மித்தி அணை (Mitti Dam) என்பது இந்தியாவின் குசராத்தின் கச்சு மாவட்டத்தில் உள்ள அப்தாசா வட்டத்தில் மித்தி ஆற்றின் மீது கட்டப்பட்ட பைஞ்சுதை மற்றும் மண் அணையாகும். மித்தி ஆறு ஒரு இடைப்பட்ட நீரோடை ஆகும்.[1] இது 468.78 சதுர கிலோமீட்டர்கள் (115,840 ஏக்கர்கள்) நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது. இந்த அணை திராம்பாவ் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[2] 1983 ஆண்டு இந்த அணைக் கட்டி முடிக்கப்பட்டது.[3] அணையின் நீளம் 4405 மீட்டர் ஆகும்.[3] இதன் மொத்த கொள்ளளவு 17.40 மில்லியன் கன மீட்டர் ஆகும். அணையில் 14.72 மில்லியன் கன மீட்டர் நீரைத் தேக்க இயலும்.[2]

மித்தி அணை
புவியியல் ஆள்கூற்று23°20′16″N 68°49′50″E / 23.33778°N 68.83056°E / 23.33778; 68.83056

மேற்கோள்கள் தொகு

  1. Lakhpat, India, Sheet NF 42-2 (topographic map, scale 1:250,000), Series U-502, United States Army Map Service, July 1956
  2. 2.0 2.1 Jain, S. Sharad Kumar; Agarwal, Pushpendra K.; Singh, V. Vijay P. (2007). Hydrology and Water Resources of India. Dordrecht, Netherlands: Springer Verlag. பக். 750. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-5179-1. 
  3. 3.0 3.1 "Mitti D02052". India-WRIS (Water Resources Information System of India). Archived from the original on 5 June 2013.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்தி_அணை&oldid=3800420" இலிருந்து மீள்விக்கப்பட்டது