மின்னும் உலோகம்
மின்னும் உலோகம் (Gilding metal) என்பது தாமிரத்தின் ஒரு உலோகக் கலவையாகும். 95% தாமிரமும் 5% துத்தநாகமும் சேர்ந்து இக்கலப்புலோகம் உருவாகிறது[1]. 8 பகுதிகள் தாமிரமும் 1 பகுதி துத்தநாகமும் சேர்ந்து உருவாகும் கலப்புலோகமே மின்னும் உலோகம் என்று பிரித்தானிய இராணுவ சீருடை ஒழுங்குமுறை விதிகள் வரையறை செய்கிறது[2].
தோட்டா, ஓட்டுநர் பட்டைகள், பீரங்கி குண்டு[3] , பதக்கங்கள் மற்றும் அணிகலன்கள் முதலானவற்றில் மேற்பூச்சாக மின்னும் உலோகம் பயன்படுகிறது. சுத்தியலால் மெல்லிய தகடுகளாக மாற்றி உலோகக் கைவினைப் பொருட்கள் செய்வதில் பரவலாக மின்னும் உலோகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வெள்ளிக் கொல்லர்களுக்கு குறைந்த விலையிலான பயிற்சிப் பொருளாக இக்கலப்புலோகம் பயனாகிறது.
427 முதல் 788 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் மின்னும் உலோகத்தைப் பதப்படுத்த முடியும். பின்னர் மெல்ல குளிர்வித்து விரிசலடைவதை தவிர்க்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Untracht, Oppi (1968). Metal Techniques for Craftsmen. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7091-0723-4.
- ↑ War Office (1904) Dress Regulations for the Officers of the Army (Including the Militia). London: HMSO. p. 4
- ↑ "105mm Advanced Cannon Artillery Ammunition Program (ACA2P)". Archived from the original on 7 Mar 2007.