மீக் குளிர் குறுமீன்
மீக் குளிர் குறுமீன் (ultra-cool dwarf) என்பது 2700 கெல்வின் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையைக் கொண்ட ஒரு விண்மீன் அல்லது துணை விண்மீனாகும்.[1] இந்த வகை குறுமீன்கள் 1997 ஆம் ஆண்டில் ஜே. தேவி கிர்க்பாட்ரிக், தோடு ஜே. என்றி, மைக்கேல் ஜே. இர்வின் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலில் எம்7 வகைக் கதிர்நிரல் வகைகளுடன் மிகக் குறைந்த பொருண்மை கொண்ட எம் வகைக் குறுமீன்களை உள்ளடக்கியது, ஆனால் பின்னர் டி6.5 வகைபோன்ற குளிர்ச்சியான பழுப்புக் குறுமீன்கள் வரையிலான விண்மீன்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்டது. எனவே, இது மொத்தத்தில், மீக் குளிர் குறுமீன்கள் சூரியனின் உடுக்கணச் சுற்றுப்புறத்தில் உள்ள வானியல் பொருள்களில் சுமார் 15% அளவாக அமையலாம் என்பதைக் குறிக்கின்றது. [2] சிறந்த அறியப்பட்ட எடுத்துக்காட்டுகளில் ஒன்று சிறைபடல்-1 கோள் அமைப்பு ஆகும்.[3]
அல்ட்ரா-கூல் குள்ளன் என்பது 2,700 K (2,430 °C; 4,400 °F) க்கும் குறைவான வெப்பநிலையைக் கொண்ட ஒரு நட்சத்திர அல்லது துணை நட்சத்திரப் பொருளாகும்.
கோள்களின் உருவாக்கப் படிமங்கள், அவற்றின் குறைந்த பொருண்மையாலும் அவற்றின் முதனிலைக் கோள்வட்டுகளின் சிறிய அளவாலும் இந்த விண்மீன்கள், மீப்புவிகள், வியாழன் நிறை கோள்களை விட, புதன் அளவு முதல் புவி அளவுக் கோள்கள் வரையிலான புவிநிகர் கோள்களின் பெருந்தொகையை வழங்க முடியும் என்று கூறுகின்றன. ஏழு புவி அளவிலான கோள்களைக் கொண்ட TRAPPIST-1 வகைக் கோள் அமைப்பின் கண்டுபிடிப்பு, இந்தவகை அகந்திரட்சிப் படிமத்தை உறுதிப்படுத்துவதாகத் தோன்றும்.[4][5]
அவற்றின் மெதுவான நீரக அணுக்கரு வினைத் தொகுப்பினால், மற்ற வகை குறைந்த பொருண்மை விண்மீன்களுடன் ஒப்பிடும் போது, மீக் குளிர் குறுமீன்களின் ஆயுட்காலம் குறைந்தது பல நூறு பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறியவை சுமார் 12 டிரில்லியன் ஆண்டுகள் வாழ்கின்றன. புடவி வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே என்பதால், அனைத்து மீக் குளிர் குறுமீன்களும் ஒப்பீட்டளவில் இளமையானவை. மாதிரிகள் தங்கள் வாழ்க்கையின் முடிவில் இந்த விண்மீன்களில் மிகச் சிறியவை செம்பெருமீன்களாக விரிவடைவதை விட நீலக் குறுமீன்களாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[6]
காந்த பண்புகள்
தொகு2001 ஆம் ஆண்டில் M9 வகை மீக் குளிர் குறுமீன் LP 944-20 இலிருந்து கதிரலை உமிழ்வின் வெடிப்புகளைக் கண்டறிந்த பிறகு, பல வானியற்பியல் வல்லுநர்கள் கதிரலைகளை உமிழும் கூடுதல் பொருட்களைத் தேடுவதற்காக அரேசிபோ ஆய்வகத்திலும் மிகப் பெரிய தொலைநோக்கி அணியிலும் கண்காணிப்புப் பரப்புரைகளைத் தொடங்கினர்.[7] இன்றுவரை இந்தக் கதிரலைத் தொலைநோக்கிகள் வழி பல நூற்றுக்கணக்கான மீக் குளிர் குறுமீன்களை நோக்கீடு செய்ததில் பன்னிரண்டு கதிரலை உமிழும் மீக் குளிர் குறுமீன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. [8] மீக் குளிர் குறுமீன்களில் தோராயமாக 5-10% கதிரலைகளை வெளியிடுவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோக்கீட்டுப் பரப்புரைகள் குறிப்பிடத்தக்க 2பொருண்மை ஜே10475385+2124234 விண்மீன்களை அடையாளம் கண்டுள்ளன. இவை 800-900 கெ வெப்பநிலையைக் கொண்டுள்ளன., இந்தக் கதிரலை உமிழும் பழுப்புக் குறுமீன். 2பொருண்மை ஜே10475385+2124234 என்பது T6.5 பழுப்பு குறுமீனாகும், இது காந்தப்புலத்தை 1.7 கிலோகாசுக்கும் அதிகமான வலிமையுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளது, இது புவியின் காந்தப்புலத்தை விட 3000 மடங்கு உயர்செறிவு கொண்டுள்ளது. [9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gillon, Michaël; Jehin, Emmanuël; Lederer, Susan M; Delrez, Laetitia; De Wit, Julien; Burdanov, Artem; Van Grootel, Valérie; Burgasser, Adam J et al. (2016). "Temperate Earth-sized planets transiting a nearby ultracool dwarf star". Nature 533 (7602): 221–4. doi:10.1038/nature17448. பப்மெட்:27135924. Bibcode: 2016Natur.533..221G.
- ↑ Cantrell, Justin R.; Henry, Todd J.; White, Russel J. (13 September 2013). "The Solar Neighborhood Xxix: The Habitable Real Estate of Our Nearest Stellar Neighbors". The Astronomical Journal 146 (4): 99. doi:10.1088/0004-6256/146/4/99. Bibcode: 2013AJ....146...99C.
- ↑ Gillon, Michaël (May 5, 2017). "Ultra-Cool Dwarf Stars May Host Planets With Ultra-Cool Life". Vice.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2020.
- ↑ "NASA Telescope Reveals Largest Batch of Earth-Size, Habitable-Zone Planets Around Single Star". NASA. பார்க்கப்பட்ட நாள் 2017-11-19.
- ↑ Gillon, Michaël (May 5, 2017). "Ultra-Cool Dwarf Stars May Host Planets With Ultra-Cool Life". Vice.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2020.
- ↑ Adams, F. C.; P. Bodenheimer; G. Laughlin (2005). "M dwarfs: planet formation and long term evolution". Astronomische Nachrichten 326 (10): 913–919. doi:10.1002/asna.200510440. Bibcode: 2005AN....326..913A.
- ↑ Route, M.; Wolszczan, A. (20 October 2016). "The Second Arecibo Search for 5 GHz Radio Flares from Ultracool Dwarfs". The Astrophysical Journal 830 (2): 85. doi:10.3847/0004-637X/830/2/85. Bibcode: 2016ApJ...830...85R.
- ↑ Route, M.; Wolszczan, A. (20 October 2016). "The Second Arecibo Search for 5 GHz Radio Flares from Ultracool Dwarfs". The Astrophysical Journal 830 (2): 85. doi:10.3847/0004-637X/830/2/85. Bibcode: 2016ApJ...830...85R.
- ↑ Route, M.; Wolszczan, A. (10 March 2012). "The Arecibo Detection of the Coolest Radio-flaring Brown Dwarf". The Astrophysical Journal Letters 747 (2): L22. doi:10.1088/2041-8205/747/2/L22. Bibcode: 2012ApJ...747L..22R.
- ↑ Route, M.; Wolszczan, A. (10 March 2012). "The Arecibo Detection of the Coolest Radio-flaring Brown Dwarf". The Astrophysical Journal Letters 747 (2): L22. doi:10.1088/2041-8205/747/2/L22. Bibcode: 2012ApJ...747L..22R.
வெளி இணைப்புகள்
தொகு- மீக்குளிர்தாள் : 3,000 மீக் குளிர் குறுமீன்கள் மற்றும் நேரடியாகப் படம்பிடிக்கப்பட்ட எக்ஸோப்ளானெட்டுகள் அடங்கிய பட்டியல்
- மீக் குளிர் இடமாறு தோற்றப் பிழைகளின் தரவுத்தளம் பரணிடப்பட்டது 2022-06-20 at the வந்தவழி இயந்திரம் : மீக்குளிர்தாளின் முன்னோடி