மிட்டாய் தெரு

 

மிட்டாய் தெரு
മിഠായി തെരുവ് (மலையாளம்)
மிட்டாய் தெருவினை நோக்கி எஸ். கே. பொட்டெக்கட் சிலை
நீளம்:1.3 mi (2.1 km)
அமைவிடம்:கோழிக்கோடு, கேரளா, இந்தியா

எசு. எம். தெரு (S. M. Street) என்பது சுவீட்மீட் தெரு என்பதன் சுருக்கம் ஆகும். இது மிட்டாய் தெரு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கடைவீதி இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது. இது நடைபாதை கடைகள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும். இங்குள்ள பெரு வணிக நிறுவனங்களுக்கு மத்தியில் 160 ஆண்டுகள் பழமையான நெருப்புக் கோயிலும் உள்ளது.

வரலாறு

தொகு

மிட்டாய் தெருவின் வரலாறு ஜாமோரின் காலத்திலிருந்து தொடங்குகிறது. அப்போது ஆட்சியாளர் குசராத்தி இனிப்பு தயாரிப்பாளர்களை நகரத்தில் கடை அமைக்க அழைத்தார். இவர்கள் அரண்மனை சுவர்களுக்கு வெளியே கடைகள் அமைக்க இடமளிக்கப்பட்டது.[1]

பெயர் பற்றி

தொகு

இனிப்பு மிட்டாய் மற்றும் அல்வா கடைகள் வரிசையாக இருந்த காலத்திலிருந்து இத்தெரு இப்பெயரைப் பெற்றது. இதன் மலையாளப் பெயர் மிட்டாய் தெருவு .

புதுப்பித்தல்

தொகு

மே 2017-இல், கட்டம் 1 தெருவை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 3.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக மேல்நிலை மின்கம்பிகள் அகற்றப்பட்டு தெருவின் ஓரங்களில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன.[2] 23 திசம்பர் 2017 சனிக்கிழமை அன்று கோழிக்கோட்டில் புதுப்பிக்கப்பட்ட எசு. எம். தெருவை முதலமைச்சர் பினராயி விஜயன் முறைப்படி திறந்து வைத்தார்.[3]

கலாச்சாரத்தில்

தொகு

எசு. எம். தெருவானது கேரள சாகித்திய அகாதமி விருது பெற்ற எஸ். கே. பொட்டெக்கட்டின் ஒரு தெருவின் கதை என்ற புத்தகத்தின் மையப் பொருளாகும். எஸ். கே. பொட்டேக்காட்டின் சிலை இத்தெருவை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

பட தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்டாய்_தெரு&oldid=3891799" இலிருந்து மீள்விக்கப்பட்டது