மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு

மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு நிகழ்வானது, 1984 ஆகத்து 2 அன்று தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் 33 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 27 பேர் படுகாயமுற்றனர். தமிழ் ஈழ விடுதலைப்படையினர் மீது சந்தேகம் எழுந்தது பின்னர் அதில் சிலர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.[1]

தமிழ் ஈழ விடுதலைப்படை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க 1300 வீரர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. மிக நீண்ட கால உள்நாட்டு போராட்டத்திற்குப் பின் கதிரேசன் மற்றும் 130 பேர் தமிழ் நாட்டிற்கு தப்பி வந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

மேற்கோள்கள்

தொகு