மின்கூறு
Resistor's
மின்சுற்றில் பயன்படும் எந்தவொரு தனிப் பொருளும் மின்கூறாகும். மின்கூறுகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உடையதாகும். இம்முனைகள் மின்சுற்றுப் பலகையோடு இவற்றை பொருத்தி, ஒரு முழுமையான மின்சுற்றை ஏற்படுத்த உதவுகின்றன. மின்சுற்றின் செயல்பாட்டை அறிய உதவும் கணித-மாதிரிகளே மின்னுறுப்புகளாகும்.
சில மின்கூறுகள்,
- திறன்-மின்தடை (Power Resistor)
- மாறுமின்தடை (Potentiometer)
- வெப்பமாறுமின்தடை (Thermistor)
- ஈரப்பதமாறு-மின்தடை (Humistor)
- மின்பகுளி-மின்தேக்கி(Electrolytic Capacitor)
- சுட்டாங்கல்-மின்தேக்கி(Ceramic Capacitor)
- இருமுனையம் (Diode)
- தொகுப்புச்சுற்றுக்கள் (Integrated Circuits)