விசா டெபிட்
விசா டெபிட் (Visa debit) அட்டை என்பது விசா நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பற்று அட்டையாகும். இது நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை பாதுகாப்பாக பரிமாற உதவுகின்றது. இது வங்கிகளால் அளிக்கப்படும் பற்று அட்டை போலவே செயல்பட்டாலும், இவ்வட்டையைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் தொலைபேசி முலமாக இதர கடன் அட்டைகளைப் போல பொருட்களை வாங்க முடியும். இவ்வட்டையை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த முடியும் என விசா நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வட்டையைப் பயன் படுத்துவதற்கு வாடிக்கையாளர் தனது கணக்கில் பற்று வைத்திருத்தல் அவசியம். இவ்வட்டை வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தைச் செலுத்திவிடுவதால் இதர கடன் அட்டைகளைப் போல பணத்தை திரும்பச் செலுத்த வேண்டிய தேவை இல்லை. கடன் அட்டை பெற தகுதி இல்லாதவர்கள் இவ்வட்டையை எளிதாக வங்கிகள் மூலம் பெறமுடியும் என நம்பப்படுகின்றது. இவ்வட்டை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்தாலும் மற்றைய நாடுகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை, எனினும் கனடாவில் முதன் முதலாக கனேடியன் இம்பிரியல் வங்கி (CIBC) முலமாக 2010 நவம்பரில் வெளியிடப்பட்டது.