மீகோப்பு
மீகோப்பு (Metafile) என்பது பலவகைத் தரவுகளைத் தேக்கி வைக்கும், கோப்பு வடிவத்தின், மரபுப்பண்புச் சொல்லைக் குறிக்கிறது. இது பொதுவாக நிழற்படக்கோப்பு வடிவங்களைக் உள்ளடக்கியுள்ளது. இத்தகைய வரைகலைக் கோப்புகள், பரவுப்பட வரைகலை, திசையன் வரைகலை , குறிப்பிட்ட எழுத்துருத் தரவு (Typeface data) என்பனவற்றைக் கொண்டு இருக்கின்றன. இந்த கோப்புகளின் பொதுவான பயன்பாடு யாதெனில், ஒரு இயக்குதளத்தின் கணிய வரைகலைக்கு ஆதரவாக செயல்படுதலே ஆகும். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் விண்டோசு இயக்குதளம், அதனின் வின்டோசின் மீக்கோப்பினையும், மாக் இயக்குதளம், பி.டி.எவ் வடிவத்தையும் பயன்படுத்துகிறது.
சில எடுத்துக்காட்டுகள்
தொகு- (PICT)[1] மக்கின்டொஷ் PICT resource, superseded by PDF in Mac OS X
- (WMF) வின்டோசின் மீகோப்பு = (EMF) Enhanced மீகோப்பு
- (EPS) Encapsulated PostScript
- (CGM) கணினி வரைகலை மீகோப்பு
- (PDF) மின்னூல்
- (CDR) கோரல்டிரா
- (SVG) விரியகத் திசையன் வரைகலை
- (WPG) Word Perfect வரைகலைக் கோப்பு
- (RTF) நிறை உரை வடிவ கோப்பு