மின்நுண்புழைத்தன்மை
மின்நுண்புழைத்தன்மை (Electrocapillarity) அல்லது மின்நுண்புழையேற்ற நிகழ்வுகள் (Electrocapillary phenomena) என்பது எந்த ஒரு மின்வாயிலும் ஏற்படும் மின்வாய் அழுத்த மாறுபாடு அல்லது மின்பகுளிக் கரைசலின் இயைபு அல்லது செறிவில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் அல்லது சொட்டும் பாதரச மின்முனையின் மேற்பரப்பு ஆற்றல் அல்லது மேற்பரப்பு இழுவிசையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். மின்நுண்புழைத்தன்மை என்ற சொல் பாதரச மின்வாயில் பரப்பு இழுவிசை காரணமாக ஏற்படும் மாற்றத்தை பாதரசத்தின் நுண்புழை நுழைவை வைத்து விவரிக்கப் பயன்படுகிற முறையைக் குறிக்கிறது. இந்த நிகழ்வானது, மின் இரட்டை அடுக்கின் கட்டமைப்பின் மாதிரிகளைப் புரிந்துகொள்வதற்கும் சரிபார்ப்பதற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பாகும். நிகழ்வுகள் மின்வினைவேகவியல் மற்றும் கூழ்ம வேதியியல் நிகழ்வுகளுடன் தொடர்புடையவை ஆகும்.
மேற்பரப்பு இழுவிசை
தொகுபரப்பு இழுவிசையை (டைன் செ.மீ -1 ), நுண்புழை உயர்வு முறையின் சமன்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் கணக்கிடலாம் (தொடர்பு கோணம் Ө → 0 எனும் போது):
- h (செ.மீ) என்பது நுண்புழைக் குழாயில் பாதரசத்தம்பத்தின் உயரம்
- r (செ.மீ) என்பது நுண்புழை ஆரம்
- g என்பது ஈர்ப்பு காரணமான முடுக்கம் ஆகும்.
- d (g cm −3 ) என்பது பாதரசத்தின் அடர்த்தி
மின்சுற்றானது பாதரச மின்வாயை நல்லியல்பு முனைவுத்தன்மை கொண்ட மின்வாயாகவும் மற்றும் முனைவுறுத்தலுக்கு உட்படாத மின்வாயை குறியீட்டு மின்வாயாகவும் கொண்டுள்ளது. இதன் காரணமாக வெளியிலிருந்து மின்னழுத்தம் செலுத்தப்படும் போது பாதரசம்/கரைசலின் திரவ இடைமுகமானது மாற்றப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- Modern Electrochemistry, Volume 2, J.O'M. Bockris and A.K.N. Reddy, Plenum/Rosetta Edition, 2000.
- Theoretical Electrochemistry, L.I. Antropov, English Edition, Mir Publishers, Moscow.