மில்லெனியம் பூங்கா

(மிலேனியம் பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மில்லெனியம் பூங்கா (Millenium Park) அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்துள்ள ஒரு பொது பூங்காவாகும். பொதுமக்கள் கூடுமிடமான இப்பூங்கா சிகாகோவின் மிச்சிகன் ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னதாக தொடருந்து நிறுத்துமிடமாக இருந்தது.[1] மிச்சிகன் அவன்யு, ரான்டொல்ப் தெரு, கொலம்பஸ் டிரைவ் மற்றும் ஈஸ்ட் மன்ரோ டிரைவ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு தரவுகளின் படி சிகாகோவில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் மில்லெனியம் பூங்கா கடற்படை தூண்சுவர்களுக்கு அடுத்த இடம் பெற்றிருந்தது.[2]

மில்லெனியம் பூங்கா
Map
வகைநகரப் பூங்கா
அமைவிடம்கிரான்ட் பார்க்(சிகாகோ), சிகாகோ, இல்லியநாய்ஸ்
ஆள்கூறு41°52′57.75″N 87°37′21.60″W / 41.8827083°N 87.6226667°W / 41.8827083; -87.6226667 (Millennium Park)
திறப்புஜூலை 16, 2004
இயக்குபவர்சிகாகோவின் பண்பாட்டு வாரியம்
நிலைவருடம் முழுவதும் (தினமும் 6 a.m. முதல் 11 p.m. வரை)
இணையதளம்http://www.millenniumpark.org/

இப்பூங்காவின கட்டுவதற்கான திட்டங்கள் அக்டோபர் 1997ஆம் ஆண்டில் தொடங்கின. கட்டடப்பணிகள் 1998ஆம் ஆண்டு தொடங்கி, நான்கு ஆண்டுகள் தொய்விற்குப் பின் 2004ஆம் ஆண்டு முடிந்தன. இப்பூங்கா ஜூலை 16, 2004 ஆம் நாள் திறக்கப்பட்டது. மூன்று நாள் திறப்பு விழா சுமார் மூன்று இலட்சம் மக்களை ஈர்த்தது. இப்பூங்கா தனது போதுச்சேவைக்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் படியான வடிவமைப்பிற்காகவும் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது.[3] இப்பூங்காவில் நுழைய கட்டணம் வசூலிக்க்ப்படுவதில்லை.[4] ஜே பிரித்கேர் பெவிலியன், க்லூது கேட்,மற்றும் கிறவுன் பௌண்டைன், லூரி கார்டன் மற்றும் பல பகுதிகள் மக்களை கவர்கின்றன. இப்பூஙகாவிலிருந்து பி.பீ நடைபாலம் மற்றும் நிகோலஸ் பாலவழியின் மூலம் கிரான்ட் பூங்காவின் மற்ற பகுதிகளை அணுகலாம்.

1893இன் உலக கொலம்பிய கண்காட்சிக்குப் பிறகு இப்பூங்காவே சிகாகோ நகரத்தின் முக்கிய திட்டம் என்று கருதப்படுகிறது.[4][5] இதனைக் கட்ட 15 கோடி டாலர்கள் செலவாகும் என்று முதலில் செய்யப்பட்ட மதிப்பீடை விட மிக அதிகமாக செலவானது. கடைசியாக 47.5 கோடி டாலர்கள் செலவானது. சிகாகோ நகரம் 27கோடி டாலர்களை மட்டுமே கொடுத்தது மீதி பணம் தனியார் அன்பளிப்புகளால் கிடைத்தது.[6] கட்டடப்பணிகளின் தொய்வு மற்றும் பண விரையம் ஆகியவை சரியான திட்டமிடாதல், பல்வேறு திட்ட மாற்றங்கள் ஆகியவற்றால் தான் என்று பலர் கூறுகிறார்கள். அனைத்து தடைகளையும் மீறி பூங்காவை திறந்ததற்காக பலர் பாராட்டினர்.


குறிப்புகள்

தொகு
  1. இந்த படம் பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம் மில்லெனியம் பூங்கா கட்டப்படுவதற்கு முன்பாக இருக்கும் கிரான்ட் பார்க்கினை காண்பிக்கிறது.
  2. "Crain's List: Chicago's Largest Tourist Attractions (Sightseeing): Ranked by 2009 attendance". Crain's Chicago Business (Crain Communications Inc.): p. 21. March 22, 2010. 
  3. Ryan, Karen (April 12, 2005). "Chicago's New Millennium Park Wins Travel & Leisure Design Award For "Best Public Space", And The American Public Works Association "Project Of The Year" Award" (PDF). City of Chicago. Archived from the original (PDF) on செப்டம்பர் 10, 2008. பார்க்கப்பட்ட நாள் June 24, 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 Kinzer, Stephen (July 13, 2004). "Letter From Chicago; A Prized Project, a Mayor and Persistent Criticism". த நியூயார்க் டைம்ஸ். http://query.nytimes.com/gst/fullpage.html?res=9806EED71E3BF930A25754C0A9629C8B63. பார்த்த நாள்: May 31, 2008. 
  5. Daniel, Caroline and Jeremy Grant (September 10, 2005). "Classical city soars above Capone clichés". The Financial Times. The Financial Times Ltd. Archived from the original on ஜூன் 24, 2010. பார்க்கப்பட்ட நாள் August 7, 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. Cohen, Laurie and Liam Ford (July 18, 2004). "$16 million in lawsuits ensnare pavilion at Millennium Park". Chicago Tribune. http://articles.chicagotribune.com/2004-07-18/news/0407180277_1_gehry-millennium-park-lawsuits. பார்த்த நாள்: August 6, 2008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லெனியம்_பூங்கா&oldid=3575745" இலிருந்து மீள்விக்கப்பட்டது