வெப்பமாறுமின்தடை

வெப்பமாறுமின்தடை (Thermistor) ஒரு வகையான மின்தடையம். இதன் மின்தடை வெப்பத்தின் அளவைப் பொறுத்து மாறுகின்றது. இது மின்தடை வெப்பமானியிலிருந்து மாறுபட்டது. இது செராமிக், பாலிமர் போன்ற பொருள்களால் செய்யப்படுகின்றது. மின்தடை வெப்பமானி உலோகத்தினால் செய்யப்படுகின்றது. இது அதிகபட்ச துல்லியத்துடன் -90 முதல் 130டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அளவிட பயன்படுகின்றது.

வெப்பமாறுமின்தடை
NTC bead.jpg
எதிர்மறை வெப்பநிலைக் குணகத் தெர்முஸ்டர்
வகைPassive
செயல் கோட்பாடுமின்தடை
இலத்திரனியல் குறியீடு
Thermistor.svg
தெர்மிஸ்டர் குறியீடு

அடிப்படை இயக்கம்Edit

மின்தடைக்கும் வெப்பத்திற்கும் இடையே நேரியல் தொடர்புள்ளது என்று எடுத்துக்கொண்டால்:

  இதில்,
  -மாறும் மின்தடை
  -மாறும் வெப்பநிலை
  -மின்தடையின் முதல்-நிலை வெப்பநிலை குணகம்.

 - யைப் பொறுத்து தெர்மிஸ்டரை இருவகைப்படுத்தலாம்:

நேர்மறை வெப்பநிலைக் குணகத் தெர்மிஸ்டர் அல்லது பொசிஸ்டர்

  நேர்மறையெனில், வெப்பம் அதிகரிக்கும்பொழுது மின் தடையின் தடையின் அளவும் அதிகரிக்கும்; இப்பொழுது தெர்மிஸ்டரானது, நேர்மறை வெப்பநிலைக் குணகத் தெர்மிஸ்டர் (அல்லது) பொசிஸ்டர் (Positive temperature co-efficient thermistor) என்றழைக்கப்படும்.

எதிர்மறை வெப்பநிலைக் குணகத் தெர்மிஸ்டர்

  எதிர்மறையெனில் வெப்பம் அதிகரிக்கும்பொழுது மின் தடையின் தடையின் அளவு குறையும் அது எதிர்மறை வெப்பநிலைக் குணகத் தெர்மிஸ்டர் (Negative temperature co-effiencet thermistor) என்றழைக்கப்படும்.

பயன்பாடுகள்Edit

  1. "நேர்மறை வெப்பநிலை குணக வெப்பமாறுமின்தடையானது" (PTC) மின்னோட்ட கட்டுப்பாடு சாதனமாக மின்னியல் சுற்றுக்களில் மின்னுருகிகளுக்கு ('Fuses')பதிலாக பயன்படுகின்றது. 'PTC'ன் வழியே செல்லும் மின்னோட்டம் வெப்பத்தினை உருவாக்குகிறது. எப்பொழுது மின்னோட்டத்தின் அளவு அதிகரிக்கிறதோ அப்பொழுது வெப்பநிலையின் அளவும் அதிகரிப்பதால் மின்தடையின்('Resistor') அளவும் அதிகரித்து, தன்வழியே செல்லும் மின்னோட்டத்தினை கட்டுப்படுத்துகிறது.
  2. "எதிர்மறை வெப்பநிலை குணக வெப்பமாறுமின்தடையானது" (NTC) மின்சப்ளை சுற்றுக்களை துவக்கும்போது ('SWITCH-ON') அதனில் பாயும் உள்ளீட்டுப் பாய்ச்சல் மின்னோட்டத்தினை கட்டுப்படுத்தும் சாதனமாக பயன்படுகின்றது. எந்தவொரு மின்சுற்றுக்களிலும் பாயும் ஆரம்பகட்ட மின்னோட்டத்தின் பாய்ச்சல் அளவு வழக்கத்தை விட சிறிது அதிகமாக இருக்கும். அதனை கட்டுப்படுத்த 'NTC' வெப்பமாறுமின்தடை பயன்படுகின்றது.

('NTC') தெர்மிஸ்டர் முதலில் உயர்மின்தடையினை மின்சுற்றுக்களை துவக்கும்போது ('SWITCH-ON) ஏற்படுத்துகின்றது, எனவே ஆரம்பகட்டத்தில் பாயும் உள்ளீட்டுப் பாய்ச்சல் மின்னோட்டத்தினை கட்டுப்படுத்திகிறது. பின்பு ('NTC') தெர்மிஸ்டர் ன் வெப்பநிலை மெதுவாக அதிகரிப்பதால் மின்தடையின் அளவு குறைந்து, அதிக அளவிலான மின்னோட்டத்தினை தன்வழியே பாய அனுமதிக்கின்றது. மற்ற வெப்பமாறுமின்தடைகளை விட இந்த வகை வெப்பமாறுமின்தடைகள் வழக்கத்தினை விட அளவில் பெரியதாக இருக்கும்.

வரலாறுEdit

மைக்கேல் பரடே, 1833ல் "NTC" தெர்மிஸ்டரை கண்டுபிடித்தார். அவரே வெள்ளி சல்பைடின் வெப்பநிலை அதிகரிக்கும்பொழுதும் அதன் மின்தடையின் தன்மையும் அதிகரிக்கிறது என்பதை முதலில் பதிவுசெய்தார்.

1930 வரை தெர்மிஸ்டரின் உற்பத்தி கடினமாக இருந்ததால் அதன் பயன்பாடும் கட்டுபாட்டுக்குள் இருந்தது. பின்பு 1930ல் சாமுவேல்ரூபேன் வணிக ரீதியிலான தெர்மிஸ்டர் உற்பத்தியை கண்டுபிடித்தார்.

மேலும் பார்க்கEdit

புற இணைப்புகள்Edit

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thermistors
என்பதின் ஊடகங்கள் உள்ளன.