மின்னல் தீபா
தமிழ் திரைப்பட நடிகை
மின்னல் தீபா என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.
மின்னல் தீபா | |
---|---|
பிறப்பு | தீபா 20 ஜனவரி1985 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை, வடிவழகி |
வாழ்க்கைத் துணை | ரமேஷ் (2013 வரை) சுப்பிரமணி (2020-தற்போது) [1] |
இவர் 2000 ஆம் ஆண்டு சூர்யபிரகாஷ் இயக்கிய மாயி திரைப்படத்தில் நடித்தார். அதில் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை காட்சியில் மின்னல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதனால் மின்னல் தீபா என்று அறியப்படுகிறார்.
வாழ்க்கை வரலாறு
தொகுநடிகை தீபா பாபா பாஸ்கர் மாஸ்டரிடம் உதவியாளராக பணிசெய்த குட்டி ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். 24 ஆகஸ்ட் 2020 இல் சுப்பிரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[2]
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி தொடரில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.