரும் ஆகும். இது ஒண்டாரியோ ஏரியின் கரையோரப் பகுதியில் பீல் மாநகரசபையில் தொராண்டோவின் கிழக்கே அமைந்துள்ளது. 2016 கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 721,599 ஆகும். இது கனடாவின் ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும், ஒண்டாரியோவின் மூன்றாவது பெரிய நகரமும், தொராண்டோ பெரும்பாகத்தின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.[1][4]
மிசிசாகா Mississauga | ||
---|---|---|
நகரம் | ||
மிசிசாகா நகரம் | ||
| ||
குறிக்கோளுரை: நமது கடந்த காலத்தில் பெருமை, நமது எதிர்காலத்தில் நம்பிக்கை | ||
ஒன்றாரியோ மாகாணத்தில் மிசிசாகாவின் அமைவிடம் | ||
ஆள்கூறுகள்: 43°36′N 79°39′W / 43.600°N 79.650°Wஆள்கூறுகள்: 43°36′N 79°39′W / 43.600°N 79.650°W | ||
நாடு | கனடா | |
மாகாணம் | ஒன்றாரியோ | |
பிராந்தியம் | பீல் | |
நிறுவல் | 1968, நகரமாக | |
இணைப்பு | 1974, நகரமாக | |
அரசு | ||
• உள்ளூராட்சி | மிசிசாகா நகரசபை | |
• நா.உகள் | நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
| |
பரப்பளவு | ||
• மொத்தம் | 292.43 km2 (112.91 sq mi) | |
ஏற்றம் | 156 m (512 ft) | |
மக்கள்தொகை (2016)[1] | ||
• மொத்தம் | 721,599 | |
• அடர்த்தி | 2,467.60/km2 (6,391.1/sq mi) | |
நேர வலயம் | கிநேவ (ஒசநே−05:00) | |
• கோடை (பசேநே) | கிகோநே (ஒசநே−04:00) | |
முன்னோக்கிய வரிசைப்படுத்தல் பகுதி | L4T முதல் L5W வரை, M7R | |
தொலைபேசி குறியீடு | 905, 289, 365 | |
Demonym |
| |
இணையதளம் | www.mississauga.ca |
தொராண்டோவிற்கு அருகாமையில் இருப்பது மிசிசாகாவின் வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.[5] 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நகரம் பன்முக கலாச்சார மக்களை ஈர்த்தது. இது ஒரு செழிப்பான மைய வணிகப் பகுதியை உருவாக்கியது.[6][7] கனடாவின் பரபரப்பான விமான நிலையமான தொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கு உள்ளது. அத்துடன், பல கனடிய, பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகமாகவும் மிசிசாகா விளங்குகிறது.
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 "(Code 3521005) Census Profile". 2016 கணக்கெடுப்பு. Statistics Canada. 2017.
- ↑ "Demonyms—From coast to coast to coast — Language articles — Language Portal of Canada". www.noslangues-ourlanguages.gc.ca. 30 ஆகத்து 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Dictionary Reference: Mississauga, The Free Dictionary: Mississauga
- ↑ "Mississauga, City Ontario (Census Subdivision)". Census Profile. Statistics Canada. 8 February 2012. 2012-02-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Three large urban areas: the Montreal and Vancouver CMAs and the Greater Golden Horseshoe". Statistics Canada, 2006 Census of Population. 13 March 2007. 2007-03-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-03-22 அன்று பார்க்கப்பட்டது.
Mississauga (668,549), a suburb of Toronto...
- ↑ "Downtown21 Master Plan" (PDF). City of Mississauga. April 2010. 2013-04-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mississauga City Centre Urban Growth Centre". Government of Ontario. 2 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 ஏப்ரல் 2013 அன்று பார்க்கப்பட்டது.