மினுவாங்கொடை

இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

மினுவாங்கொடை (Minuwangoda, சிங்களம்: මිනුවන්ගොඩ) இலங்கையில் கம்பகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது கம்பகா நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது.[1] இது இலங்கையின் மேல் மாகாணத்தில் நீர்கொழும்பிற்குக் கிழக்கே 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தூரத்திலும் கொழும்பிற்கு வடகிழக்கே 15 கிலோமீட்டர்கள் (9.3 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. இது நீர்கொழும்பிலிருந்து வெயாங்கொடை, நித்தம்புவை வழியாகச் செல்லும் கண்டி வீதியை கொழும்பில் இருந்து குருநாகல் செல்லும் ஏ1 / ஏ6 பிரதான வீதியுடன் இணைக்கும் முக்கிய சந்தி நகரமாகும். கொழும்பில் இருந்து குருநாகல் செல்லும் பிரதான பேருந்து "வழித்தடம் 5" இந்நகரின் ஊடாகச் செல்கிறது. இந்த நகரம் நீர்கொழும்பு செல்லும் வழியில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

மினுவாங்கொடை
මිනුවන්ගොඩ
Minuwangoda
நகரம்
மினுவாங்கொடை is located in இலங்கை
மினுவாங்கொடை
மினுவாங்கொடை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°10′24″N 79°57′43″E / 7.17333°N 79.96194°E / 7.17333; 79.96194
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கம்பகா
மக்கள்தொகை
 • மொத்தம்178,401
Postal code11550
தொலைபேசி குறியீடு011
இணையதளம்www.minuwangoda.ds.gov.lk www.minuwangodacity.com

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினுவாங்கொடை&oldid=3821718" இலிருந்து மீள்விக்கப்பட்டது