ஒ.ச.நே - 05:00
(ஒசநே−05:00 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒ.ச.நே - 05:00 (UTC-05:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -05:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
கீழை சீர் நேரம்
தொகுஇது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.[1] இவை கோடைகாலத்தின்போது ஒ.ச.நே - 04:00 (கீழை பகலொளி நேரம்) ஐ பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தும்.[2]
- கனடா
- நூனவுட்
- ஒன்டாரியோவின் பெரும்பான்மையான பகுதிகள் மற்றும்
- கியூபெக்கின் பெரும்பான்மையான பகுதிகள்
- அமெரிக்க ஐக்கிய நாடு
- கனெடிகட்
- டெலவெயர்
- வாசிங்டன், டி. சி.
- ஜோர்ஜியா
- மேய்ன்
- மேரிலாந்து
- மாசச்சூசெட்ஸ்
- நியூ ஹாம்சயர்
- நியூ செர்சி
- நியூ யோர்க்
- வட கரொலைனா
- ஒகையோ
- பென்சில்வேனியா
- ரோட் தீவு
- தென் கரொலைனா
- வெர்மான்ட்
- வர்ஜீனியா
- மேற்கு வர்ஜீனியா
- புளோரிடாவின் பெரும்பான்மையான பகுதிகள்
- இந்தியானாவின் பெரும்பான்மையான பகுதிகள்
- மிச்சிகனின் பெரும்பான்மையான பகுதிகள்
- அலபாமாவின் ரசல் மற்றும் பீனிக்சு நகர மாவட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் பயன்படுத்துகின்றன.
மத்திய பகலொளி நேரம்
தொகுஇது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதிகளின் பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] இப்பகுதிகளின் குளிர்காலத்தில் ஒ.ச.நே - 06:00 (மத்திய சீர் நேரம்) சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
- கனடா
- மானிட்டோபா
- நூனவுட் (மத்திய பகுதிகள்)
- ஒன்டாரியோ (மேற்குப் பகுதிகள்)
- அமெரிக்க ஐக்கிய நாடு
- அலபாமா
- ஆர்கன்சஸ்
- இலினொய்
- அயோவா
- லூசியானா
- மினசோட்டா
- மிசிசிப்பி
- மிசூரி
- ஓக்லகோமா
- விஸ்கொன்சின்
- கேன்சாசின் பெரும்பான்மையான பகுதிகள்
- நெப்ராஸ்காவின் பெரும்பான்மையான பகுதிகள்
- வடக்கு டகோட்டாவின் பெரும்பான்மையான பகுதிகள்
- தெற்கு டகோட்டாவின் பெரும்பான்மையான பகுதிகள்
- டென்னிசியின் பெரும்பான்மையான பகுதிகள்
- டெக்சசின் பெரும்பான்மையான பகுதிகள்
- புளோரிடாவின் மேற்குப் பகுதிகள்
- இந்தியானாவின் மேற்குப் பகுதிகள்
- கென்டக்கியின் மேற்குப் பகுதிகள்
- மிச்சிகனின் மேற்குப் பகுதிகள்
- மெக்சிக்கோ
- பெரும்பாலான மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் (கிந்தானா ரோ மாநிலம் தவிர)
சீர் நேரம் (ஆண்டு முழுவதும்)
தொகுபின்வகும் பகுதிகள் ஒ.ச.நே - 05:00 ஐ சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்துகின்றன.
- கனடா
- தென்னாம்ப்டன் தீவுகள் மட்டும்
- கரிபியன்
- மெக்சிக்கோ
- கிந்தானா ரோ மாநிலம்
- மத்திய மற்றும் தென் அமெரிக்கா
- பனாமா
- கொலொம்பியா[6]
- எக்குவடோர் (கலாபகசுத் தீவுகள் தவிர)[7]
- பெரு[8]
- பிரேசில்
- ஆக்ரி (மாநிலம்)[9]
- அமேசோனாசு மாநிலத்தின் தென்மேற்கு பகுதி
- சிலி