மின்னிதழ்
மின்னிதழ் அல்லது இணைய இதழ் (ஆங்கில மொழி: online magazine) என்பது இணையத்தில் வெளிவரும் இதழ்களைக் குறிக்கிறது.[1][2] மின் + இதழ் என்பது மின்னிதழ் எனப் பெயர் பெற்றது. இது இணையப்பக்கமாகவோ இணையக் கோப்பாகவோ புரட்டும் புத்தகமாகவோ பொதுவாக வெளிவருகிறது. 2000களில் அச்சில் வந்த இதழ்கள் இணையத்தில் வெளிவரத் தொடங்கின.[3] இணையத்தில் மட்டுமே இயக்கும் இதழ்களும் 2010கள் வாக்கில் உருவாகின. பலரது படைப்புகளை ஒருங்கே இணைத்து குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து இற்றை செய்யப்படுவது மின்னிதழ்களின் அடிப்படை பண்பாகும்.
வகைகள்
தொகுஅச்சு இதழ்களைப் போல வெளியீட்டு இடைவெளியின் அடிப்படையில் வார மின்னிதழ், மாத மின்னிதழ், காலாண்டு மின்னிதழ் என்று வகைப்படுத்தலாம். வெளியீடுகள் அடிப்படையில் அச்சு வடிவில் வந்தவற்றை இணையத்தில் வெளியிடும் இதழ்கள், இணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.[4] ஆய்விதழ்கள், கலை இலக்கிய இதழ்கள் மற்றும் பல்சுவை மின்னிதழ்கள் என்று உள்ளடக்கத்தின் அடைப்படையில் பிரிக்கலாம்.[5]
தமிழில் உள்ள சில மின்னிதழ்கள்
தொகு- உலகத்தமிழ்
- சொல்வயல்
- திண்ணை
- அரண்
- முத்துக்கமலம்
- ஆறாம்திணை
- சிறகு
- வல்லமை
- இனம்
- புலம்
- நாகூர்ப் புராணம்
- தமிழறிவு மின்னிதழ்
இவற்றையும் பார்க்கலாம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ஆண்டோபீட்டர், மா. தமிழும் கணிப்பொறியும் (2002 ed.). கற்பகம் புத்தகாலயம்.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் (முதல் ed.). முனவைர் துரை மணிகண்டன்.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Carr, David (2005-02-10). "The Founder of Salon Is Passing the Mouse" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 2021-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210126121221/https://www.nytimes.com/2005/02/10/books/the-founder-of-salon-is-passing-the-mouse.html.
- ↑ இல, சுந்தரம். கணினித் தமிழ் (முதல் ed.). விகடன். p. 257.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ "5வது சுரண்டை மின்னிதழ் எழுதுங்கள்!". வலைத்தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 December 2023.