மிஸ் கமலா
டி. பி. ராஜலட்சுமி இயக்கத்தில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மிஸ் கமலா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. ராஜலட்சுமி முக்கிய பாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தின் கதையை அவரே எழுதி இயக்கினார்.
மிஸ் கமலா | |
---|---|
இயக்கம் | டி. பி. ராஜலட்சுமி |
கதை | டி. பி. ராஜலட்சுமி |
நடிப்பு | டி. பி. ராஜலட்சுமி |
வெளியீடு | 1936 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்கிறார். தோடி ராகத்தில் ராகம், தானம், பல்லவியும், நன்னு விடிச்சி என்ற கீர்த்தனையை ரிட்டிகவுலா ராகத்திலும் வாசித்திருக்கிறார்[1].
உப தகவல்
தொகு1930 களின் பிரபல நாடக நடிகையும், முதல் பேசும் (காளிதாஸ்) பட நாயகியுமான டி. பி. ராஜலட்சுமி, 5 ஆண்டுகளில் தானே கதை வசனம் எழுதி நடித்து தயாரித்து இயக்கிய படமாகும். மேலும், டி. பி. ராஜலட்சுமி முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பெயரும் இவருக்கு உண்டு.[2]
குறிப்புகள்
தொகு- ↑ Memorable notes பரணிடப்பட்டது 2010-12-29 at the வந்தவழி இயந்திரம், ராண்டார் கை, த இந்து, டிசம்பர் 24, 2010.
- ↑ "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-27.