பற்று அட்டை

ஒரு பற்று அட்டை (இதனை வங்கி அட்டை அல்லது காசோலை அட்டை என்றும் கூறுகின்றனர்) என்பது ஒரு பிளாஸ்டிக் அட்டை. கொள்முதலின்போது ரொக்கம் அல்லது வேறு வழியில் அதன் விலையைச் செலுத்தும் ஒரு மாற்றும் முறைமையை இது அளிக்கிறது. இதன் செயல்பாட்டின்வழி உரைப்பதானால், இதனை ஒரு மின்னணுக் காசோலை எனக் கூறலாம். காரணம், பணமானது நேரடியாக வங்கிக் கணக்கு அல்லது அந்த அட்டையில் விஞ்சியிருக்கும் நிதி ஆகியவற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படுகிறது. சில வேளைகளில், இணையப் பயன்பாட்டிற்கு என்றே பிரத்தியேகமாக அட்டைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இயற்பொருள் சார்ந்த அட்டை என்று ஒன்று இருப்பதில்லை.[1][2]

பல நாடுகளில் இவ்வாறான பற்று அட்டை பரவலாகப் பயன்படுகிறது. இது காசோலையின் பயன்பாட்டினையும், மற்றும் சில வேளைகளில் அளவீடு ரீதியாக, ரொக்கத்தின் பயன்பாட்டினையும் விஞ்சி விட்டது. கடன் அட்டை என்பதைப் போலவே, பற்று அட்டைகளும் தொலை பேசி மற்றும் இணைய வழி கொள்முதல்களுக்காகவே முதன்மையாகப் பயனாகின்றன. ஆயினும், கடன் அட்டைகளில் அவற்றின் அட்டையின் உடைமையாளர் பின்னாளில் பணம் செலுத்த வேண்டியிருப்பதைப் போல அல்லாது, இதில் பணமானது அவரது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பெறப்பட்டு விடுகிறது.

பற்று அட்டைகளைக் கொண்டு உடனடியாகப் பணம் எடுக்கலாம்; மேலும், இவை தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் எனப்படும் ஏடிஎம் அட்டைகளைப் போல பணம் எடுப்பதற்கும், காசோலைகளுக்கு பற்றுறுதி அளிக்கும் அட்டைகளாகவும் விளங்குகின்றன. வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு "பணம் திருப்புதல்" / "பணத்திற்குப் பதில் மாற்று" போன்ற வசதிகளை வழங்கலாம். இந்நிலைகளில் ஒரு வாடிக்கையாளர் தங்களது கொள்முதலுடன் ரொக்கத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

கடனா அல்லது பற்றா?

தொகு

"கடனா அல்லது பற்றா?" இது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு பற்று அட்டையைப் பயன்படுத்துகையில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில், ஒருவர் விற்பனைச் சமயத்தில் "கடன்" அல்லது "பற்று" அட்டை என எதைப் பயன்படுத்தினாலும், அதற்கான பணம் அட்டையின் உடைமையாளரின் காசோலைக் கணக்கிலிருந்தே வரும். இவ்வாறாக இருப்பதனால், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பெரும்பான்மையான நுகர்வோரைப் பொறுத்த வரையில் இந்த இரண்டிற்கும் இடையில் வேறுபாடுகள் ஏதுமில்லை. இருப்பினும், பணம் எப்போதும் அட்டையின் உடைமையாளரின் காசோலைக் கணக்கிலிருந்தே வருவதாயினும், விற்பனை நிகழ்வின்போது "கடன்" அல்லது "பற்று" ஆகிய இரண்டிற்கும் நிச்சயமான ஒரு வேறுபாடு உள்ளது.

ஓர் அட்டையின் உடைமையாளர் "கடன்" என்பதைத் தெரிவு செய்கையில், அந்த வர்த்தக நடவடிக்கையானது "நேரடிக் கணினி முறைமை" அல்லாது செயல்படுகிறது. விற்பனை நிகழ்வின்போது, வர்த்தகர் அங்கீகாரம் பெறுவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ளலாம் அல்லது அவ்வாறு மேற்கொள்ளாதிருக்கலாம். அங்கீகாரம் என்பது வேண்டப்பட்ட பணம் வணிகருக்கு அளிக்கப்பட்டு விடும் என்னும் ஒரு பற்றுறுதியாகும். வழமையான ஒரு பற்று அட்டை வர்த்தக நடவடிக்கையைப் போலவே, வணிகர் தமது அனைத்து பற்று அட்டை நடவடிக்கைகளையும் தீர்வு செய்யாதவரை அட்டையின் உடைமையாளரின் கணக்கிலிருந்து பணம் உண்மையில் பெறப்படுவதில்லை. இருப்பினும், விற்பனை நிகழ்வின்போதே அட்டையின் உடைமையாளரின் கணக்கில் அதற்கான பணமதிப்பு தாக்கலாகி விடுகிறது. வணிகரைப் பொறுத்து இத்தகைய தாக்கலானது, அட்டையின் உடைமையாளரின் கணக்கில் இடப்படுவதற்குச் சில நாட்களாகலாம்.

ஓர் அட்டையின் உடைமையாளர் "பற்று" என்பதைத் தெரிவு செய்கையில் வர்த்தக நடவடிக்கையானது நேரடிக் கணினி முறைமையில் செயல்படுவதாகிறது. இத்தகைய ஒரு நிகழ்வில், அட்டையின் உடைமையாளர் தனது கொள்முதலை ஒரு தனிப்பட்ட அடையாள எண் அதாவது, "பின்" ("PIN") எனப்படும் ஒரு குறியீட்டு எண் கொண்டு அதற்குச் சான்றளிக்கிறார். இதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் இதன் மதிப்பிற்கான பணம் உடனடியாக அட்டையின் உடைமையாளரின் கணக்கிலிருந்து வணிகரின் கணக்கிற்கு மாற்றப்பட்டு விடுகிறது.

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பெரும்பான்மையான நுகர்வோர்கள் "பற்று" அதற்கு எதிராக "கடன்" என்பதற்கு இடையிலான வேறுபாட்டினைப் பொருட்படுத்தாது இருப்பினும், அவற்றிற்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாடுகளை அவர்கள் அறிந்து கொள்ளுதல் அவசியம். அவை அனைத்திலும் தலையானது, "பற்று" என்பதன் கீழான நடவடிக்கைகள், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பூசலுக்கு உட்படலாம். அது பற்று அட்டை அல்லது கடன் அட்டை என எதன் கீழ் பெறப்பட்டிருப்பினும் இவ்வாறு நிகழலாம். பற்று அட்டை மீதான பூசல் என்பது கடன் அட்டை மீதான பூசல் போன்றே செயல்படும். இவ்வாறான பூசல், அட்டையின் உடைமையாளருக்கு ஆதரவாகத் தீர்வு பெறுவரையிலும், அந்த வர்த்தக நடவடிக்கைக்கான பணத் தாக்குதல் அவரது கணக்கில் ஏற்றப்பட்டே இருக்கும். ஒரு பற்று அட்டையின் உடைமையாளரைப் பொறுத்தவரையிலும், பூசல் அவருக்கு ஆதரவாக தீர்வாகும் வரையிலும் பணம் அவர் கணக்கினின்றும் நீங்கியதாகவே கொள்ள வேண்டும். அவ்வாறு, தீர்வாகும்போது பணம் அவருக்குத் திரும்ப வழங்கப்படும். கடன் அட்டையின் உடைமையாளரைப் பொறுத்தவரையிலும், பூசலுக்குட்பட்ட பணத்தை அவர் முன்னரே செலுத்தி விட்டதால், தீர்வாகும் வரையிலும் அவர் பணம் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு அவருக்கு ஆதரவாக தீர்வாகும் பட்சத்தில்தான், தாக்கலுக்கு உட்பட்ட பணம் அவரது கணக்கிலிருந்து அகற்றப்படும் அல்லது அவர் முன்னரே செலுத்தியிருப்பின் அவரது கணக்கில் திரும்ப வைக்கப்படும். இது மிகப் பொதுவானதாகும். இருப்பினும், "பற்று" என்பதன் கீழ் செயற்படுத்திய நடவடிக்கைகள் எதனையும், அவை மோசடி என்றில்லாத வரையினில், பூசலுக்கு உட்படுத்த இயலாது.

பற்று அல்லது கடன் ஆகியவற்றிற்கு இடையிலான பிறிதொரு வேறுபாடு யாதெனில், கடன் அட்டையின் கீழாக நடவடிக்கையைத் தெரிவு செய்கையில், அதனுடனான கட்டணத்தையும் செலுத்த நேரிடும். பல வங்கிகள் தங்களது காசோலைக் கணக்குகள் மற்றும் பற்று அட்டைகள் வழி பெறப்படும் கொள்முதல் மதிப்பிற்கு ஏற்றவாறு வெகுமதிகளை வழங்குகின்றன. இவை பொதுவாக புள்ளிகளின் அடிப்படையில் உள்ளன. உதாரணமாக எக்ஸ் என்பதாக குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலவு செய்திருப்பின், அதற்கு ஏற்றதாக ஒரு அளவினில் ஈட்டும் புள்ளிகளைக் கொண்டு பணம் திரும்பப் பெறுதல், இசை, காப்பி, வானூர்திப் பயண தொலைவுகள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட கால அளவில் பெறலாம். இருப்பினும், இத்தகைய வெகுமதிகள் ஒருவர் பற்று அட்டையின் கீழ் கடன் என்பதைத் தெரிவு செய்யும்போது மட்டுமே கணக்கிடப்படும். பல வங்கிகளும் பற்று அட்டையின் கீழான கடன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சிறு கட்டணத்தை வசூலிக்கின்றன. ஆக, பற்று அட்டையின் மூலம் உங்களுக்கு வெகுமதிப் புள்ளிகள் கிடைக்கையில், வங்கி அதன் மீதான ஒரு கட்டணத்தையும் விதிக்கக் கூடும்.

பற்று அட்டை அமைப்புகளின் வகைகள்

தொகு
 
உருமாதிரியான ஒரு பற்று அட்டையின் முன்புறத்தின் உதாரணம்: வங்கியின் முத்திரையை வழங்குதல், ஈஎம்வி சில்லு ஹாலோகிராம் அட்டை எண், அட்டை வர்த்தகக்குறி முத்திரை, பயனறுதேதி மற்றும் அட்டை உரிமையாளரின் பெயர்.
 
உருமாதிரியான ஒரு பற்று அட்டைப் பின்புறத்தின் உதாரணம்: காந்தத் துண்டு, கையெழுத்து, அட்டைக்கான பாதுகாப்புக் குறியீடு

பற்று அட்டை நடவடிக்கைகள் தற்சமயம் மூன்று வழிகளில் செயல்படுகின்றன: நேரடிக் கணினி பற்று (இதை குறியீட்டுப் பற்று (PIN debit)என்றும் கூறுவதுண்டு), நேரடிக் கணினி அல்லாத பற்று (இதனை கையெழுத்துப் பற்று என்றும் கூறுவதுண்டு) மற்றும் மின்னணு பணப்பை அட்டை அமைப்பு .[3] இயற்பொருளாக உள்ள பற்று அட்டையின் மூலம் நேரடிக் கணினி பற்று அட்டை, நேரடிக் கணினி முறைமை அல்லாத பற்று அட்டை மற்றும் மின்னணு பணப்பை அட்டை ஆகிய நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்பதைக் குறித்துக் கொள்ளல் வேண்டும்.

பல பற்று அட்டைகளும் விசா அல்லது மாஸ்டர் என்னும் வர்த்தகக் குறியீடுகளின் கீழ் இருப்பினும், வேறு பல வகையான பற்று அட்டைகளும் உள்ளன. இவை ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பகுதியில் ஏற்கப்படுவதாக உள்ளன. எடுத்துக் காட்டாக, ஐக்கிய இராச்சிய நாட்டில் சுவிட்சு (தற்போது மாஸ்டிரோ) மற்றும் சோலோ, கனடா நாட்டில் இன்டராக். ஃபிரான்ஸ் நாட்டில் கார்ட்டெ பிளூ, அயர்லாந்து நாட்டில் லேசர், ஜெர்மனி நாட்டில் "ஈசி எலெக்ட்ரானிக் கேஷ்" (இது முன்னர் யூரோசெக் எனப்பட்டது) மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றில் எஃப்ட்போஸ் எனவும் வழங்குகிறது. எல்லை தாண்டிய ஒவ்வுமைக்கான தேவையின் காரணமாகவும் மற்றும் அண்மையில் யூரோ அறிமுகமானதினாலும், இவ்வாறான பல அட்டை வலைப்பின்னல்கள் மறு வர்த்தகக் குறியீடு பெற்று சர்வதேச நாடுகளிலும் அங்கீகாரம் பெறுவதான மாஸ்டிரோ முத்திரை கொண்டுள்ளன. (இவற்றிற்கு உதாரணமாக சுவிட்சர்லாந்து நாட்டின் "ஈசி டிரக்ட்", ஆஸ்திரியாவின் "பாங்கோமாட்காசெ" மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சுவிட்ச் ஆகியவற்றைக் கூறலாம்). இது மாஸ்டர் கார்ட் என்னும் வர்த்தகக் குறியீட்டின் பகுதியாகவே உள்ளது. சில பற்று அட்டைகள் இரு வர்த்தகக் குறியீடுகளைப் பெற்றிருக்கலாம். அதாவது முந்தைய தேசிய முத்திரை மற்றும் மாஸ்டிரோ முத்திரை ஆகிய இரண்டினையுமே அவை கொண்டிருக்கலாம். (எ.கா:ஜெர்மனியின் ஈசி அட்டைகள், அயர்லாந்தின் லேசர் அட்டைகள், ஐக்கிய இராச்சியத்தின் சுவிட்சு மற்றும் சோலோ அட்டைகள், நெதர்லாந்தின் பின்பாஸ் அட்டைகள் மற்றும் பெல்ஜியம் நாட்டின் பாங்காண்டாக்ட் அட்டைகள் ஆகியவை). இவ்வாறு பற்று அட்டைகளைப் பயன்படுத்துவதால், வணிக இயக்காளர்கள் வாடிக்கையாளர்களின் செலவழிக்கும் தன்மையைக் கண்காணித்து தங்களது பொருட்களை மேலும் திறனுற்ற வழிகளில் வெளிப்படுத்த இயல்கிறது. இத்தகைய அமைப்புகளில் ஒன்றின் உதாரணம் எம்பெட் இண்டர்நேஷனல் (Embed International) என்பதாகும்.

நேரடிக் கணினி பற்று அமைப்பு

தொகு

நேரடிக் கணினி முறைமையில் பற்று அட்டைகளுக்கு ஒவ்வொரு வர்த்தக நடவடிக்கைக்கும் மின்னணு முறையிலான அங்கீகாரம் தேவைப்படும். இந்த முறைமையில், பற்றுக்கள் உடனடியாக பயனரின் கணக்கில் ஏற்றப்படும். இந்த வர்த்தக நடவடிக்கை கூடுதலாக தனிப்பட்ட அடையாள எண் (personal identification number (PIN)) வழியாக சான்றளிப்பு பெறும். சில நேரடிக் கணினி முறைமைகளில் ஒவ்வொரு வர்த்தக நடவடிக்கைக்கும் இவ்வாறான சான்று தேவைப்படும். முக்கியமாக, அதிகரித்த தானியங்கி முறைமையில் பணம் வழங்கும் இயந்திரம் தொடர்பான ஏடிஎம் அட்டைகளுக்கு இது அவசியம். நேரடிக் கணினி முறைமையில் பற்று அட்டைகளைப் பயன்படுத்துவதில் ஒரு சிரமம் என்னவென்றால், விற்பனை முனைமை மின்னணு இயந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும். சில சமயங்களில் தனிப்பட்ட ஒரு பின் அட்டையும் (PINpad) தேவைப்படலாம். இதில் பின் எண்ணைச் செலுத்த வேண்டியிருக்கும். எனினும், பல நாடுகளிலும் அட்டை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் இது பொதுவானதாகவே உள்ளது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், நேரடிக் கணினி முறைமையிலான பற்று அட்டை, நேரடிக் கணினி முறைமையில் அல்லாத பற்று அட்டையை விடச் சிறந்ததாகவே காணப்படுகிறது. காரணம், இதன் சான்றளிப்பு அமைப்பு பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், நேரடி முறைமையில் இது அமைந்திருப்பதுமேயாகும். செயற்பாட்டு தாமதம் விளைவது மட்டுமே நேரடி கணினி முறைமையிலான பற்று அட்டைகளின் ஒரே பிரச்சினையாக இருக்கலாம்.

நேரடிக் கணினி வழி பற்று அமைப்பு

தொகு

நேரடிக் கணினி வழி அற்ற பற்று அட்டைகள் பெரும் வணிக முத்திரைகள் கொண்டிருக்கும் (எ.கா: ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற நாடுகளில் விசா அல்லது மாஸ்டர்கார்ட் அல்லது மாஸ்டிரோ போன்ற பெரும் வணிக முத்திரைகள். ஆனால், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இவ்வாறு இருப்பதில்லை. இவை விற்பனை முனைமையில் கடன் அட்டையைப் போன்று (செலுத்துனரின் கையெழுத்தோடு) பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பற்று அட்டைகள் ஒரு தினசரி வரம்பிற்கு உட்பட்டு இருக்கலாம். இந்த வரம்பானது அது ஏற்றப்பட்ட பின்னர் நடப்புக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கில் விஞ்சியிருக்கும் தொகையைப் பொறுத்து அமையலாம். இவ்வாறு நேரடிக் கணினி வழி அல்லாத வர்த்தக நடவடிக்கைகள் இவை தொடர்பான கணக்கில் ஏற்றப்படுவதற்கு இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை பிடிக்கலாம். சில நாடுகளில் சில வங்கிகள் மற்றும் வர்த்தக சேவை நிறுவனங்கள் கொள்முதல் செய்பவருக்கு எந்தக் கட்டணமும் இல்லாத வகையில், அத்தகைய வர்த்தக நடவடிக்கையின் தோற்ற மதிப்பிற்கு மேற்பட்ட ஒரு "கடன்" அல்லது நேரடிக் கணினி வழி அல்லாத ஒரு பற்று நடவடிக்கை மேற்கொள்கின்றன. "பற்று" அல்லது நேரடிக் கணினி வழி பற்று நடவடிக்கைக்கு ஒரு சிறு கட்டணம் விதிக்கப்படலாம் (பல நேரங்களில் சில்லறை விற்பனையாளரே இத்தகைய கட்டணத்தையும் தாங்கிக் கொள்பவராகிறார்). பிற வேறுபாடுகளில் இவையும் அடங்கும்: நேரடிக் கணினி வழி கொள்முதலாளர்கள் பற்றுக் கொள்முதல் தொகைக்கு ஈடான அளவில் ரொக்கத்தையும் எடுக்கத் தெரிவு செய்யலாம் (அத்தகைய ஒரு நடவடிக்கைக்கு வர்த்தகரின் ஆதரவு இருக்குமாயின்). மேலும், வணிகரின் கண்ணோட்டத்திலிருந்து (நேரடிக் கணினி வழி அல்லாத) "கடன்" சார்ந்த நடவடிக்கையை விடவும் குறைவான கட்டணத்தையே நேரடிக் கணினி வழி பற்று நடவடிக்கையில் அவர் செலுத்துகிறார்.

மின்னணு பணப்பை அட்டை அமைப்பு

தொகு

ஸ்மார்ட்-கார்ட் என்பது மின்னணு பணப்பை அமைப்பின் அடிப்படையிலானது. (இதில் மதிப்பானது வெளியிலுள்ள ஒரு கணக்கினில் அல்லாது, அட்டையில் சில்லுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அட்டையை ஏற்கும் இயந்திரங்களுக்கு வலைப்பின்னல் அவசியமில்லை). இவை 1990ஆம் ஆண்டுகளின் இடைக் காலம் தொட்டு ஐரோப்பாவெங்கும், குறிப்பாக ஜெர்மனி (ஜெல்ட்கார்ட்டெ), ஆஸ்திரியா (குவிக்), நெதர்லாந்து (சிப்னிப்), பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து (கேஷ்) ஆகிய நாடுகளில், பரவலாக வழங்கி வருகின்றன. ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் நடப்புக் கணக்குகள் அனைத்தும் தற்போது மின்னணு பணப்பையை உட்கொண்டவையாகவே உள்ளன.

முன்னரே பணம் செலுத்திய பற்று அட்டை

தொகு

முன்னரே பணம் செலுத்திய பற்று அட்டைகள் மீள்செலுத்து பற்று அட்டைகள் அல்லது மீள்செலுத்து முன்னரே பணம் செலுத்திய பற்று அட்டைகள் எனவும் வழங்கப்படுகின்றன. மீண்டும் மீண்டும் இருப்பதான பண வழங்கீடுகளுக்கு இப்பெயர் பயன்படுகிறது.[4] பணம் செலுத்துபவர் அட்டையின் உடைமையாளரின் கணக்கில் பணத்தைச் செலுத்தி விடுகிறார். முன்னரே பணம் செலுத்திய பற்று அட்டைகள் நேரடிக் கணினி அல்லாத பற்று அமைப்பு அல்லது நேரடிக் கணினி பற்று அமைப்பு வழியாக இந்த நிதிகளுக்கு அணுகல் கொண்டுள்ளன. குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் மூல தளம் கொண்டுள்ள நிறுவனங்களில் வெளி நாட்டிலிருந்து நிதி பெறுகின்ற பெரும்பாலானவற்றில் முன்னரே பணம் செலுத்திய பற்று அட்டைகளின் மூலம் சர்வதேச நாடுகளிலிருந்து தாமதம் அல்லது சர்வதேச காசோலை அல்லது வங்கிப் பண மாற்றங்கள் தொடர்பான கட்டணம் ஏதுமின்றி பணம் பெற முடிகிறது.[5] இணைய தள அடிப்படையிலான இஸ்டாக்ஃபோட்டோ போன்ற இருப்பு நிலை புகைப்பட வலைத்தளங்கள், புறவழி பணி கொள்ளும் ஓடெஸ்க் போன்றவை மற்றும் இணைப்பு வலைப்பின்னல்களான மீடியாவிஜ் போன்றவை ஆகிய அனைத்துமே முன்னரே செலுத்திய பற்று அட்டைகளைத் தங்களது பங்களிப்போர்/ சார்பிலா பங்களிப்போர்/ வணிகர்கள் ஆகியோருக்கு அளிக்கின்றன.

சாதகங்களும் பாதகங்களும்

தொகு

பற்று மற்றும் காசோலை அட்டைகள் பரவலாக பயன்பாட்டில் உள்ளமையால் அவற்றினால் நுகர்வோர் மற்றும் சில்லறை வணிகருக்கு சாதகங்கள் மட்டுமன்றி பாதகங்களும் நிறைந்தே உள்ளன.

கீழ் வரும் குற்றச்சாட்டுகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் மட்டுமே தற்போது உள்ள நிலைமையின் அடிப்படையிலானவை. அவை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது என்பதால், தயவு செய்து கவனத்துடன் படிக்கவும்.

சாதகங்கள் பின்வருமாறு:

 • கடன் வாங்கும் சக்தியில்லாத, பிற வழிகளில் ஒரு கடன் அட்டை பெற இயலாத நுகர்வோர் மிக எளிதாக ஒரு பற்று அட்டையை வாங்கி அதன் மூலம் பிளாஸ்டிக் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
 • (நேரடிக் கணினி வழி அல்லாத சில வர்த்தக நடவடிக்கைகளை விடுத்து) எந்த வங்கிக் கணக்குடன் தொடர்புற்றுள்ளதோ அந்த வங்கிக் கணக்குடனான பயன்பாட்டினை மட்டுமே பற்று அட்டை கொண்டுள்ளது. இதனால், நுகர்வோர் அட்டையைத் தாறுமாறாகப் பயன்படுத்துவது, அல்லது மிக அதிகமாக வட்டி வசூலிப்பது, தாமதித்த பணம் செலுத்துதல் அல்லது கடன் அட்டைகளுக்கே உரித்தான கட்டணங்கள் ஆகியவை இதில் இருப்பதில்லை.
 • பல நடவடிக்கைகளுக்கும் காசோலை அட்டையின் மூலமாக காசோலை எழுதுவதைத் தவிர்க்க முடியும். காசோலை அட்டைகள் பயனரின் கணக்கில் அப்போதே பற்றினை ஏற்றி விடுகின்றன. இதன் மூலமாக அந்த நடவடிக்கையானது கொள்முதல் சமயத்திலேயே முடிந்து விடுகிறது. இதனால், கடன் அட்டையில் உள்ளதைப் போல பின்னாளில் பணம் கட்டுவதற்கோ அல்லது பயனரின் தனிப்பட்ட தகவல்களுக்கு அணுக்கம் கொண்டிருக்கக் கூடிய பாதுகாப்பற்ற ஒரு காசோலையை எழுதுவதற்கோ தேவை இருப்பதில்லை.
 • கடன் அட்டைகளைப் போல, பற்று அட்டைகளும் வணிகர்களால் ஏற்கப்படுகின்றன. தனிப்பட்ட காசோலைகளை விடக் குறைவான அளவிலேயே இவை சோதனைக்கும், அடையாளத்திற்கும் உள்ளாகின்றன. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் விரைவாகவும், இடையூறு குறைவாகவும் கொண்டு நடைபெற ஏதுவாகிறது. தனிப்பட்ட காசோலைகளைப் போல அல்லாது, பற்று அட்டை மூலமான கொள்முதலுக்கான பணம் பின்னாளில் பெறப்படாது இருக்கக் கூடும் என வணிகர்கள் எண்ணுவதில்லை.
 • பணம் நேரடியாகப் பெறப்படும்போது அதிகக் கட்டணம் மற்றும் வட்டி விகிதங்களை வசூலிக்கும் ஒரு கடன் அட்டையைப் போல அல்லாது, பற்று அட்டையைப் பயன்படுத்தி ஏடிம் அல்லது பின்-அடிப்படையிலான முறைமையில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றிப் பணம் எடுக்கலாம். வெளிநாட்டு ஏடிஎம்மிலிருந்து எடுக்கப்படும் பணத்திற்கு மட்டுமே கட்டணம் உண்டு.

பணம் அல்லது கடன் அட்டையைப் போல் அல்லாது பற்று அட்டை பல பாதகங்களையும் கொண்டுள்ளது:

 • தற்போது, பல வங்கிகளும் இருப்பை மீறிய நிதி வழங்கீடு, முன்னரே அளித்த அங்கீகாரங்கள் காரணமாக தேவையான பணம் இருப்பில் இல்லாதிருத்தல், ஏன், ஏற்கப்பட்டுப் பின்னர் மறுதலிக்கப்பட்ட நிதி நடவடிக்கைகளுக்கும் கூட கட்டணம் விதிக்க முற்பட்டுள்ளன. (இவற்றில் சிலவற்றை வாடிக்கையாளர் அறிந்திருப்பது கூட இல்லை).
 • ஒரு பற்று அட்டை (அல்லது எண்) வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு அளிக்கப்பட்ட பின்னர், அதற்கான தேதி, செலுத்துபவர் பெயர், தொகை மற்றும் நடப்பு நாணயம் ஆகியவை தொடர்பான ஒப்பந்தம் ஏதும் இல்லாது, அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையை "எடுத்துக் கொள்ள" இயலும் எனத் தவறாக நம்புகின்றனர். இதன் காரணமாக, இருப்பை மீறிய பண வழங்கீட்டிற்கான அபராதம், அளவு-மீறியவை, பெற இயலாத தொகைகள் ஆகியவற்றால் மறுதலிப்புகளும், அளவை மீறிய பண வழங்கீடுகளும் உருவாகி சில வங்கிகளால் இவை நிராகரிக்கப்படும் நிலை உண்டாகிறது.
 • சில நாடுகளில், கடன் அட்டைகளை விட பற்று அட்டைகள் குறைவான பாதுகாப்பையே கொண்டுள்ளன[6]. கையெழுத்தின் அடிப்படையிலான கடன் சார்ந்த நடவடிக்கையை விட, குறியீட்டு எண் அடிப்படையிலான பற்று அட்டையில், குறியீட்டு எண்ணைத் திருடும் கருவிகள் கொண்டு மோசடி செய்வது எளிதாக உள்ளது. இருப்பினும், பயனர்களின் குறியீட்டு எண்ணை இவ்வாறு மோசடிக் கருவிகள் கொண்டு திருடுவது என்பது, குறியீட்டு எண் கொண்டுள்ள பற்று அட்டைகளைப் போலவே குறியீட்டு எண் கொண்டுள்ள கடன் அட்டைகளிலும் நடக்கக் கூடும். கையெழுத்தின் அடிப்படையிலான அட்டைகளில் இவ்வாறு திருட்டு மோசடி செய்வதும் எளிதானதே.
 • பல இடங்களில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் கடன் அட்டைக்கு உள்ள அளவு கிடைக்கப் பெறுவதில்லை. கடன் அட்டை வைத்திருப்பவர், அந்த அட்டையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட மோசடி பரிவர்த்தனைகளில் மிகக் குறைந்த பட்ச அளவிற்கே பொறுப்பாவார். இதனைப் பல நேரங்களில் வங்கிகள் தள்ளுபடியும் செய்து விடுகின்றன. ஆனால், பற்று அட்டையைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மோசடி நடவடிக்கைகளுக்கு, பல நூறு டாலர்கள் வரையிலும், ஏன், அதன் மொத்த மதிப்பு வரையிலுமே கூட அட்டையின் உரிமையாளர் பொறுப்பாகிறார். மேலும் பற்று அட்டையைப் பொறுத்த வரையில்[6] இத்தகைய மோசடிக்கான தள்ளுபடியைப் பெறுவதற்கு, அதனை வங்கிக்குத் தெரிவிப்பதற்கு வாடிக்கையாளர் மிகக் குறைந்த நேரமே பெற்றுள்ளார் (வழமையாக இரண்டே நாட்கள்தாம்). கடன் அட்டையைப் பொறுத்த வரையில் இந்தக் காலகட்டம் 60 நாட்களாகக் கூட இருக்கலாம்.[6] பற்று அட்டையின் குறியீட்டு எண்ணைப் பெறவோ அல்லது அந்த அட்டையைப் போன்றே ஒரு நகல் எடுக்கவோ இயன்ற திருடன் ஒருவன் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கை சுத்தமாகத் துடைத்து எடுத்து விடலாம். இதற்கு வாடிக்கையாளரால் ஏதும் செய்ய இயலாது.
அங்கீகாரம் அல்லாத பயன்பாடுகளுக்கு கூட்டரசினால் விதிக்கப்படும் அதிகபட்ச கடப்பாடு (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)

அறிவிக்கப்பட்டவை

அட்டையின் உடைமையாளரின்அதிகபட்சக் kattupadu
கடன் அட்டை

பற்று அட்டை

பயன்பாட்டிற்கு முன்னர்

$0 $0

இரண்டு வேலை நாட்களுக்குள்

$50 $50
இரண்டு வேலை நாட்களுக்குப் பிறகு ஆனால் 60 வேலை நாட்களுக்குள் $50 $500
60 வேலை நாட்களுக்குப் பிறகு

வரம்பற்றது

வரம்பற்றது

[7][8]

 • பிற நாடுகளில், ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில், பொருட்களை அல்லது சேவைகளை கடன் அட்டை கொண்டு வாங்கும் ஒரு நுகர்வோர் அத்தகைய பொருட்களோ அல்லது சேவைகளோ வழங்கப்படாவிடினும் அல்லது விற்கப்பட இயலாவிடினும், கடன் அட்டை அளித்தவரைப் பின் தொடரலாம். இதற்கு சில்லறை வணிகர் அளிக்கும் செயற்பாடுகளை முதலில் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். எனினும், அத்தகைய சில்லறை வணிகர் வர்த்தகத்தை விட்டுச் சென்று விட்டார் எனில், இது தேவையாக இருப்பதில்லை. ஒரு பற்று அட்டையைப் பயன்படுத்துகையில் இத்தகைய ஒரு பாதுகாப்பைச் சட்டம் அளிப்பதில்லை. ஆயினும், விசா பற்று அட்டைகள் போன்ற வலைப்பின்னல்கள் ஓரளவிற்கு இதை வழங்குகின்றன.
 • ஒரு கடன் அட்டையைப் பயன்படுத்தி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகையில், வங்கியின் பணமே செலவாகிறது. எனவே, மோசடி அல்லது பூசல் நேர்கையில் அப்பணத்தைத் திரும்பப் பெறுவதில் வங்கி முனைப்பாகிறது. ஒரு கொள்முதலில் அதிருப்தி அடைந்த அல்லது ஒரு வணிகரால் முறையற்று நடத்தப்பட்ட வாடிக்கையாளரின் குற்றச்சாட்டுகளைக் களைவதற்கு வங்கி போராடலாம். ஆனால், பற்று வழி கொள்முதல் செய்கையில், வாடிக்கையாளர் தனது பணத்தையே செலவு செய்கிறார். இதில், பணத்தைத் திரும்பப் பெறுவதில் வங்கிக்கு முனைப்பு ஏதும் இருப்பதில்லை.
 • சில நாடுகளில், (பெறப்படும் இடத்திலேயே பணம் செலுத்து முறையில்) காசோலைன், உறைவிடம் அல்லது வாடகை ஊர்தி ஆகிய சில வகையான கொள்முதல்களுக்கு பணத்தை வங்கி நிலுவையில் வைத்திருக்கலாம். இது குறிப்பிட்ட கால கட்டத்திற்கு உண்மையான கொள்முதல் மதிப்பை விட அதிகமாகவும் இருக்கலாம்.[6] இருப்பினும், சுவீடன் போன்ற சில நாடுகளில் இவ்வாறு இருப்பதில்லை. இந்த நிலுவை தீர்வையாகும்வரையில், இந்தக் கணக்கில் ஏற்றப்படும் பிற பற்றுகள், காசோலைகளை உள்ளிட்டு, அனைத்தும் மறுதலிக்கப்படும் அல்லது வங்கிக் கணக்கில் நிதி இல்லாத நிலை போன்ற, மிகைப்பற்று அடிப்படையில் கட்டணம் விதிக்கப்பட்டு அளிக்கப்படும்.
 • எல்லா நிதிசார் நடவடிக்கைகளிலும் பெரும் நிறுவனங்களின் முத்திரை தாங்கியுள்ள மெய்ம்மையற்ற கடன் அட்டைகள் ஏற்கப்படுகையில், வாடகை ஊர்தி வசதிகளில் இவற்றை ஒத்த பற்று அட்டைகள் சில நாடுகளில் ஏற்கப்படுவதில்லை.[9] சில நாடுகளில், வாடகை ஊர்தி முகமைகள் மெய்யான கடன் அட்டையின் பயன்பாட்டினையே வலியுறுத்துகின்றன; அல்லது குறைந்த பட்சமாக பற்று அட்டையைப் பயன்படுத்தி வாடகைக்கு ஊர்தியை எடுப்பவரின் கடன் திருப்பும் வலிமை குறித்து விசாரித்துக் கொள்கின்றன். இத்தகைய நாடுகள் சிலவற்றில், இந்த நிறுவனங்கள் தங்களது தேவைப்பாடுகளுக்குப் பொருந்தாத எவருக்கும் வாடகையில் அளிக்க மறுத்து விடுகின்றன. மேலும், இவ்வாறான கடன்வாங்கும் திறன் பொறுத்த விசாரித்தல் ஒருவரது கடன் மதிப்பையே பாதித்து விடவும் கூடும். கொள்முதல் செய்யப்படும் நாட்டில் மற்றும்/ அல்லது வாடிக்கையாளரின் சொந்த நாட்டிலும் இவ்வாறான கடன் மதிப்பெண் இருக்கும் நிலையில் இது நிகழக் கூடும்.

நுகர்வோர் பாதுகாப்பு

தொகு

வலைப்பின்னலைப் பொறுத்து நுகர்வோருக்கான பாதுகாப்புக்கள் மாறுபடும். எடுத்துக் காட்டாக, விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கொள்முதல் அளவுகள், கூடுதல் கட்டணங்கள் மற்றும் வணிகரின் தரப்பிலான தன்னிச்சையான பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றைத் தடை செய்வதாக உள்ளன. கடன் நடவடிக்கைகளுக்கு வணிகர்கள் பொதுவாகவே அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகின்றனர். காரணம் பற்று தொடர்பான வலைப்பின்னல் நடவடிக்கைகளில் மோசடி குறைவாக இருப்பதுதான். இதனால், சில வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளரை பற்று நடவடிக்கைகளுக்கு "நடத்திச்" செல்லக் கூடும். கட்டணங்களை மறுத்துப் பூசலில் ஈடுபடும் நுகர்வோர் கடன் அட்டையில் அவ்வாறு செய்வது எளிது. காரணம், அது உடனடியாக அவர்களது கட்டுப்பாட்டினை விட்டு விலகுவதில்லை. ஒரு பற்று அட்டையுடனான மோசடிக் குற்றச்சாட்டுகளும் காசோலை கணக்கினில் பிரச்சினைகளை உருவாக்கலாம். காரணம், பணம் உடனடியாக கணக்கிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு விடுகிறது. இதனால், மிகைப்பற்று அல்லது காசோலை திரும்புதல் ஆகியவை நிகழலாம். சில நேரங்களில், பற்று அட்டையை வழங்கும் வங்கிகள் பூசலுக்கு உட்பட்ட கட்டணத்தை உடனடியாகத் திரும்ப அளித்து விடுகின்றன. சில அதிகாரப் பகுதிகளில், கடன் மற்றும் பற்று அட்டைகள் ஆகிய இரண்டிலுமே நுகர்வோரின் கடப்பாடு ஒரே மாதிரியானதுதான்.

இந்தியா மற்றும் சுவீடன் போன்ற சில நாடுகளில், எந்த வலைப்பின்னல் பயன்பட்டாலும் நுகர்வோர் பாதுகாப்பு என்பது ஒரே அளவினதாகவே உள்ளது. சில வங்கிகள், பெரும்பாலும் நேரடிக் கணினி அட்டைகளுக்கும், குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச கொள்முதல் அளவுகளை நிர்ணயிக்கின்றன. இருப்பினும், இதற்கும் அட்டையின் வலைப்பின்னல்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இது குறிப்பிட்ட நபரின் வயது மற்றும் அவரது கடன் பதிவுகள் ஆகியவற்றைப் பொறுத்து வங்கியின் தீர்மானத்தின் மேலானதாகும். ஒரு நடவடிக்கை கடன் சார்ந்தோ அல்லது பற்று சார்ந்தோ எவ்வாறு இருப்பினும், வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் ஒன்றாகவே இருக்கும். இதனால், ஒரு முறைமைக்கு மேலாக மற்றொரு முறைமையைத் தேர்ந்தெடுப்பதனால், வாடிக்கையாளர்களுக்கு எந்த வித சாதகமும் கிடையாது. கடைகள், இதனை அனுமதிக்கும் சட்டங்களுக்கு ஏற்றப்டி, கூடுதல் கட்டணங்களைப் பொருட்கள் அல்லது சேவைகளின் மீது ஏற்றலாம். கொள்முதலுக்கான பணம் எப்போது செலுத்தப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாது, அட்டை தேய்க்கப்படும் நொடியிலேயே பொருள் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவே வங்கிகள் கருதுகின்றன. எந்த ஒரு நடவடிக்கை முறைமை பயன்பட்டிருப்பினும், கொள்முதலானது மிகைப்பற்றினை விளைக்கலாம். காரணம், அட்டை தேய்க்கப்படும் நொடியிலேயே பணம் கணக்கை விட்டு வெளியேறி விடுவதாகக் கருதப்படுகிறது.

நிதி அணுக்கம்

தொகு

இதுவரை கடன் வரலாறு ஒன்றினைக் கொண்டிருக்காத கல்லூரி மாணவர்களிடையே பற்று அட்டைகள் மற்றும் பாதுகாப்பான கடன் அட்டைகள் ஆகியவை பிரபலமாக உள்ளன. அகதி ஊழியர்களும் இணைப்பு பற்று அட்டை கொண்டுள்ள தங்களது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதற்குப் பற்று அட்டைகளைப் பயன்படுத்தலாம்

நேரடி கணினி வழி அல்லாத பற்றுக்களை ஒத்தி வைப்பதில் எழும் வினாக்கள்

தொகு

வாடிக்கையாளரைப் பொறுத்த வரையில் ஒரு பற்று நடவடிக்கையானது நிஜ நேரக் கட்டத்தில் நிகழ்கிறது. அதாவது , வணிகரின் கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் உடனடியான வெளியேறி விடுகிறது. இதுவே, சில நாடுகளில் நேரடிக் கணினி பற்று வழி கொள்முதலில் ஈடுபடுகையில் நிகழ்வதாகிறது. இருப்பினும், (நேரடிக் கணினி வழி அல்லாத) "கடன்" விருப்பத் தேர்வினைப் பயன்படுத்தி கொள்முதல் செய்யப்படுகையில், அது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், அங்கீகாரம் பெற்ற நிலுவை என்னும் நிலையில்தான் இருக்கும். இது தொடர்பான கணக்கு முழுமையடைந்து, எழுத்து மூலமாக வாடிக்கையாளரின் கணக்கில் இடப்படும் வரையிலும், பணம் அவரது கணக்கினை விட்டு வெளியேறுவதில்லை. பொதுவாக, இவ்வாறு நிகழ்வதற்குச் சில நாட்கள் ஆகும். இருப்பினும், முன்னால் கூறிய வாசகம் அனைத்து வகை நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக ஐரோப்பிய வங்கி வழங்கும் அட்டையைப் பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பொருந்தும். இது உருமாதிரியான கடன் அட்டை நடவடிக்கையிலிருந்து மாறுபாடானது. கணக்கில் நடவடிக்கையின் மதிப்பு ஏற்றப்படுவதற்குச் சில நாட்கள் கால தாமதமாவது அங்கும் நிகழினும், நுகர்வோர் உண்மையில் பணத்தைச் செலுத்துவதற்கு ஒரு மாதம் அளவிலான நாட்களும் ஆகக் கூடும்.

இதன் காரணமாக, வணிகர் அல்லது வங்கி நலன் கருதி அல்லது மோசடியாக செய்யும் ஒரு தவறு, ஒரு பற்று நடவடிக்கையானது கடன் நடவடிக்கையில் உள்ள பிரச்சினைகளை விட (கடனுக்கான அணுக்கம் அற்று இருப்பது, மிகைக் கடன் வரம்பு ஆகியவை) மேலும் அதிக அளவிலான பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும். (உதாரணம் பணத்திற்கு அணுக்கம் அற்று இருப்பது; மிகைப் பற்று ஆகியவை). இது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குக் குறிப்பாகப் பொருந்தும். இங்கு காசோலை மோசடி என்பது எந்த மாநிலத்திலும் குற்றமாகும்; ஆனால், கடன் வரம்பை மீறுவது அவ்வாறான குற்றம் அல்ல.

இணைய வழி கொள்முதல்கள்

தொகு

பற்று அட்டைகளை இணையத்திலும் பயன்படுத்தலாம். இணைய நடவடிக்கைகளை நேரடிக் கணினி வழியாகவோ, அல்லது அவ்வாறன்றியோ மேற்கொள்ளலாம். சுவீடன் போன்ற சில நாடுகளில், நேரடிக் கணினி வழி பற்று அட்டைகளை ஏற்கும் கடைகள் மிகச் சிலவே. ஆயினும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இது பொதுவானவையாக உள்ளன. ஒரு ஒப்புமைக்கு இதனைப் பார்க்கலாம்: பேபால் (paypal) தனது வாடிக்கையாளர் தனது டச் இருப்பிடத்தின் முகவரியை உள்ளீடாகச் செலுத்தினால் மட்டுமே மாஸ்டிரோ அட்டையினை நேரடிக் கணினி வழி முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறது; அதே வாடிக்கையாளர் சுவீடன் நாட்டு முகவரி அளிப்பின் அதை அனுமதிப்பதில்லை.

இணைய வழிக் கொள்முதல்களை நேரடிக் கணினி மூலமாகவோ அல்லது நேரடிக் கணினி அற்ற முறைமைகள் மூலமாகவோ மேற்கொள்ளலாம். ஒரு கடையில் உங்களது அட்டையைப் பயன்படுத்துகையில், (குறைந்த பட்சம் பெரும்பான்மையான நாடுகளில்) அந்த நடவடிக்கையானது (நேரடிக் கணினி வழி அட்டை பயன்படுத்தப்பட்டிருந்தால் தவிர) நேரடிக் கணினி வழி மேற்கொள்ளப்பட்டதா அல்லவா என்று கூறுதல் கடினமாகும். காரணம், இதற்கான ரசீது அல்லது அவை போன்றவற்றில் வழி முறை சுட்டப்படுவதில்லை. இணைய வழிக் கொள்முதல்கள் குறியீட்டு எண்ணையோ அல்லது ஒரு கையெழுத்தினையோ அடையாளம் கண்டுணரப் பயன்படுத்துவதில்லை. இதில் நடவடிக்கைகளை கடன் அல்லது பற்று ஆகியவற்றில் எந்த முறைமையிலும் மேற்கொள்ளலாம் (சில சமயங்களில், எப்போதுமே அல்ல, இது ரசீதில் சுட்டப்படுகிறது). அந்த நடவடிக்கை எந்த முறைமையில் கையாளப்பட்டது என்பதனுடன் இது சிறிதும் தொடர்பற்றதாகிறது. காரணம், கடன் மற்றும் பற்று ஆகிய இரண்டையும் இரு முறைமைகளிலுமே மேற்கொள்ளலாம்.

மிகைப்பற்றுக் கட்டணம்

தொகு

வங்கிகளின் மிகுவருவாய் கொண்ட பற்று அட்டை மிகைப்பற்றுக் கட்டணம் என்பதன் மீது 2007ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியான ஒரு கட்டுரை, பற்று அட்டை வழங்குனர்கள் மின்னணு வழி தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தகவல் அளிப்பதன் மூலம் மிகைப்பற்றுக் கட்டணத்தைத் தவிர்க்க இயலும் என்று சுட்டிக் காட்டியது. வங்கித் துறையின் சார்புரிமைப் பேச்சாளரும் தேற்றாளருமான நெஸ்ஸா ஃபெட்டிஸ் என்பவர் "தற்போதைய தொழில் நுட்பம் மிகைப்பற்று பற்றிய நிஜ-நேர வழி தகவல் அளிப்பதன் மூலம் செலவைக் கட்டுப்படுத்தும்" என உரைத்துள்ளார்.[10] இந்தக் கட்டுரை இவ்வாறு கூறுகிறது: "தங்களது தற்போதைய நிலையை மாற்றியமைக்க நிதி நிறுவனங்கள் விரும்புவதில்லை. காரணம், வாடிக்கையாளர்களின் தவறுகள் மற்றும் பொறுப்பற்ற தன்மை மூலம் அவை மிகுதியாகவும், எளிதாகவும் நிரம்பப் பணம் ஈட்டுகின்றன."[10]

உலகெங்கும் பற்று அட்டைகள்

தொகு

சில நாடுகளில், ஒவ்வொரு பற்று அட்டை நடவடிக்கைக்கும் வங்கிகள் சிறு தொகை ஒன்றை விதிக்கின்றன. சில நாடுகளில் (எ.கா: ஐக்கிய இராச்சியம்) வணிகர்களே அனைத்துக் கட்டணங்களையும் ஏற்கின்றனர். வாடிக்கையாளர்களுக்குக் கட்டணம் விதிக்கப்படுவதில்லை. சிலர் எவ்வளவு சிறிய தொகையாக இருப்பினும், வழமையாக பற்று அட்டைகளையே பயன்படுத்துகின்றனர். சில (சிறு) சில்லறை விற்பனையாளர்கள் பற்று அட்டைகளை சிறு தொகைகளுக்கு ஏற்க மறுக்கின்றனர். காரணம், இதில் இலாப நிலையை பற்று அட்டையின் மீது விதிக்கப்படும் கட்டணம் விழுங்கி விடும் என்பதேயாகும். இதனால், சில்லறை வணிகர்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதார ரீதியாக உகந்தவையாக இருப்பதில்லை.

ஆஸ்திரேலியா

தொகு

ஆஸ்திரேலியா நாட்டில், அட்டையை வழங்கும் வங்கியினைப் பொறுத்து பற்று அட்டைகளுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா: கீகார்ட் ; வெஸ்ட்பேக் பாங்கிங் கார்ப்பொரேஷன்: ஹாண்டிகார்ட் ; நேஷனல் ஆஸ்திரேலியா பாங்க்: ஃப்ளெக்ஸிகார்ட் ; ஏஎன்இஜட்பாங்க்: ஆக்சஸ்கார்ட் ; பெண்டிகோ பாங்க்: கேஷ்கார்ட் .

ஆஸ்திரேலியாவில் 1980ஆம் ஆண்டுகளிலிருந்து எஃப்ட்போஸ் (EFTPOS) என்பது மிகவும் பிரபலமாக கையாளப்பட்டு வருகிறது. இவ்வாறு எஃப்ட்போஸ் கொண்டு செயல்படுத்தும் அட்டைகள் கடன் அட்டைகளைத் தேய்ப்பதற்கான அனைத்து முனைகளிலும் ஏற்கப்படுவதாக உள்ளன. இவற்றில் அந்நிய வங்கிகள் வழங்கும் மாஸ்டிரோ அட்டைகளும் அடங்கும். பெரும்பான்மையான வணிகங்களில் இவை ஏற்கப்பட்டுள்ளன. சுமார் 450,000 விற்பனை நிகழ்வு முனைகளில் இவ்வாறு உள்ளது.[11]

எஃப்ட்போஸ் அட்டைகளை நேரடியாக ரொக்கம் செலுத்தவோ அல்லது எடுக்கவோ கூட ஆஸ்திரேலியா போஸ்ட்டின் வடிகால்களில் பயன்படுத்தலாம். இது, ஒரு வங்கியின் கிளை மூடப்பட்டிருந்தாலும், அதன் கிரோபோஸ்ட் போன்ற சேவைகளைப் பெறுவதைப் போன்றதாகும். ஆஸ்திரேலியாவில் மின்னணு வழி நடவடிக்கைகள் பெரும்பாலும் டெல்ஸ்டிரா அர்ஜண்ட் மற்றும் ஆப்ட்டஸ் டிரான்ஸாக்ட் பிளஸ் வலைப்பின்னல் மூலமாகவே நடைபெறுகின்றன. இவை அண்மையில், பழைய டிரான்ஸெண்ட் வலைப்பின்னலின் இடத்தினைக் கைப்பற்றி விட்டன. ஆரம்ப காலத்து கீகார்டுகள் எஃப்ட்போஸ் மற்றும் ஏடிஎம் அல்லது வங்கியின் கிளைகள் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த இயன்றவையாக இருந்தன. ஆனால், புதிய பற்று அட்டை அமைப்பானது ஒரு கடன் அட்டையைப் போலவே செயல்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மட்டுமே இது பயன்படுத்த இயலும் என்பதே ஒரே வேறுபாடாகும். இதன் பொருள், பல சாதகங்களுக்கு இடையில், புதிய அமைப்பானது மின்னணு வழி கொள்முதல்களுக்கு ஏற்புடையதாகவும், வங்கியிலிருந்து வங்கிக்கான பணப் பரிமாற்றங்களில் நிகழும் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரையிலான தாமதத்தை உட்கொள்ளாமலும் உள்ளன என்பதுவேயாகும்.

மின்னணு வழி கடன் அட்டை நடவடிக்கைகளுக்கான அங்கீகாரம் மற்றும் எஃப்ட்போஸ் வழியிலான பற்று அட்டைகளுக்கான அங்கீகாரம் ஆகிய இரண்டுமே ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளன. இவற்றிற்கு இடையிலான வேறுபாடு, எஃப்ட்போஸ் மூலமான நடவடிக்கைகள் ஒரு தனிப்பட்ட அடையாள் எண் (பின்) கொண்டு அங்கீகாரம் அளிக்கப்படுகையில், ரசீதை அச்சிட்டு அதன் மீது கையெழுத்திடுவதன் மூலம் கடன் அட்டைகள் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதே. பயனர் சரியான பின் எண்ணை இடுவதற்கு மூன்று முறைகள் தவறி விட்டால், இதன் விளைவுகள் அட்டை பூட்டப்படுவதில் துவங்கி, வங்கிக் கிளைக்கு தொலைபேசியில் அறிவித்தல் அல்லது நேரடியாகச் சென்று அதை மீண்டும் ஒரு புதிய பின் எண் கொண்டு இயக்குமாறு விண்ணப்பித்தல் வரையிலுமாக உள்ளன. வணிகரால் வெட்டப்பட்டு விட்ட அட்டை அல்லது ஒரு ஏடிஎம்மைப் பொறுத்தவரையில் இயந்திரத்தின் உள்ளே அட்டை சிக்கிக் கொள்வது ஆகிய இரண்டு நிகழ்வுகளிலுமே ஒரு புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது அவசியமாகிறது.

பொதுவாக, கடன் அட்டைகளின் மீதான கட்டணங்களை வணிகரே ஏற்கின்றனர். இறுதிப் பயனரின் மீது கட்டணம் விழுவதில்லை. ஆனால், எஃப்ட்போஸ் தொடர்பான நடவடிக்கைகளில், வாடிக்கையாளர்களுக்கு வங்கி பணம் எடுப்பதன் மீதான கட்டணம் ஒன்றை விதிக்கிறது.

விசா மற்றும் மாஸ்டர்கார்ட் போன்ற பற்று அட்டைகளின் அறிமுகம் மற்றும் அதனுடனான எஃப்ட்போஸ் மற்றும் கடன் அட்டை இயக்காளர்கள் விதிக்கும் தீர்வைக் கட்டணம் ஆகியவை தொடர்பாக இருப்பு வங்கி (Reserve Bank) அமலாக்கியுள்ள விதிமுறையானது, ஆஸ்திரேலியர்களிடையே கடன் அட்டை பரவலாகி உள்ளது மற்றும் எஃப்ட்போஸ் பயன்பாடு குறைந்துள்ளது ஆகியவற்றின் ஒரு தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. இருப்பினும், தீர்வைக் கட்டண விதிமுறையானது வங்கிகள் சில்லறை வணிகர்களுக்கு, ரொக்கம் அல்லது எஃப்ட்போஸ் மூலமாக அன்றி, கூடுதல் கட்டணம் விதித்து, விசா, மாஸ்டர்கார்ட் அல்லது பாங்க்கார்ட் ஆகியவற்றின் மூலம் கடன் அட்டைகளுக்கான தொகையினைப் பெறுவதற்காக அளிக்கும் வணிக சேவைகளையும் அகற்றி விடுவதாக உள்ளது. வலிமை மிக்க சந்தைச் சக்தி உடைய சில இயக்காளர்களே இவ்வாறு செய்திருப்பினும், கடன் அட்டைகளைப் பரிசீலிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது எஃப்ட்போஸ் முறைமை அதிக அளவில் பயன்படுவதில் விளையலாம்.

பிரேசில்

தொகு

பிரேசில் நாட்டில், கடன் அட்டைகள் கார்ட்டியோ டி டெபிட்டோ (ஒருமை) (cartão de débito) என்று அழைக்கப்படுகின்றன. இவை காசோலைகளுக்கு மாற்றாக மிகவும் பிரபலமாகி வருகின்றன.[12] இருப்பினும், காசோலைகள் அந்த நாட்டில் இன்னமும் பிரபலமாகவே உள்ளன.

கனடா

தொகு

கனடா நாடு முழுவதுமே எஃப்ட்போஸ் அமைப்பு பயன்பட்டு வருகிறது. இது இண்டராக் நேரடி செலுத்துதல் (Interac Direct Payment - ஐடிபி) என வழங்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு அறிமுகமானது துவங்கி அந்நாட்டில் ஐடிபி மிகவும் பிரபலமான ஒன்றாகி விட்டது. முன்னர், 1980ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து, ஏபிஎம் பயன்பாட்டிற்கு பற்று அட்டைகள் பயன்பட்டு வந்தன. 1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், கனடாவின் மிகப் பெரும் ஆறு வங்கிகள் பாதுகாப்பு, துல்லியம் மற்றும் இயலுமை ஆகியவற்றிற்கான ஒரு அளவுமானியாக வெள்ளோட்டத் திட்டங்களைத் துவக்கின. மெல்ல மெல்ல, 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சில்லறை விற்பனையாளர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் இண்டராக்கினை பணம் செலுத்துவதற்கு ஒரு தோற்றுவாயாக அளிப்பதாகக் கணக்கிடப்பட்டது. சில்லறை வணிகர்கள், காப்பிக் கடைகள் போன்ற மிகச் சிறு வணிகர்கள் விரைவான சேவைக்காக ஐடிபி அளிப்பதை எதிர்த்து வந்தனர். 2009ஆம் ஆண்டில் சில்லறை வணிகர்களில் 90 சதவிகிதம் பேர் ஐடிபி என்பதை பணம் செலுத்துவதற்கு ஒரு மாற்று வழியாக வழங்கலாயினர்.

கனாடாவில், பற்று அட்டை சில சமயம் "வங்கி அட்டை" எனப்படுகிறது. இது வாடிக்கையாளருக்கு ஒரு வங்கி அளிக்கும் அட்டை. இது அந்த வங்கி மற்றும் இதர வங்கிகளைப் பொறுத்த நிதி மாற்றம், விஞ்சிய தொகைகளை சோதித்தறிதல், விலைச் சீட்டுகளுக்குப் பணமளித்தல், போன்ற நடவடிக்கைகளுக்கும் மற்றும் இண்டராக்கில் இணைப்பு பெற்று கொள்முதல் நடவடிக்கை முனையாகவும் விளங்குவதாகும். 1994ஆம் ஆண்டு நாடெங்கிலும் அறிமுகமான பிறகு, இவ்வாறான ஐடிபி வழி பணம் செலுத்தும் முறைமை மிகவும் பரவலாகி விட்டது. 2001ஆம் ஆண்டின்படி, ரொக்கத்தை விட பற்று அட்டைகளைக் கொண்டே கனடா நாட்டில் பெரும்பான்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.[13] இத்தகைய பரவலான பயன்பாட்டிற்கு இரு காரணங்கள் முக்கியமானதாக இருக்கலாம்: முதலாவது, ரொக்கமாக எடுத்துச் செல்ல வேண்டியிராத வசதி மற்றும் இரண்டாவதாக ஏபிஎம் எனப்படும் தானியங்கி முறைமையிலான வங்கி இயந்திரங்கள் மற்றும் வலைப்பின்னலில் நேரடியாகப் பணம் பெறும் வணிகர்கள்.

உண்மையில், பற்று அட்டையின் பயன்பாட்டினைப் பொறுத்த வரையினில், கனடா நாட்டு மக்களே உலக அளவில் தலைமை தாங்குபவர்களாக உள்ளனர். 2001ஆம் ஆண்டில், ஒரு நபருக்கு 71.7 பற்று அட்டை நடவடிக்கைகளாக இருந்தது. இதை அடுத்திருக்கும் நாட்டிற்கு (ஃபிரான்சில் 60.3) உள்ள வாடிக்கையாளர் விகிதத்தை விட இது மிக அதிகமானது. 11 நாடுகளுடனான ஒப்புமையில், கனடா நாட்டில் பற்று நடவடிக்கைகளின் சராசரி மதிப்பு (2001ஆம் ஆண்டில் யூஎஸ்$27) மிகவும் குறைந்ததாகும். இதுவே ஜப்பானில் யூஎஸ்$405 என்பதாகவும் மற்றும் சுவிட்சர்லாந்தில் யூஎஸ்$100 என்பதாகவும் உள்ளன. இவ்வாறாக, பிற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடுகையில், கனடா நாட்டு மக்கள் தங்கள் பற்று அட்டையை அதிக அளவிலும், மிகக் குறைவான மதிப்புள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாகவும் காணப்படுகிறது.

பற்று அட்டைகளை சேமித்த மதிப்பு அட்டை என்பனவாகவும் கொள்ளலாம்; அதாவது இந்த அட்டையை வழங்குபவர் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அட்டையின் உடைமையாளருக்கு கடப்பாடு உடையவராகிறார். இவை சேமித்த மதிப்பு அட்டையிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றன என்றால், அவை அநாமதேயமாகவும், வழங்குனருக்காக மட்டுமே பயன்படுபவை என்பதுமேயாகும். மாறாக,பற்று அட்டைகள் ஒரு தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்குடன் தொடர்புற்று இண்டராக் வலைப்பின்னலில் எங்கு வேண்டினும் பயன்படுத்தப்படலாம்.

கனடாவில், வங்கி அட்டைகள் பிஓஎஸ் மற்றும் ஏபிஎம் ஆகியவற்றில் மட்டுமே பயன்படும். குறிப்பிட்ட சில நிதி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் ஐக்கிய அமெரிக்க நாட்டில் நைஸ் (NYCE) வலைப்பின்னலில் இவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.[14]

கனடாவில் நுகர்வோர் பாதுகாப்பு

தொகு

கனாடா நாட்டில் நுகர்வோர் பற்று அட்டை சேவை வழங்குனர்கள் அனைவரும் மேற்கொண்டுள்ள ஒரு தன்னார்வக் கோட்பாடு* என்பதன் கீழாகப் பாதுகாப்பு பெறுகின்றனர். இது கனடிய பற்று அட்டை சேவை நுகர்வோருக்கான நடைமுறைக் கோட்பாடு[15] என (சில நேரங்களில் பற்று அட்டைக் கோட்பாடு எனவும்) வழங்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டிற்கான ஒழுகுதலை கனடா நிதி நுகர்வோர் முகமை (Financial Consumer Agency of Canada, (FCAC)) கண்காணித்து வருகிறது. நுகர்வோரின் புகார்களை இதுவே விசாரிக்கிறது.

எஃப்சிஏசியின் வலைத்தளம் அளிக்கும் விபரங்களின்படி, 2005ஆம் ஆண்டு இந்தக் கோட்பாட்டில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, பூசலுக்கு உட்பட்ட ஒரு நடவடிக்கையின் பொறுப்பு நுகர்வோருக்கானது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு நிதி நிறுவனத்தினுடையது. மேலும், இத்தகைய ஒரு நடவடிக்கையைப் புலனாய்கையில் எத்தனை நாட்களுக்கு இது தொடர்பான வங்கிக் கணக்கை முடக்கி வைக்கலாம் என்பதையும் வரம்பிடுகிறது.

சிலி

தொகு

சிலி நாட்டில் உள்ள எஃப்ட்போஸ் அமைப்பு ரெட்காம்பிரா (கொள்முதல் வலைப்பின்னல்) என்பதாகும். இதனைத் தற்போது நாடெங்கிலும் குறைந்த பட்சம் 25,000 நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பினைப் பயன்படுத்தி பெரும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான அங்காடிகள், சில்லறைக் கடைகள், மதுச்சாலைகள் மற்றும் உணவங்கங்களில் கொள்முதல் செய்யலாம்.

கொலம்பியா

தொகு

கொலம்பியாவில் உள்ள அமைப்புகள் ரெடெபான் மல்ட்டிகலர் மற்றும் கிரெடிபாங்கோ விசா ஆகியவையாகும். இவற்றை நாடெங்கிலும் குறைந்த பட்சமாக 23,000 நிறுவங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பினைப் பயன்படுத்தி பெரும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான அங்காடிகள், சில்லறைக் கடைகள், மதுச்சாலைகள் மற்றும் உணவங்கங்களில் கொள்முதல் செய்யலாம். கொலம்பிய பற்று அட்டைகள் மாஸ்டிரோ (பின்), விசா எலெக்டிரான் (பின்), விசா டெபிட் (கடன் அட்டையாக) மற்றும் மாஸ்டர்கார்ட்-டெபிட் (கடன் அட்டையாக) ஆகியவையாகும்.

டென்மார்க்

தொகு

டாங்கார்ட் என்னும் டானிஷ் பற்று அட்டை 1983ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் நாள் அறிமுகமானது. இதன் ஆரம்ப காலப்பயன்பாடு காகிதம் சார்ந்தே இருப்பினும், இது டென்மார்க் நாட்டில் விரைவிலேயே பரவலான பயன்பாடு பெற்று விட்டது. 1985ஆம் ஆண்டு வாக்கில் முதல் எஃப்ட்போஸ் முனைகள் அறிமுகமாயின. டாங்கார்ட் மூலமான நடவடிக்கைகள் ஒரு மில்லியனைத் தாண்டியதும் 1985ஆம் ஆண்டில்தான்.[16] சிறு கடைகளிலும் டாங்கார்ட் அட்டை மட்டுமே ஏற்கப்படுவது பொதுவானதாக இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ரொக்கம் இன்றி பயணப்படுவது கடினமாக உள்ளது.

பல்வகைப் பொருண்மைகளும், எண்களும்

 • 2007ஆம் ஆண்டில் டென்மார்க்கின் டாங்கார்ட் இயக்காளரான பீபிஎஸ் மொத்தம் 737 மில்லியன் டாங்கார்ட் நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது.[17]

இவற்றில், 4.5 மில்லியன் ஒரே நாளில், அதாவது டிசம்பர் மாதம் 21 அன்று நிகழ்ந்தவை. இதுவரை இதுவே தற்போதைய சாதனையாக உள்ளது.

 • 2007ஆம் ஆண்டின் இறுதியில், 3.9 மில்லியன் டாங்கார்ட் அட்டைகள் இருந்தன.[17]
 • 80,000க்கும் மேலான டென்மார்க் கடைகள் டாங்கார்ட் முனைமை கொண்டுள்ளன. மற்றும் இணையத்தில் உள்ள 11,000 கடைகள் டாங்கார்டினை ஏற்றுக் கொள்கின்றன.[17]

ஃபிரான்ஸ்

தொகு

ஃபிரான்ஸ் நாட்டு வங்கிகள் பற்று அட்டைகளுக்கு (அவை வங்கிகளின் செலவைப் பொறுத்த மட்டில் மிகு திறன் கொண்டிருப்பினும்) வருடாந்திரக் கட்டணம் விதிக்கின்றன. இருப்பினும், அவை தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களது காசோலைப் புத்தகங்களுக்கும் அல்லது அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் (இவை அவற்றிற்கு மிகுந்த அளவு செலவு விளைவிப்பதாக இருப்பினும்) கட்டணம் விதிப்பதில்லை. இவ்வாறான முரண்பாடு சில்லு மற்றும் குறியீட்டு எண் ஒருமுகமாக ஃபிரான்சு நாட்டில் 1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அறிமுகமான காலம் தொட்டே இருந்து வருவதாக உள்ளது. இந்தத் தொழில் நுட்பத்திற்கான செலவு இப்போது உள்ளதை விடவும் அச்சமயம் மிக அதிகமானதாக இருந்ததே காரணம். ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் கடன் அட்டை போன்றவை ஃபிரான்ஸ் நாட்டில் இல்லை. இவற்றை ஓரளவிற்கு ஒத்திருப்பது ஒத்தி வைத்த பற்று அட்டையாகும். இது சாதாரணமான ஒரு பற்று அட்டை போலவே செயல்படுகிறது. இதில் உள்ள வேறுபாடு என்னவெனில், இதன் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்திற்குமான பண வழங்கீடு ஒவ்வொரு மாத இறுதிக்கும் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதேயாகும். இதன் மூலம், வாடிக்கையாளர் ஒன்று முதல் 31 நாட்கள் வரையிலான வட்டியிலாக் கடன் பெறுகிறார். உடனடியாக வங்கிக் கணக்கில் பற்று ஏற்றும் அட்டையை விட இத்தகைய அட்டைக்கு வருடாந்திரக் கட்டணம் 10 யூரோ அதிகமாகும். ஃபிரான்ஸ் நாட்டு பற்று அட்டைகள் பலவும் கார்ட்டெ பிளூ முத்திரை கொண்டுள்ளன. இது ஃபிரான்ஸ் முழுவதும் ஏற்கப்படுவதாக உள்ளது. பெரும்பான்மையான அட்டையின் உடைமையாளர்கள், கூடுதலாக ஒரு விசா அல்லது மாஸ்டர்கார்ட் முத்திரையை தங்களது கார்ட்டெ பிளூ அட்டையில் பெற்று அதற்கு சர்வதேச செல்லுமை பெறுவதற்கு, வருடந்திரக் கட்டணமாக ஐந்து யூரோக்கள் அதிகம் செலுத்துவதைத் தெரிவு செய்கின்றனர். விசா அல்லது மாஸ்டர்கார்ட் முத்திரையற்ற ஒரு கார்ட்டெ பிளூ, கார்ட்டெ பிளூ நேஷனலி என வழங்கப்படுகிறது. விசா அல்லது மாஸ்டர்கார்ட் முத்திரை கொண்ட ஒரு கார்ட்டெ பிளூ, கார்ட்டெ பிளூ இண்டர்நேஷனலி எனவோ அல்லது மேலும் அடிக்கடி, "விசா" அல்லது "மாஸ்டர்கார்ட்" என எளிமையாகவோ வழங்கப்படுகிறது. ஃபிரான்ஸ் நாட்டின் பல சிறு வணிகர்களும் ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழான நடவடிக்கைகளுக்கு பற்று அட்டையை ஏற்பதில்லை. காரணம், வங்கி ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வணிகருக்கு கட்டணம் விதிப்பதேயாகும். (குறைந்த பட்சமாக ஐந்து முதல் 15 யூரோ மற்றும் அரிதான சில நேரங்களில் இதை விட அதிகக் கட்டணமும் விதிக்கப்படுகிறது). ஆயினும், தற்சமயம் பற்று அட்டைகளின் தினசரிப் பயன்பாடு மிகுந்து விட்ட காரணத்தினால், மேலும் மேலும் வணிகர்கள் அதனை சிறு தொகைகளுக்கும் ஏற்று வருகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டு வணிகர்கள் பற்று அட்டை மற்றும் கடன் அட்டைகளுக்கு இடையே வேறுபாடு காண்பதில்லை. இரண்டும் சமமான ஏற்பு கொண்டுள்ளன. ஒரு நடவடிக்கைக்கான குறைந்த பட்சத் தொகையை நிர்ணயிப்பது ஃபிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமானதாகும். ஆயினும், வணிகர் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுதல் அவசியம்.

ஜெர்மனி

தொகு

ஜெர்மனி நாட்டில் பற்று அட்டைகள் பல வருடங்களாகவே பரவலாக ஏற்கப்பட்டுள்ளன. எஃப்ட்போஸ் வருவதற்கு முன்னரே இருந்த வசதிகள் யூரோசெக் என்பதாகப் பிரபலமாக இருந்தன. இது, துவக்கத்தில் காகிதக் காசோலைக்காக உருவாக்கிய அங்கீகார அமைப்பாகும். இதில் இயற்பொருளான காசோலையில் கையெழுத்திடுவதற்குக் கூடுதலாக வாடிக்கையாளர்கள், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக, இந்த அட்டையையும் காண்பிக்க வேண்டியிருந்தது. இந்த அட்டைகளை ஏடிஎம் முனைகளிலும் அட்டை-அடிப்படையிலான (கிரொகார்ட் எனப்பட்ட) மின்னணு நிதிப் மாற்றத்திற்க்காகப் பயன்படுத்தலாம். இவையே அத்தகைய அட்டைகளின் செயல்பாடுகளாக தற்போது உள்ளன. 2002ஆம் ஆண்டு டச் மார்க் என்பதிலிருந்து யூரோவிற்கு நாணய மாற்றம் நிகழ்ந்த வேளையில், யூரோசெக் அமைப்பு (அதன் வர்த்தகக் குறியீட்டுடன்) கைவிடப்பட்டது. 2005ஆம் வருட நிலவரத்தின்படி, பல கடைகளும், எரிபொருள் வடிகால்களும் எஃப்ட்போஸ் வசதிகளைக் கொண்டுள்ளன. செயல்முறைப்படுத்துதலுக்கான கட்டணங்கள் தொழில்துறையால் அளிக்கப்படுகிறது. இதனால், சில ஐந்து அல்லது பத்து யூரோவிற்கும் குறைவாக மொத்த விற்பனை மதிப்புள்ள நடவடிக்கைகளுக்கு பற்று அட்டை மூலம் பணம் செலுத்துவதை ஏற்க சில வணிகர்கள் மறுக்கின்றனர்.

செயற்படுத்துவதற்கான கட்டணத்தைத் தவிர்க்க, பல வணிகங்கள் நேரடிப் பற்று என்னும் முறையைப் பயன்படுத்துகின்றன. இது அப்போது மின்னணு நேரடிப் பற்று என (சுருக்கமாக ஈஎல்வி என வழங்கப்பட்டது). விற்பனை நிகழ்வு முனைமைகள் அட்டையின் பெயர் மற்றும் கணக்கு எண் ஆகியவற்றை அட்டையிலிருந்து படிக்கின்றன. நடவடிக்கையை ஒரு ஈசி வலைப்பின்னல் வழியாகக் கையாளாது, இவை ஒரு படிவத்தை அச்சடிக்கின்றன. இப்படிவத்தில் வாடிக்கையாளர் கையெழுத்திட்டு, பற்றுச் சீட்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறார். இருப்பினும், இந்த முறைமையானது, வலைப்பின்னல் அளிக்கும் பணம் செலுத்துதற்கான சான்றினைச் சரிபார்க்கும் அவசியத்தைத் தவிர்த்து விடுகிறது. மேலும், வங்கிக்குக் காரணம் ஏதும் கூறாமலேயே, வாடிக்கையாளர்கள் பற்றுச் சீட்டைத் திரும்ப அளித்து விடலாம். இதன் பொருளாவது, பலன் பெறுநரே மோசடி மற்றும் பொருள் நீர்மை நிறை ஆகியவை தொடர்பான ஆபத்திற்கு வெளிப்படுகிறார் என்பதேயாகும். தனிநபர் சார்ந்த கறுப்புப்பட்டியலை ஆலோசிப்பதன் மூலமோ அல்லது அதிகத் தொகையுள்ள நடவடிக்கைகளுக்கு மின்னணு ரொக்க முறைக்கு மாறிக் கொள்வதன் மூலமோ சில வணிகங்கள் இதில் உள்ள ஆபத்தைக் குறைக்க முயல்கின்றன.

2000 ஆம் வருட வாக்கில் ஒரு மின்னணு பணப்பை அட்டை அறிமுகமானது. இது கெல்ட்கார்ட்டெ ("பண அட்டை") எனப்பட்டது. இது வழமையாக வழங்கப்படும் பற்று அட்டையின் முன்புறத்தில் ஸ்மார்ட் கார்ட் சில்லு ஒன்றைப் பயன்படுத்துகிறது. இந்த சில்லுவில் 200 யுரோக்கள் வரை மதிப்பேற்றிக் கொள்ளலாம். இது மிகச் சிறு வணிகர்களுக்கு பணம் செலுத்தும் ஒரு முறையாக விளம்பரப்படுத்தப்படுகிறது. பல யூரோ அல்லது சென்டுக்கள் வரையிலும் இதன் மூலம் பணம் செலுத்த இயலும். இதில் முக்கியமான காரணி வங்கிகள் இதனின்றும் செயல்முறைப்படுத்துதலுக்கான கட்டணம் ஏதும் கழித்துக் கொள்வதில்லை என்பதுதான். இதைக் கண்டுபிடித்தவர்கள் எதிர்பார்த்த அளவு இது பிரபலம் அடையவில்லை. இருப்பினும், இந்த வில்லையானது தற்போது வெண்சுருட்டு இயந்திரங்கள் வாங்குனரின் வயதைச் சரிபார்க்க ஒரு வழியாகப் பயன்பட்டு வருகிறது. இது 2007ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் சட்டரீதியாக அமலாக்கப்பட்டுள்ளது. மேலும், கெல்ட்கார்ட்டெ வழி பணம் செலுத்துகையில் சிலவற்றில் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. எ.கா: பொதுப் போக்குவரத்துகளில் 10 சதத் தள்ளுபடி கெல்ட்கார்ட்டெ வழி பணம் செலுத்தும் முறைமையானது பாதுகாப்பு ஏற்பாடுகள் அற்றே உள்ளது. இதில் பயனர் ஒரு பின் குறியீடைச் செலுத்தவோ அல்லது விற்பனைச் சீட்டில் தனது கையெழுத்தினை இடவோ அவசியம் இல்லை. கெல்ட்கார்ட்டே தொலைந்து விடுவது ஒரு பணப்பை தொலைவதைப் போன்றதேயானது. அதை யார் கண்டெடுத்தாலும், தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஹாங்காங்

தொகு

பற்று அட்டைக்கு ஒப்பானதாக ஹாங்காங்கில் பரவலாகப் பயன்படும் முறை ஈபிஎஸ் என்பதாகும். இது வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் அட்டைகளை பற்று அட்டை போலப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது. ஹாங்காங்கில் இருக்கும் பெரிய வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளருக்கு ஈபிஎஸ்சுடன் உள்ள ஏடிஎம் அட்டையை அளிக்கின்றன.

ஹங்கேரி

தொகு

ஹங்கேரி நாட்டில் கடன் அட்டைகளை விட பற்று அட்டைகளே பரவலாக உள்ளன. பல ஹங்கேரியர்களும் தவறுதலாக, பற்று அட்டையை, ("பெடெட்டி கர்ட்யா") என கடன் அட்டைக்கு உரித்தான ("ஹிடெல்கர்ட்யா" என்னும்) சொல் கொண்டு வழங்குகின்றனர்.[18]

இந்தியா

தொகு

இந்தியாவில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வணிகரின் மீது கட்டணம் விதிக்கப்படுவதால், பற்று அட்டையின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. பெரும்பாலும், ஏடிஎம் சார்ந்த நடவடிக்கைகளிலேயே பற்று அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மையான வங்கிகள் விசா பற்று அட்டைகளை வழங்குகின்றன. சில வங்கிகள் (இந்திய அரசு வங்கி மற்றும் சிட்டிபாங்க் இந்தியா) ஆகியவை மாஸ்டிரோ அட்டைகளை வழங்குகின்றன. வழங்கிடும் வங்கி வழி நேரடியாக அல்லாது, விசா அல்லது மாஸ்டர்கார்ட் வலைப்பின்னல்கள் வழியாகவே பற்று அட்டை நடவடிக்கைகள் செலுத்தப்படுகின்றன.

இத்தாலி

தொகு

இத்தாலியில் பற்று அட்டைகள் மிகவும் பிரபலமாகவே உள்ளன. இவை கிளாசிக் அட்டை மற்றும் முன்னரே பணம் செலுத்தும் ப்ரீபெயிட் ஆகிய இரு வழிகளிலும் உள்ளன. இத்தாலியிலுள்ள முக்கியமான கிளாசிக் அட்டை போஜோபாங்கோமத் என்பதாகும். இத்தாலிய வங்கிகள் இதனை ஒரு கடன் அட்டையுடன் வழங்குகின்றன (இதனால், இரு வழி அட்டை கிடைக்கப்பெறுகிறது). இது உரிமையாளரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்திற்கு அணுக்கத்தினை அளிக்கிறது. பல கடைகளிலும் ஏற்கப்படுகிறது. ஆயினும், இணையத்தில் இதன் பயன்பாடு கடன் அட்டை என்னும் முறைமையிலேயே உள்ளது. மிகப் பரவலான பற்று அட்டை போஸ்ட் இத்தாலியனே எஸ்.பி. ஏ. வழங்கும் போஸ்ட்பே என்பதாகும். இது விசா எலக்ட்ரான் சுற்றில் செல்லுமை கொண்டுள்ளது. இதனை போஸ்ட் இத்தாலியனேவின் ஏடிஎம்களிலும் (போஸ்டாமட்) மற்றும் மின்துகள்-இணக்கம் கொண்டுள்ள உலகின் அனைத்து ஏடிஎம்களிலும் பயன்படுத்தலாம். இணையத்திலும் பிஓஎஸ் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கும் இதற்குக் கட்டணம் ஏதும் இல்லை. பிற நிறுவனங்கள் வழங்கும் அட்டைகளில், வோடோஃபோன் கேஷ்கார்ட், பாங்க் டி மிலானோ'ச் கார்ட்ட ஜீன்ஸ் மற்றும் லார்ட்ட மொனிட்டா ஆன்லைன் ஆகியவை அடங்கும்.

ஜப்பான்

தொகு

ஜப்பான் நாட்டில், துவக்கத்தில் ரொக்க இயந்திரங்களுக்காக வடிவமைத்த, பற்று அட்டைகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர்.cash cards (キャッシュカード kyasshu kādo?) இத்தகைய அட்டைகளின் பற்றுச் செயல்பாடு J-Debit (ジェイデビット Jeidebitto?) எனப்படுகிறது மற்றும் குறிப்பிட்ட சில வங்கிகளின் ரொக்க அட்டைகளை மட்டுமே பயன்படுத்தலாம். ஒரு ரொக்க அட்டையானது, விசா/ மாஸ்டர்கார்ட் அளவினதாகவே இருக்கும். அடையாளம் காண்பதற்காக, பணம் செலுத்துகையில் பயனர் தனது நான்கு இலக்க குறியீட்டு எண் ஒன்றை இட வேண்டும். 2000 ஆம் வருடம் மார்ச் ஆறாம் தேதி ஜப்பானில் ஜே-டெபிட் என்னும் பற்று அட்டை முறை துவங்கியது.

2006ஆம் ஆண்டு சுருகா பாங்க் ஜப்பானின் முதல் விசா டெபிட் சேவைகளைத் துவக்கியது. 2007ஆம் ஆண்டின் இறுதியில் விசா டெபிட் சேவைகளை ஈபாங்க் துவக்கும்.[19]

குவைத்

தொகு

குவைத் நாட்டில் அனைத்து வங்கிகளும் தமது வாடிக்கையாளருக்கு ஒரு பற்று அட்டையை வழங்குகின்றன. இந்த அட்டை நெட் என்னும் வர்த்தகக் குறி கொண்டுள்ளது. இதுவே குவைத்தில் மைய ஆளியாகும். நெட் (KNET) அட்டை வழி நடவடிக்கைகள் வாடிக்கையாளர் மற்றும் வணிகர் ஆகிய இருதரப்பினருக்குமே இலவசமாகும். இதனால், மிகக் குறைந்த மதிப்புள்ள நடவடிக்கைகளுக்கும் நெட் அட்டை பயனாகிறது. நெட் அட்டைகள் மாஸ்டிரோ அல்லது விசா எலக்டிரான் என்பனவற்றோடு இணை வர்த்தகக் குறி பெறுகின்றன. இதன் காரணமாக, குவைத்தில் இவற்றிற்கு ஆதரவளிக்கும் எந்த முனைமையிலும் அதே அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நெதர்லாந்து நாடுகளில்

தொகு

நெதர்லாந்து நாட்டில் எஃப்ட்போஸ் பயன்பாடு பின்னென் என வழக்கப்படுகிறது. (அதாவது தனிப்பட்ட அடையாள எண் எனப் பொருள்படுவதான பின் என்னும் சொல்லிலிருந்து இது பெறப்பட்டது). இவ்வாறான பின்கள் ஏடிஎம் நடவடிக்கைகளில் பயன்படுகின்றன. இதனை எஃப்ட்போஸ் ஒரு வர்த்தகக் குறியீடாக அறிமுகம் செய்யினும், இச்சொற்றொடர் பலராலும் மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. 1987ஆம் ஆண்டு துவங்கிய இந்த அமைப்பில் 2006ஆம் வருட நிலவரத்தின்படி, 166,375 முனைமைகள் நாடெங்கிலும் உள்ளன. இவற்றில் சந்தைகளில் சேர்ப்பீடு சேவைகளில் ஈடுபடும் நடமாடும் முனைமைகளும் அடங்கும். அனைத்து வங்கிகளும் எஃப்ட்போசிற்கு ஏற்புடையதான ஒரு பற்று அட்டையினை நடப்புக் கணக்குகளுடன் வழங்குகின்றன.

பின் (PIN) நடவடிக்கைகள் பொதுவாக வாடிக்கையாளருக்கு இலவசமானவையே. ஆயினும், சில்லறை வணிகருக்கு ஒவ்வொரு நடவடிக்கைக்குமாகவும் மற்றும் மாதாந்திரமாகவும் கட்டணம் விதிக்கப்படுகிறது. அனைத்து வங்கிகளையும் தனது உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஈக்வென்ஸ் என்னும் கழகம் இந்த அமைப்பை இயக்குகிறது. 2005ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் வரை இதற்காக கட்டணமும் வசூலித்து வந்தது. தனியுரிமை அதிகாரத்தின் தவறான பயன்பாடு பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலிறுப்பாக இது ஒப்பந்த பொறுப்புகளை தனது உறுப்பினர் வங்கிகளுக்கு அளித்துவிட்டது. இவை இப்போது போட்டியின் அடிப்படையிலான ஒப்பந்தங்களை வழங்குகின்றன. ஈக்வென்ஸின் சட்ட பூர்வமான முன்னோடியான இண்டர்பே 2004ஆம் ஆண்டு 47 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. ஆயினும் இந்த அபராதம் பிற்பாடு கைவிடப்பட்டது. வங்கிகளுக்கான அபராதம் 17 மில்லியன் யூரோ என்பதிலிருந்து 14 மில்லியன் யூரோவாகக் குறைந்தது. நடவடிக்கையின் அளவைப் பொறுத்து, ஒரு நடவடிக்கைக்கான கட்டணம் ஐந்து முதல் பத்து யூரோ செண்ட்டுகள் வரை உள்ளது.

நெதர்லாந்தில் கடன் அட்டைப் பயன்பாடு மிகவும் குறைவே. பெரும்பாலான கடன் அட்டைகளை எஃப்ட்போஸ் அமைப்பில் பயன்படுத்த இயலாது அல்லது அவை வாடிக்கையாளருக்கு மிக அதிகக் கட்டணம் விதிக்கின்றன என்பதே காரணம். எப்போதுமே என்று கூற இயலாவிடினும், பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலுமே பற்று அட்டைகளை எஃப்ட்போஸ் அமைப்பில் பயன்படுத்தலாம். பெரும்பாலான பற்று அட்டைகள் மாஸ்டிரோ அட்டைகளாக உள்ளன.

மின்னணு பணப்பை அட்டை (இவை சிப்நிப் எனப்படுகின்றன) 1996ஆம் ஆண்டு அறிமுகமாயின. ஆயினும், இவை பிரபலம் அடையவே இல்லை.

நியூசிலாந்து

தொகு

நியூசிலாந்து நாட்டில் விற்பனை முனைமையில் மின்னணு நிதிப்பெயர்ச்சி என்னும் எஃப்ட்போஸ் அமைப்பு மிகவும் பிரபலமானதாக உள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் வேறு எந்த நாட்டினையும் விட[20], ஒரு நபருக்கான பற்று அட்டை முனைமைகள் இங்கு அதிக அளவில் உள்ளன. சில்லறை வணிகத்தில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக இது பயன்படுத்தப்படுகிறது.[21] மிகப் பெரும் அளவில் எஃப்ட்போஸ் வலைப்பின்னல் வழங்குபவரின் கூற்றுப்படி, "பிற எந்த நாட்டினரையும் போலவே நியூசிலாந்து மக்கள் எஃப்ட்போஸ் பயன்படுத்துகின்றனர்."[22]

நியூசிலாந்தில் ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட எஃப்ட்போஸ் அட்டைகளை வைத்திருப்பது அரிதான நிகழ்வல்ல. ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட (குறைந்த பட்சமாக 100 அல்லது அதற்கு மேலான) எண்ணிக்கையில் எஃப்ட்போஸ் மூலமான நடவடிக்கைகளுக்கு வங்கிகள் நிலையான மாதக் கட்டணத்தை வசூலிக்கின்றன. கிருத்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் பெரும் அளவிலான நிதிசார் நடவடிக்கைகளை எஃப்ட்போஸ் முறைமை கொண்டு கையாள இயலும். இந்த வலைப்பின்னல்கள் மிகவும் நுணுக்கமானதாகவும், பாதுகாப்பு அளிப்பது மற்றும் அதிக அளவு நடவடிக்கைகள் நடைபெறும்போதும் அணுக்கத்திற்கான இடையூறுகளைக் குறைப்பது போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளைக் கொண்டுள்ளது.

அநேகமாக அனைத்து சில்லறை வடிகால்களும், குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், பால்பொருள் விற்பனைக் கடைகள், சேவை நிலையங்கள் மற்றும் மதுச்சாலைகள் ஆகியவை எஃப்ட்போஸ் முனைமைகளைக் கொண்டுள்ளன வாடகை ஊர்தி இயக்காளர்கள், ஒரு நிகழ்வின்போது நிகழ்விடத்தில் வணிகம் மேற்கொள்வோர், ஏன் பிஸ்ஸா என்னும் உணவுப் பொருளை வழங்குவோரும் கூட நடமாடும் எஃப்ட்போஸ் முனைமைகளைக் கொண்டுள்ளனர்.

சிறிய மற்றும் பெரும் அளவிலான நடவடிக்கைகள் அனைத்திற்குமே நியூசிலாந்து மக்கள் எஃப்ட்போஸினைப் பயன்படுத்துகின்றனர். ஒரு 50 செண்ட்டுகள் (என்இஜட்டி (NZD)) அளவிலான ஒரு நடவடிக்கைக்குக் கூட ஒரு நியூசிலாந்துக் குடிமகன் எஃப்ட்போஸ் பயன்படுத்துவதைப் பரவலாகவே காணலாம். காரணம், செலவு செய்வது என்பதன் மையப் பொருளாகவே எஃப்ட்போஸ் மாறிவிட்டதேயாகும். அரிதான வலைப்பின்னல் இடையூறுகளினால் மிகுந்த கால தாமதமும், அசௌகரியமும் மற்றும் வணிகர்களுக்கு வருமான இழப்பும் உண்டாகும்போது அவர்கள் வலைப்பின்னல் மீண்டும் சேவையளிக்கத் துவங்கும் வரையிலும் 'ஜிப்-ஜாப்" என்னும் தேய்ப்பு இயந்திரங்கள் கொண்டு எஃப்ட்போஸ் தொடர்பான நடவடிக்கைகளைச் செயல் முறைப்படுத்த வேண்டும்.[23] உருமாதிரியாக உரைப்பதெனின், ஆஸ்திரேலியா அல்லது பிற நாடுகளில் உள்ளதைப் போல, நியூசிலாந்து வணிகர்கள் ஒவ்வொரு நடவடிக்கைக்குமாகத் தனித்தனியாகக் கட்டணம் செலுத்துவதில்லை. நடவடிக்கை மீதான கட்டணத்தை வாடிக்கையாளரே ஏற்கிறார் மேலும் சில்லறை வணிகர்கள் கருவிக்கான வாடகைக் கட்டணமாக ஒரு நிலையான மாதக் கட்டணம் செலுத்துகின்றனர். மாணவர்கள் மற்றும் 18 வயதிற்குக் குறைந்த குழந்தைகளுக்கு மின்னணுசார் நடவடிக்கைகளுக்கு மிகவும் குறைந்த கட்டணமே இருப்பதால், அல்லது இலவசமாகவே இருப்பதால், இளைய தலைமுறையினரிடம் இவ்வாறான எஃப்ட்போஸ் பயன்பாடு மிகுந்த அளவில் பரவலாக உள்ளது. அண்மைக் காலங்களில், பெரும் வங்கிகள் எஃப்ட்போஸ் நடவடிக்கைக்கான கட்டணமற்ற கணக்குகளை வழங்கத் துவங்கியுள்ளன.

பாங்க் ஆஃப் நியூசிலாந்து எஃப்ட்போஸ் என்பதை 1985ஆம் ஆண்டு, பெட்ரோல் நிலையங்களில் வெள்ளோட்டம் போன்றதொரு நிகழ்வுகளுடன் நியூசிலாந்தில் துவக்கியது.

எஃப்ட்போஸ் முதன்மை வலைப்பின்னல்கள் வழி இயக்கப்படுகிறது. ஏஎன்இஜட் உரிமை கொண்டுள்ள எஃப்ட்போஸ் என்இஜட் மற்றும் ஏஎஸ்பி பாங்க் உரிமை கொண்டுள்ள பேமார்க் லிமிடட் (முன்னர் எலெக்டிரானிக் டிரான்சாக்ஷன் சர்வீசஸ் லிமிடட் என இது இருந்தது) மற்றும் பாங்க் ஆஃப் நியூசிலாந்த் உரிமை கொண்டுள்ள வெஸ்ட்பாக். பேமார்க் வலைப்பின்னல் நியூசிலாந்தில் நிகழும் எஃப்ட்போஸ் நடவடிக்கைகளில் 75 சதவிகிதத்தைத் தனது பேமார்க் எஃப்ட்போஸ் வலைப்பின்னல் வழி செயல்முறைப்படுத்துகிறது. இதற்கு 73,000க்கும் அதிகமான விற்பனை முனைமைகள் உள்ளன.[24]

மின்னணு வழி பணம் செலுத்தும் முறை 1989ஆம் ஆண்டு நியூசிலாந்தில் அறிமுகமானது துவங்கி, எஃப்ட்போஸ் வழியிலான ஐந்தாவது மில்லியன் பணம் செலுத்துதல் 2006ஆம் வருடம் ஜூலைத் திங்கள் ஈடிஎஸ்எல்/ பேமார்க் எஃப்ட்போஸ் வலைப்பின்னலில் நிகழ்ந்தது.[25]

2007ஆம் ஆண்டு மே மாதம் இணையம் வழியாக பாதுகாப்பான முறையில் எஃப்ட்போஸ் வழி நடவடிக்கைகளைக் கையாளும் முதல் இணைய நெறிமுறை (IP)/ அகன்ற அலைவரிசை சான்றளிக்கப்பட்ட முதல் முனைமை என பேமெண்ட் எக்ஸ்பிரஸ் சான்றளிக்கப்பட்டது.

இருப்பினும், பொது இணைய வழியில் எஃப்ட்போஸ் நடவடிக்கைகளின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் மற்றும் விருப்புறுதி தொடர்பான செலவுகள் மற்றும் (எண் சுழற்று) முனைமைக் கருவி மாற்றியமைத்தல் ஆகியவை நியூசிலாந்தில் ஐபி ஊடகத்தின் வளர்ச்சியினைக் குறைத்துள்ளன. மெர்ச்சண்ட் ஐபி சர்வீசஸ் (MIPS) என்னும் ஒரு நிறுவனம் இதற்கு மாற்றாக ஒரு ஐபி-பீஓஎஸ் தீர்வினை அளிக்கிறது. இது மாற்றியமைக்கத் தேவைப்படாத விறுப்புறுதி (எண் சுழற்று) முனைமைகளை அளிக்கிறது. பிசிஐக்கு இணக்கம் கொண்டதும் மற்றும் பே மார்க் சான்றளிக்கப்பட்டதுமான எம்ஐபிஎஸ் ஐபி-பிஓஎஸ் முறைமையில் ஒரு எம்ஐபிஎஸ் வெப்னாக் விருப்புறுதி எஃப்ட்போஸ் முனைமையுடன் இணைக்கப்பட்டு, பணம் செலுத்துதல் தொடர்பான பாதுகாப்பினை வங்கி விசைக்கு மாற்றுமுன், எண் சுழற்று நடவடிக்கையை தரவு என்பதாக ஐபிக்கு மாற்றுகிறது.

2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேமார்க் நிறுவனம் பேகோ பரணிடப்பட்டது 2008-01-06 at the வந்தவழி இயந்திரம் என்னும் மெய்ம்மையற்ற பணப்பை செலுத்தமைப்பு ஒன்றுடன் கூட்டாக இணைந்து நியூசிலாந்தின் முதல் பற்று அல்லது "சேமித்த மதிப்பு" அமைப்பினை நேரடிக் கணினிக் கொள்முதலுக்காக உருவாக்கியது.

உலகில் முதலில் வடிவமைத்த எஃப்ட்போஸ் அமைப்புகளில் நியூசிலாந்தின் எஃப்ட்போஸ் அமைப்பும் ஒன்றாகும். இதில் உள்ள முரண் என்னவெனில், பிற நாடுகளில் இந்த முறைமை உருவாகும்போது அவற்றின் அமைப்புகளிலிருந்து அதிகமாக எதுவுமே இதில் கொள்ளப்படவில்லை என்பதே. அட்டைகளை நியூசிலாந்திற்கு உள்ளாக மற்றும் ஒரு வணிக முனைமையில் இயற்பொருளாக மட்டுமே பயன்படுத்த இயலும். இதற்குப் பதிலிறுப்பாக பெரும்பான்மையான வங்கிகள் மாஸ்டிரோ என்னும் கூட்டுக் குறியீடு கொண்ட எஃப்ட்போஸ் அட்டைகளை வழங்கத் துவங்கியுள்ளன. இவற்றை அயல்நாடுகளிலும் பயன்படுத்தலாம். 2009ஆம் ஆண்டு பல வங்கிகளும் எஃப்ட்போஸ் அட்டைகளையும், மற்றும் விசா டெபிட் அமைப்பு வசதி கொண்ட நியூசிலாந்து எஃப்ட்போஸ் அட்டைகளையும் அறிமுகம் செய்தன. இதன் மூலம் வாடிக்கையாளர் அவற்றை நேரடிக் கணினி முறைமையிலும் மற்றும் அயல் நாடுகளிலும் பயன்படுத்தலாம்.

ஃபிலிப்பைன்ஸ்

தொகு

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மூன்று தேசிய ஏடிஎம் வலைப்பின்னல் குழுமங்களும் தனியுடைமையான குறியீட்டு எண்சார் பற்றினை வழங்குகின்றன. 1987ஆம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பேமெண்ட் சிஸ்டம் இதனை முதலில் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மெகாலிங்க் மற்றும் பேலிங்க் ஆகியவை 1993ஆம் ஆண்டும் மற்றும் பாங்க்நெட் 1994ஆம் ஆண்டு விற்பனை முனைமையுடனும் வழங்கலாயின.

எக்ஸ்பிரஸ் பேமெண்ட் சிஸ்டம் அல்லது ஈபிஎஸ் இதில் முன்னோடியாகும். 1987ஆம் ஆண்டு இந்த நிறுவனம் பாங்க் ஆஃப் தி ஃபிலிப்பைன் ஐலேன்ட்ஸ் என்னும் வங்கியின் சார்பாக இந்தச் சேவையினைத் துவக்கியது. 2005ஆம் ஆண்டின் பிற்பகுதிகளிலும் நீள்வதாக உள்ள இந்த ஈபிஎஸ் சேவை பிற எக்ஸ்பிரஸ்னெட் உறுப்பினர்களையும் உள்ளடக்கியுள்ளது: பாங்கோ டி ஓரோ மற்றும் லாண்ட் பாங்க் ஆஃப் தி ஃப்லிப்பைன்ஸ். தற்போது இவர்கள் தங்களது அட்டையின் உடைமையாளர்களுக்காக 10,000 முனைமைகளை இயக்குகிறார்கள்.

1993ஆம் ஆண்டு மெகாலிங்க் பேலிங்க் எஃப்ட்போஸ் அமைப்பினைத் துவக்கியது. குழுமத்தின் சார்பில் சமதையான அட்டை வலைப்பின்னல்கள் முனைமைச் சேவைகளை வழங்குகின்றன. பெரும்பாலும் மனிலா நகரில், 2,000 முனைமைகளில் இச்சேவை கிடைக்கப் பெறுகிறது.

பாங்க்னெட் தங்களது விற்பனை முனைமை அமைப்பை 1994ஆம் ஆண்டு நாட்டின் முதல் குழும-இயக்க எஃப்ட்போஸ் சேவையாகத் துவக்கியது. ஃபிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் 1,400 இடங்களில் இச்சேவை கிடைக்கப் பெறுகிறது. இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகளில் உள்ள நகராட்சிகளும் அடங்கும். 2005ஆம் ஆண்டு பாங்க்நெட், சீனக் குடியரசின் ஒரே ஏடிஎம் விசையான சைனா யூனியன்பே நிறுவனத்திற்கு உள்ளூர் வாயிலாக சேவை புரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இதன் மூலம் சுமார் ஒரு பில்லியன் சீன ஏடிஎம் அட்டையின் உடைமையாளர்கள் பாங்க்னெட் ஏடிஎம்களையும் எஃப்ட்போஸ்களையும் அனைத்து எஸ்எம் பெரும் அங்காடிகளிலும் பயன்படுத்த இயலும்.

யூனியன் பாங்க் ஆஃப் தி ஃபிலிப்பைன்ஸ் வங்கி விசா அட்டைகளை வழங்குகிறது. (ஈ-வேலட் மற்றும் இயோன்), சினாடிரஸ்ட், ஈக்விகாம் சேவிங்ஸ் பாங்க் (கீகார்ட் மற்றும் கேஷ் கார்ட்), பாங்கோ டி ஓரொ, ஹெச்எஸ்பிசி, ஹெச்எஸ்பிசி சேவிங்க்ஸ் பாங்க் மற்றும் ஸ்டெர்லிங் பாங்க் ஆஃப் ஏஷியா (விசா ஷாப்அண்ட்பே ப்ரீபெய்ட் அண்ட் டெபிட் கார்ட்ஸ்). யூனியன் பாங்க் வழங்கும் ஃபிலிப்பைன் அட்டைகள் மற்றும் ஈக்விகாம் சேவிங்ஸ் பாங்க் அண்ட் ஸ்டெர்லிங் பாங்க் ஆஃப் ஏஷியா வழங்கும் ஈஎம்வி அட்டைகள் ஆகியவற்றை இணைய கொள்முதல்களிலும் பயன்படுத்தலாம். ஸ்டெர்லிங் பாங்க் ஆஃப் ஏஷியா தனது முதலாவதான முன்னரே பணம் செலுத்திய மற்றும் பற்று விசா அட்டைகளை ஈஎம்வி சில்லுடன் வெளியிட்டுள்ளது. பாங்கோ டி ஓரியோ மாஸ்டர்கார்ட் பற்று அட்டைகளை வழங்குகிறது. செக்யூரிட்டி பாங்க் (கேஷ்லிங்க் மற்றும் கேஷ் கார்ட்) மற்றும் ஸ்மார்ட் கம்யூனிகேஷன்ஸ் (ஸ்மார்ட் மணி) ஆகியவற்றை பாங்கோ டி ஒரொவின் கூட்டுறவுடன் வழங்குகின்றன. பிபிஐ என்பதானது (எக்ஸ்பிரஸ் கேஷ்) மற்றும் செக்யூரிட்டி பாங்க் (கேஷ்லிங்க் பிளஸ்) மாஸ்டர்கார்ட் மின்னணு அட்டைகளை வழங்குகின்றது. ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அனைத்து விசா மற்றும் மாஸ்டர்கார்ட் அடிப்படையிலான பற்று அட்டைகளும் வார்ப்புருவற்று, "மின்னணு பயன்பாட்டிற்கு மட்டுமே" (விசா/மாஸ்டர்கார்ட்) என்றோ அல்லது "மாஸ்டர்கார்ட் மின்னணு ஏற்கப்படும் இடத்தில் மட்டுமே" (மாஸ்டர்கார்ட் மின்னணு) என்றோ குறிக்கப்படுகின்றன.

போலந்து

தொகு

போலந்து நாட்டில், விசா, மாஸ்டிரோ அல்லது வார்ப்புருவற்ற விசா எலெக்டிரான் அல்லது மாஸ்டிரோ போன்ற சர்வதேச அட்டைகளுக்குப் பதிலாக போல்கார்ட் போன்ற உள்ளூர் சார்ந்த அட்டைகளையே பெரும்பான்மையோர் கையாளுகின்றனர். போலந்தின் பல வங்கிகளிலும் இணைய மற்றும் மோட்டோ நடவடிக்கைகள் வார்ப்புருவற்ற அட்டைகள் கொண்டே நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்கள் இணைய / மோட்டோ வழி நடவடிக்கைகளுக்கு மட்டுமே வார்ப்புரு கொண்ட அட்டையை வாங்குகின்றனர்.[சான்று தேவை] வார்ப்புருவற்ற அட்டைகளில் மோட்டோ நடவடிக்கைகளைத் தடுக்காத வங்கிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

ரஷ்யா

தொகு

விசா மற்றும் மாஸ்டர்கார்ட் ஆகியவற்றைத் தவிர்த்து ஸ்மார்ட் கார்ட் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான சில உள்ளூர் பணம் செலுத்தும் அமைப்புகள் ரஷ்யாவில் உள்ளன.

உண்மையில், இது ஷெர்பாங்கின் பணம் செலுத்தும் முறைமையே.

இந்த அட்டை வர்த்தகக்குறியீடு 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஜொலோடயா கொரானா சிஎஃப்டி தொழில்நுட்ப அடிப்படையிலானது.

இதன் பயன்பாடு குறைந்து வருகிறது. இவை விசா அல்லது மாஸ்டர்கார்ட் ஆகிய கணக்குகளாக மறுவழங்கீடு செய்யப்படுகின்றன.

ஏறத்தாழ ஒவ்வொரு நடவடிக்கையுமே, அதன் வர்த்தகக்குறி அல்லது அமைப்பு எதுவாக இருப்பினும், ஒரு உடனடி பற்று நடவடிக்கையாகத்தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்புகளுக்கு உள்ளார்ந்துள்ள பற்று-அற்ற நடவடிக்கைகளுக்கு செலவு வரம்புகள் உண்டு. உருமாதிரியான விசா அல்லது மாஸ்டர்கார்ட் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் இவை மிகவும் கண்டிப்பான வரம்பு கொண்டுள்ளன.

சவூதி அரேபியா

தொகு

சவூதி அரேபியாவில் அனைத்து பற்று அட்டை நடவடிக்கைகளும், அந்த நாட்டில் உள்ள ஒரே மின்னணு பணம் செலுத்து அமைப்பான சவூதி பேமெண்ட்ஸ் நெட்வொர்க் (SPAN) என்பதன் மூலமே செலுத்தப்படுகின்றன. இந்த வலைப்பின்னலுடன் முழுதுமாக இணக்கம் கொண்ட அட்டைகளை அனைத்து வங்கிகளும் வழங்க வேண்டும் என்று சவூதி அரேபியன் மானிட்டரி ஏஜன்சி கோருகிறது. இது நாடெங்கிலும் உள்ள அனைத்து விற்பனை முனைமைகளையும் ஒரு மையச் செலுத்து விசை வழி இணைக்கிறது. இது, அட்டை வழங்குனர், உள்ளூர் வங்கி, விசா, ஏமெக்ஸ் அல்லது மாஸ்டர்கார்ட் ஆகியவற்றிற்கு நிதிசார் நடவடிக்கைகளைத் தொடர்புறுத்துகிறது.

பற்று அட்டைகளுக்கு மட்டும் அல்லாது ஏடிஎம் மற்றும் கடன் அட்டை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இது பயனாகிறது.

சிங்கப்பூர்

தொகு

சிங்கப்பூரின் பற்று சேவைகளை, அந்நாட்டின் முதன்மை வங்கிகளான டிபிஎஸ், கெப்பல் பாங்க், ஓசிபிசி, ஓயூபி, பீஓஎஸ்பி, டாட் லீ பாங்க் மற்றும் யூஓபி ஆகியவற்றால், 1985ஆம் ஆண்டு மையப்படுத்திய ஒரு மின்னணு வழி செலுத்து முறைமைக்காக தொடங்கிய நெட்வொர்க் ஃபார் எலெக்டிரானிக் டிரான்ஸ்ஃபர்ஸ் (Network for Electronic Transfers (NETS)) என்னும் வலைப்பின்னல் மேலாண்மை செய்கிறது.பற்று அட்டைகளைப் பயன்படுத்தி நீங்கள் பொருட்களை வாங்குகையில் அது நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அதற்கான பணத்தைக் கழித்து விடும்.

ஐக்கிய இராச்சியம்

தொகு

ஐக்கிய இராச்சியத்தில் பற்று அட்டைகள் (ஒரு ஒருங்கிணைந்த எஃப்ட்போஸ் அமைப்பாக) சில்லறை வர்த்தகச் சந்தையில் நிலைபெற்று, கற்கள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டமைந்த இயற்பொருள் உருக்கொண்ட கடைகளில் (bricks and mortar) மட்டும் அல்லாது மற்றும் இணையக் கடைகளிலும் ஏற்கப்படுகின்றன எஃப்ட்போஸ் என்னும் சொல்லினை (அல்லது விசாவைக் குறிக்கையில் சுவிட்ச் என்பதை) பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்துவதில்லை. பற்று என்னும் சொல்லே பயன்படுகிறது. வர்த்தகச் சுற்றில் உள்ள அட்டைகளில், மாஸ்டிரோ (முன்னர் சுவிட்ச் எனப்பட்டது), சோலோ, விசா டெபிட் (முன்னார் விசா டெல்ட்டா எனப்பட்டது) மற்றும் விசா எலெக்டிரான் ஆகியவை அடங்கும். ஐக்கிய இராச்சியத்தில் எஃப்ட்போஸ் நடவடிக்கைகளுக்காக வங்கிகள் வாடிக்கையாளருக்குக் கட்டணம் விதிப்பதில்லை. ஆனால், சில சில்லறை வணிகர்கள், குறிப்பாக சிறு தொகை கொண்ட நடவடிக்கைகளில், கொஞ்சம் பணம் பார்த்து விடுவது என்பது நிகழத்தான் செய்கிறது. வர்த்தகச் சுற்றில் உள்ள பற்று அட்டைகள் அனைத்தையும், ஐக்கிய இராச்சியம் சில்லு மற்றும் குறியீட்டு எண் முறைமைக்கு மாற்றி விட்டது. (மாற்றுத் திறன் கொண்ட சிலருக்கு வழங்கப்பட்ட சில்லு மற்றும் கையெழுத்து அட்டைகள் இதற்கு விதிவிலக்கு.) ஈஎம்வி பொதுத்தர நிலையின்படி, நடவடிக்கையின் பாதுகாப்பினை அதிகரிக்க இவ்வாறு செய்யப்பட்டது. இருப்பினும், இணையம்சார் நடவடிக்கைகளுக்கு குறியீட்டு எண் தேவைப்படுவதில்லை.

ஐக்கிய இராச்சியத்தில், 1980ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் வங்கிகள் பற்று அட்டைகளை வழங்கத் துவங்கின. விற்பனை முனைமையில் பயன்படும் காசோலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே இது துவக்கப்பட்டது. காரணம், காசோலைகளைச் செயல்முறைப்படுத்துவது வங்கிகளுக்கு அதிகச் செலவை விளைப்பதாகும். இதனை முதலில் பார்க்கிளேஸ் என்னும் வங்கியே பார்கிளேஸ் கனெக்ட் என்னும் அட்டை கொண்டு செயல்படுத்தியது. பிற நாடுகள் அனைத்திலும் உள்ளதைப் போல, ஐக்கிய இராச்சியத்திலும், கடன் அட்டைகளை ஏற்க வணிகர்கள் செலுத்தும் கட்டணமானது நடவடிக்கைத் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதமாகும்.[26] இது வட்டியற்ற கடன் கால அளவினை வாடிக்கையாளர்கள் பெற உதவுகிறது. மேலும், வெகுமதிப் புள்ளிகள், இலவச விமானப் பயணம் மற்றும் பணம் திரும்பப் பெறுதல் ஆகிய ஊக்கத் திட்டங்களுக்கும் நிதிவசதி அளிப்பதாக உள்ளது. பற்று அட்டைகள் பொதுவாக இத்தகைய பண்புக்குறிகளைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இவற்றை ஏற்க வணிகர்கள் செலுத்தும் கட்டணம், அதைச் சார்ந்த நடவடிக்கையின் தொகை எவ்வளவாக இருப்பினும், குறைவாகவே உள்ளது.[26] இதன் பொருளாவது, மிகச் சிறிய விற்பனைகளுக்கு ஒரு வணிகர் பற்று அட்டையை விட கடன் அட்டையை ஏற்பது மலிவானது என்பதேயாகும். பற்று அட்டைகள் (விலை வேறுபாடு) ஆணை 1990 என்பதன் மூலமாக, பணம் செலுத்தும் முறைமையைப் பொறுத்து வெவ்வேறு அளவு கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் உரிமையை வணிகர்கள் வென்றாலும், ஐக்கிய இராச்சியத்தில் கடன் அட்டையை விட பற்று அட்டைக்கு குறைவான கட்டணம் விதிக்கும் வணிகர்கள் மிகக் குறைவே. இதற்குக் குறிப்பான விதிவிலக்குகள் மலிவு விமானப் பயண நிறுவனங்கள், பயண முகவர்கள் மற்றும் ஐகேஈஏ ஆகியவையே.[27] ஐக்கிய இராச்சியத்தில் பற்று அட்டைகள், ஐக்கிய இராச்சியம் வழங்கும் கடன் அட்டைகள் கொண்டுள்ள சில சாதகங்கள் அற்றே உள்ளன. (வெகுமதிப் புள்ளிகள், இலவச விமானப்பயணம், ரொக்கம் திரும்பப் பெறுதல் போன்ற) இலவச ஊக்கத் திட்டங்கள், நுகர்வோர் கடன் சட்டம் 1974 என்பதன் 75ஆம் பிரிவின் கீழ் பரணிடப்பட்டது 2005-10-25 at the வந்தவழி இயந்திரம், தவறும் வணிகருக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஐக்கிய இராச்சியத்தில் கடன் அட்டைகளை ஏற்கும் நிறுவனங்கள் அனைத்தும் பற்று அட்டைகளையும் (அவை எப்போதும் சோலோ மற்றும் விசா எல்க்டிரான் என்பதாக இல்லாவிடினும்) ஏற்கின்றன. ஆயினும், சிறுபான்மையான வணிகர்கள், செலவு தொடர்பான காரணங்களுக்காக, கடன் அட்டையை ஏற்காது, பற்று அட்டைகளையே ஏற்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்க நாடுகள்

தொகு

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் எஃப்ட்போஸ் அனைத்து இடங்களிலும் பற்று என்றே எளிமையாக விளிக்கப்படுகிறது. ஏடிஎம் வலைப்பின்னலை இயக்கும் வங்கி-இடை வலைப்பின்னலே பீஓஸ் வலைப்பின்னலையும் இயக்குகிறது. பல்ஸ், நைஸ், மாக், டைம், ஷாஜம், ஸ்டார், போன்ற பெரும்பான்மையான வங்கி -இடை வலைப்பின்னல்கள் பகுதி சார்ந்து ஒன்றின் மேல் ஒன்று கவியாத வண்ணம் உள்ளன. இருப்பினும், அவை ஒன்றின் அட்டைகளை மற்றொன்று ஏற்பதற்கான ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளன. இதன் பொருள் ஒரு வலைப்பின்னல் வழங்கும் அட்டையானது, ஏடிஎம்/ பீஓஎச் அட்டைகளை ஏற்கும் எந்த இடத்திலும் செயல்படும் என்பதேயாகும். உதாரணமாக, ஒரு நைஸ் அட்டை பல்ஸ் பிஓஎஸ் முனைமை அல்லது ஏடிஎம்மிலும் இதைப் போன்றே நிலை மாறாகவும் செயல்படும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பற்று அட்டைகள் பலவும் விசா அல்லது மாஸ்டர்கார்ட் முத்திரையுடனேயே வழங்கப்படுகின்றன. இது கையெழுத்து-அடிப்படையிலான வலைப்பின்னல்களில் இதன் பயன்பாட்டினை அனுமதிக்கிறது.

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அட்டை தொலைந்து போதல் அல்லது திருடு போதல் ஆகிய நிகழ்வுகளில் அதன் உரிமையாளரின் கடப்பாடானது 50 யூஎஸ் டாலர்கள் வரையில் அமையும். அட்டை இவ்வாறு தொலைந்து அல்லது திருடு போனதை இரு வேலை நாட்களுக்குள் அட்டையை வழங்கிய வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.[28]

நேரடிக் கணினி அல்லாத கொள்முதல்களுக்கு வணிகர்கள் மீது விதிக்கப்படும் கட்டணம் மற்றும் நேரடிக் கணினி முறைமையிலான கொள்முதல்கள் மற்றும் காகிதக் காசோலைகள் ஆகியவற்றை வணிகர்கள் செய்முறைப்படுத்துகையில் அவை கட்டணம் அற்று இருப்பது ஆகியவற்றின் விளைவாக ஐக்கிய அமெரிக்க மாநில வணிகர்கள் விசா, மாஸ்டர்கார்ட் போன்று பற்று அட்டை செய்முறைப்படுத்துபவர்கள் சிலர் மீது வழக்குத் தொடுக்கத் தூண்டுதலானது. 2003ஆம் ஆண்டு, விசா மற்றும் மாஸ்டர்கார்ட் ஆகியவை பில்லியன் கணக்கில் டாலர்களை அளித்து இந்த வழக்குகளுக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்டன.[சான்று தேவை]

வாடிக்கையாளர்/ வணிகர் ஆகியோருக்கு கட்டணம் இன்றி இருப்பதனால், சில நுகர்வோர் "கடன்" நடவடிக்கைகளை மேற்கொள்வதையே விரும்புகின்றனர். மேலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் சில பற்று அட்டைகள் "கடன்" நடவடிக்கைகளுக்கு வெகுமதிப் புள்ளிகளை அளிக்கின்றன. (எ.கா: வாஷிங்டன் மியூச்சுவலின் "வாமூலா"[29] மற்றும் எஸ் அண்ட் டி வங்கியின் "விரும்பத்தக்க பற்று வெகுமதி அட்டை".[30] இருப்பினும், வணிகர்களுக்கு "கடன்" சார் நடவடிக்கைகளை செய்முறைப்படுத்துவதில் செலவுகள் அதிகம் இருப்பதனால், குறியீட்டு எண்ணை ஏற்கும் முனைமைகளில் பலவும் இவ்வாறான கடன்சார் நடவடிக்கைகளின் அணுக்கத்தைக் கடினமாக்கியுள்ளன. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வால்-மார்ட்டில் நீங்கள் ஒரு பற்று அட்டையைத் தேய்த்தால், அது உடனடியாக நேரடிக் கணினி முறைமையிலான பற்றிற்காக ஒரு குறியீட்டு எண் திரையைக் காட்டும். நேரடிக் கணினி முறைமை அல்லாத பற்று நடவடிக்கையை மேற்கொள்ள நீங்கள் "ரத்து செய்" என்னும் பொத்தானை அழுத்தி அத்திரையிலிருந்து விலகி பிறகு, அடுத்த திரையில் "கடன்" என்னும் பொத்தானை அழுத்த வேண்டும்.

பற்று அட்டைகளைப் பயன்படுத்துவதில் மற்றொரு பிரச்சினை, தாமாகவே காசோலைன் நிரப்பிக் கொள்ளும் நிலையங்களில் அவற்றைப் பயன்படுத்துவதாகும். தங்களது பற்று அட்டைகளில் எரிபொருளை வாங்க வாடிக்கையாளர்கள் விரும்பலாம். ஆயினும், அந்த நிலையத்தில் உள்ள கணினி அந்த வாடிக்கையாளர் கொள்முதல் செய்ய விரும்பும் எரிபொருளின் அளவை அறிந்திராது. எரிபொருள் குழாயை இயக்குவிக்க, வாடிக்கையாளர் தங்களது அட்டையை ஒரு அட்டை படிப்பானில் அளிக்க வேண்டும் (மேற்காணும் முறைகளைப் பார்க்கவும்). மேலும், ஒரு குறியீட்டு எண்ணையும் இட வேண்டியிருக்கலாம். அப்போதுதான், விற்பனை நடவடிக்கை முழுமை அடையவில்லை எனினும், குழாய் எரிபொருளை வெளியிடத் துவங்கும். எத்தனை எரிபொருள் விற்கப்படும் என்பதை கணினி அறிந்திருப்பதில்லை. வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் எத்தனை அளவு நிதி விஞ்சியிருக்கிறது என்பதும் அதற்குத் தெரியாது. உருமாதிரியான ஒரு விற்பனை நடவடிக்கையில், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை விட அதிகம் செலவழிக்கையில் (பற்று மூலமாகவோ அல்லது கடனாகவோ), அது "விற்பனை வேண்டாம்" என்னும் எச்சரிக்கையை வணிகருக்கு விடுப்பதில் விளையும். இதன் காரணமாக, அந்த விற்பனை நிகழாது போகும். தாமாகவே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் நிலையங்களில், எரிபொருளானது, வங்கியானது விற்பனையின் இறுதி விலையை அறிவதற்கு முன்னரே, வாடிக்கையாளரின் கிடங்கில் சேர்ந்து விடுகிறது. இந்தப் பிரச்சினைக்குப் பல தீர்வுகள் உள்ளன. உதாரணமாக, ஒரு வங்கிக் கணக்கில் பத்து டாலருக்கும் குறைவான தொகையே இருக்கையில், முன்னரே அங்கீகாரம் பெறும் ஒரு டாலர் மதிப்பிற்கான நடவடிக்கையை மறுப்பது மற்றும் குறிப்பிட்ட தொகைகளுக்கான நடவடிக்கைகளை அனுமதிப்பது ஆகியவையாகும். ஆயினும், விற்பனை நிகழ்விற்கு முன்பாகவே பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பிப்பது என்னும் முறையானது, பற்று அட்டை அமைப்பின் பிரச்சினைகளைப் பெருக்குவதாகவே உள்ளது. சில நேரங்களில், கடன்சார் நடவடிக்கைகளில் தரகு அதிகம் இருப்பதால், இவற்றில் எரிபொருள் நிலையம் உண்மையில் நட்டம் அடைவதாகவே விளையலாம். 1980ஆம் ஆண்டுகளில், நிலையத்தில் பணம் செலுத்தும் முறைமை துவங்கிய பிறகு பல எரிபொருள் நிலையங்கள் ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்குத் தள்ளுபடியை அறிவிக்கத் துவங்கின. ஆயினும், அது அவற்றின் ரொக்கம் சார்ந்த விற்பனைகளை அதிகரிக்காது போனதால், பெரும்பான்மையானவை அத்தகைய தள்ளுபடிகளை நிறுத்தி விட்டன.[சான்று தேவை]

2009-07-08: ஐக்கிய அமெரிக்க நாடுகளில் விசாவிற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்கள்.

விசாவிற்கான வணிகர்களின் ஒப்பந்தம் (The Merchants Agreement for Visa) (பக்கம் 9 அல்லது 14/141 பிடிஎஃப் வடிவில்) இவ்வாறு கூறுகிறது:

உங்களது ஏற்புடைமைப் பிரிவில் செல்லுமை கொண்ட விசா அட்டைகளை, கொள்முதலின் டாலர் தொகை எவ்வளவாக இருப்பினும், எப்போதும் ஏற்றுக் கொள்ளவும். விசா அட்டையை ஏற்பதற்காகக் குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச தொகைக்காக கட்டணம் விதிப்பது விசா விதிமுறைகளின் மீறலாகும்.[31]

எஃப்எஸ்ஏ, ஹெச்ஆர்ஏ மற்றும் ஹெச்எஸ்ஏ பற்று அட்டைகள்

தொகு

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் எஃப்எஸ்ஏ பற்று அட்டைகள் மருத்துவச் செலவினை மட்டுமே அனுமதிப்பவையாகும். சில வங்கிகள் தமது எஃப்எஸ்ஏ, எம்எஸ்ஏ மற்றும் ஹெச்எஸ்ஏ ஆகியவற்றிலிருந்து பணம் எடுப்பதை அனுமதிக்கின்றன. இவை விசா அல்லது மாஸ்டர்கார்ட் ஆகியவற்றின் முத்திரையைக் கொண்டுள்ளன. இருப்பினும், பற்று மற்றும் கடன் அட்டைகளை ஏற்கும் அனைத்து வணிக நிலையங்களிலும் இவை ஏற்கப்படுவதில்லை. எஃப்எஸ்ஏ பற்று அட்டையை ஏற்பவர் மட்டுமே இதனை ஏற்கின்றனர். தகுதி பெறாத அட்டைகளுக்கு விற்பனையை வரம்பிட, விற்பனை முனைமையில் வணிகர் மற்றும் பொருள் குறியீடுகள் இடப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குறிப்பிட்ட தேதியிட்ட சில சட்டங்களின்படி இது அவசியமாகும்). இதன் காரணமாகப் பின்னால் தொடர்வதான சோதனை மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றினால், வரிவிலக்குகளுக்கு ஆதாரம் அளிக்க இத்தகைய அறிக்கைகளைப் பயன்படுத்தலாம். தகுதியுள்ள கொள்முதல் ஒன்று நிராகரிக்கப்படும் நிகழ்வில், வேறொரு பணம் செலுத்தும் முறைமையைப் பயன்படுத்த வேண்டும் (அதாவது வேறொரு வங்கிக் கணக்கிற்கான காசோலையைப் பயன்படுத்திப் பின்னர் பணத்தைத் திரும்பப் பெற மனுச் செய்ய வேண்டும்). ஆனால், தகுதியற்றவை ஏற்கப்படும் நிகழ்வுகளே அதிகம். இவற்றிலுள்ள முரண் பின்னர் தணிக்கையில் வெளிப்படுகையில் தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கையில், வாடிக்கையாளரே இன்னமும் பொறுப்பாகிறார். ஐக்கிய மாநில நாடுகளின் பற்று அட்டை வணிகத்தில் ஒரு சிறிய, ஆனால் வளர்ந்து வரும் பகுதி நெகிழ்வுடைய செலவுக் கணாக்குகளான எஃப்எஸ்ஏ, ஆரோக்கியச் செலவுத் திரும்பப் பெறும் கணக்குகள் மற்றும் ஆரோக்கிய சேமிப்பீடுகள் போன்ற வரி ஆதரவுற்றவற்றிற்கு அணுக்கம் கொண்டிருப்பதை ஈடுபடுத்துகிறது. இத்தகைய பற்று அட்டைகளில் பலவும் மருத்துவச் செலவீனங்களானவையே. இருப்பினும், இவற்றில் சில ஆதரவில் இருப்போர் மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றிற்காகவும் கிடைக்கப் பெறுகின்றன.

பாரம்பரியமாக, எஃப்எஸ்ஏ (இவ்வகையான கணக்கீடுகளில் மிகவும் பழைமையானது), செலவினை ஏற்று அதற்கான பணம் செலுத்திய பிறகே திரும்ப அளிக்கப்பட்டு வந்தன. பெரும்பாலும் இது, பணியாளரின் ஊதியத்திலிருந்து பணம் கழிக்கப்பட்ட பிறகே நிகழ்வதாக உள்ளது. (எஃப்எஸ்ஏ என்பவை பொதுவாக ஊதியக் கழிப்பினால் நிதியுதவி அளிக்கப்படுபவை) இவ்வாறு மருத்துவ எஃப்எஸ்ஏ மற்றும் ஹெச்ஆர்ஏ ஆகியவை ஒரே தோற்றுவாயிலிருந்து இருமுறை பெறப்படுவதைத் தவிர்க்க, உள்ளார்ந்த வருமானச் சேவை (Internal Revenue Service (IRS)) அனுமதிக்கும் ஒரே வழி துல்லியமான மற்றும் தணிக்கைக்குட்பட்ட வருமான வரிச் சான்றிதழைத் தாக்கல் செய்வதே. பற்று அட்டையின் மீது உள்ள, "மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டுமே" எனக் கூறும் அறிக்கையானது பல காரணங்களினால் செல்லுமையற்றதாகிறது: (1) வாடிக்கையாளருக்கு உரித்தான வருமான வரிச் சலுகைகளுக்கு மொத்த கொள்முதலுமே தகுதியாகுமா என்பதை வணிகரோ அல்லது வழங்குகிற வங்கியோ நிர்ணயிக்க வழி ஏதுமில்லை; (2) இதை விரைவில் அறிய வாடிக்கையாளருக்கும் வழி ஏதுமில்லை; பெரும்பாலும், அவசியமான மற்றும் வசதிக்கான பொருட்கள் கலந்தே வாங்கப்படுகின்றன; ஆகவே அவர் தவறுகள் செய்வது எளிதானதே; (3) வாடிக்கையாளருக்கும் அட்டை வழங்கும் வங்கிக்கும் இடையிலான பிற ஒப்பந்தங்கள், பணம் செலுத்துதலை நடைமுறைப்படுத்துவதற்கு இடையில் வரலாம். இதனால், அதிகக் குழப்பங்கள் நேரிடலாம். (எடுத்துக் காட்டாக, தகுதியற்ற ஒரு பொருளை வாங்கியதற்காக ஒரு வாடிக்கையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அது அந்தக் கணக்கில் அவரது சேமிப்பின் மீதான சாத்தியமான சாதகங்களைக் குறைத்து விடும்). ஆகவே, தகுதியுற்ற பொருட்களைக் கொள்முதல் செய்ய மட்டுமே அட்டையைப் பயன்படுத்துவது என்பது வாடிக்கையாளருக்கு வசதியாக இருக்கலாம்; ஆனால், அந்த அட்டை எவ்வாறு உண்மையிலேயே பயன்படுத்தப்படலாம் என்பதனோடு அதற்குத் தொடர்பிருக்காது. எடுத்துக் காட்டாக, அங்கீகாரம் பெற்ற மருந்துக் கடை அல்ல என்பதனால் வங்கி ஒரு நடவடிக்கையை நிராகரித்து விட்டால், அட்டையின் உடைமையாளருக்கு அது தீங்கும் குழப்பமும் விளைவிப்பதாக அமையும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில், அனைத்து மருத்துவச் சேவைகளும் அல்லது வழங்கீடு செய்யும் கடைகளும் மிகச் சரியான தகவல்களை அளிப்பதாகக் கூற இயலாது. அதனால், ஒரு எஃப்எஸ்ஏ பற்று அட்டை வழங்குனர் ஒவ்வொரு நடவடிக்கையுமே ஏற்கலாம். அது நிராகரிக்கப்படுமாயின் அல்லது ஆவணம் தேவையான அளவு விதிமுறைகளின்பாற்படவில்லை எனில், அட்டையின் உடைமையாளர்கள் தாமே கைப்பட படிவங்களை அனுப்பலாம்.

மேலும் காண்க

தொகு

ஊடுகதிர் (பற்று அட்டை)

மேற்குறிப்புகள்

தொகு
 1. Säkra kortbetalningar på Internet | Nordea.se
 2. "e-kort". Archived from the original on 2010-04-13. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 3. Martin, Andrew (January 4, 2010). "How Visa, Using Card Fees, Dominates a Market". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2010/01/05/your-money/credit-and-debit-cards/05visa.html?em=&pagewanted=all. பார்த்த நாள்: 2010-01-06. 
 4. http://www.revenuetoday.com/story/no-check-please பரணிடப்பட்டது 2008-07-23 at the வந்தவழி இயந்திரம் No Check, Please
 5. http://accounting.smartpros.com/x59817.xml பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் Companies Use Debit Cards to Pay Workers
 6. 6.0 6.1 6.2 6.3 "Debit card facts". Archived from the original on 2010-07-29. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 7. Your Liability for Unauthorized Credit and Debit Card Charges
 8. "Fact Sheet 131: Credit Card vs. Debit Card". Archived from the original on 2010-05-29. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 9. Help |
 10. 10.0 10.1 "They Want You to Go Over Your Debit Limit". The Washington Post, Michelle Singletary, July 19, 2007. 2007-07-19. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/07/18/AR2007071802394.html. பார்த்த நாள்: 2010-05-01. 
 11. "MasterCard Maestro". Archived from the original on 2007-02-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
 12. http://www1.folha.uol.com.br/fsp/dinheiro/fi3004201007.htm
 13. [22] ^ [21]
 14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-21. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 15. FCAC - For the Industry - Reference Documents
 16. Dankortet fylder 25 år i dag
 17. 17.0 17.1 17.2 "PBS Årsrapport 2007" (PDF). Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 18. http://www.deccanherald.com/content/21014/rbi-fixes-five-free-atm.html
 19. "eBank Money Card - eBank Corporation(Japan)". Archived from the original on 2009-05-07. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 20. "Key Dates in Bank of New Zealands History - Bank of New Zealand". Archived from the original on 2009-10-15. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 21. "Payment and Settlement Services in New Zealand, September 2003, Reserve Bank of New Zealand" (PDF). Archived from the original (PDF) on 2009-09-30. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
 23. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 24. http://www.paymark.co.nz/cms_display.php?sn=154&st=1&pg=2972 பரணிடப்பட்டது 2010-06-05 at the வந்தவழி இயந்திரம் About Paymark
 25. "Paymark". Archived from the original on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
 26. 26.0 26.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-08-21. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-05-28. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 28. "Consumer Handbook to Credit Protection Laws: Electronic Fund Transfers". Archived from the original on 2010-02-14. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 29. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-12. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 30. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-05. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
 31. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-08-20. பார்க்கப்பட்ட நாள் 2010-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்று_அட்டை&oldid=3711567" இலிருந்து மீள்விக்கப்பட்டது