மீனாட்சி
மீனாட்சி அம்மை பாண்டிய மன்னன் மலையத்துவஜன் - காஞ்சனமாலை இணையர் வேள்வி செய்து பெற்ற மகளும், சுந்தரேஸ்வரரின் மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார்.
மீனாட்சி பிறப்பில் மூன்று மார்பகங்களுடன் பிறந்ததாகவும்; தன்னை மணம் முடிப்பவரை பார்த்தவுடன் நடுவில் இருக்கும் மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் என்ற நிலையில், கயிலை மலையில் சிவன் மீனாட்சியை கண்டவுடன் மூன்றாவது மார்பகம் மறைந்தது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படைதிரட்டி கயிலை மலை வரை சென்று வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கயிலையில் சிவபெருமானை கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.[1][2]
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முதலில் மீனாட்சிக்கு பூஜைகள் நடந்த பின்னரே சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெறுகிறது.