மிதவை
மிதவைதொகு
கடல், ஆறு முதலியவற்றில் கப்பலிலோ, படகிலோ செல்லும்போது விபத்துகளைத் தவிர்க்க ஆபத்தான இடங்கள், பாறைகள், மற்றும் ஆழம் குறைந்த பகுதிகளைக் காட்டுவதற்கு பயன்படும் சாதனமே மிதவை(Buoy) ஆகும்.
மிதவைகளின் வடிவம்தொகு
மிதவைகள் பொதுவாக கூம்பு வடிவிலும் உருளை வடிவிலும் இருக்கும்.
மிதவைகளின் நிறம்தொகு
பாறைகள் இருக்குமிடம், ஆழம் குறைந்த இடம், மிக ஆபத்தான இடம், செல்ல வேண்டிய திசை போன்ற பலவற்றைக் குறிக்க மிதவைகளில் வெவ்வேறு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். குறுக்காகவோ நெடுக்காகவோ பட்டை தீட்டுவதும் உண்டு. எண்களையும் குறிப்பிட்டிருப்பார்கள்.
மிதவைகளில் விளக்குகள்தொகு
சில மிதவைகளில் விளக்குகள் இருக்கும். இரவு நேரங்களில் இவை பயன்படுகின்றன. மிதவையினுள்ளேயே அழுத்தநிலையில் வைக்கப்பட்டிருக்கும் வாயு இந்த விளக்குக்கு எரிபொருளாகப் பயன்படுகின்றது. மின்கலத்தின் மூலம் எரியும் மின்சார விளக்குகளும் சில மிதவைகளில் உண்டு. விளக்கு ஒளியின் நிறமும் அதன் அளவும் இடத்திற்கு ஏற்றவகையில் மாறுபடும். இவ்வாறு மிதவைகளின் மூலம் அவை குறிக்கும் செய்தியை மாலுமிகளுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இத்தகைய மிதவைகளை ஒருவகை கலங்கரை விளக்கம் என்றே சொல்லலாம்.
மிதவைகளில் ஒலிதொகு
மணியோசை தொடர்ந்து கேட்கும் மிதவைகளும், ஊதல் ஒலி உண்டாக்கும் மிதவைகளும் உண்டு. பனி மூடியுள்ள பகுதிகளில் விளக்கு ஒளி சரியாகத் தெரிவதில்லை. அத்தகைய இடங்களில் மணியோசையாலோ, ஊதல் ஒலியாலோ எச்சரிக்கை செய்கின்றன.
மேற்கோள்கள்தொகு
- "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
வெளி இணைப்புகள்தொகு
- https://web.archive.org/web/20101010154115/http://www.jcommops.org/dbcp/network/maps.html
- http://www.cgate.co.il/eng/Seamanship/tafrit.htm பரணிடப்பட்டது 2013-01-24 at the வந்தவழி இயந்திரம்
- https://web.archive.org/web/20090907100035/http://buoyalerts.com/
- http://www.star.nesdis.noaa.gov/sod/sst/iquam/ பரணிடப்பட்டது 2012-10-06 at the வந்தவழி இயந்திரம்
- http://www.telemisura.it/ பரணிடப்பட்டது 2018-12-26 at the வந்தவழி இயந்திரம்
- https://www.youtube.com/watch?v=AqhV0p6Q3NI
- https://www.buoy.org/ பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம்