மின்வழி நிதிமாற்று விற்பனை முனை

மின்னணு பணப்பரிவர்த்தனை சாதனங்களுள் ஒன்று

மின்வழி நிதிமாற்று விற்பனை முனை (EFTPOS, உச்சரிப்பு: /ˈɛftpɒs/, ஈஎப்டிபிஓஎசு) — விற்பனை முனையில் மின்வழி நிதி மாற்றம் — என்பது விற்பனை முனையொன்றில் அமைந்துள்ள கணிமுனையங்களின் வழியே பற்று அல்லது கடன் அட்டைகளைக் கொண்டு மின்வழி நிதி மாற்றுகை அமைப்பைப் பயன்படுத்திக் கட்டணம் கட்டுகின்ற முறைமையாகும். [1] 1981ஆம் ஆண்டில் இந்த முறைமை அமெரிக்க நாட்டில் செயற்படுத்தப்பட்டது; விரைவிலேயே மற்ற நாடுகளும் இதனைப் பின்பற்றின.

பற்று அட்டைகளும் கடனட்டைகளும் நெகிழியாலான அட்டைகளில் ISO/IEC 7810 ID-1 சீர்தரத்தின்படி பொறிக்கப்படுகின்றன. மேலும் ISO/IEC 7812 சீர்தரத்தை ஒட்டிய வங்கி அட்டை எண் இவைகளில் பொறிக்கப்படுகின்றன.

குறிப்புகள் தொகு

  1. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் ஈஎப்டிபிஓஎசு என்பது அத்தகைய வழங்கல்களுக்கான குறிப்பிட்ட வணிகப் பெயராகும். இவை அந்த நாடுகளுக்கு மட்டுமே யானவை; மற்ற நாடுகளுடன் இணைக்கப்படவில்லை.