மீரா தாக்கூர்
மீரா தாக்கூர் (Meera Thakur) இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைவினைக் கலைஞர் ஆவார். சிக்கி புல்லைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் செய்துவருகிறார் மற்றும் கற்றுக்கொடுக்கிறார். யுனெசுகோவின் கைவினைப் பொருட்களுக்கான சிறந்த முத்திரையையும் நாரி சக்தி விருதையும் பெற்றுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமீரா தாக்கூர் இந்தியாவில் பீகாரில் உள்ள உம்ரி கிராமத்தில் பிறந்தார். நான்கு வயதில் தன் தாயிடமிருந்து சிக்கி புல் கைவினைக் கலையை கற்கத் தொடங்கினார். அலங்காரப் பொருட்கள், குவளைகள் மற்றும் பெட்டிகள் போன்றவற்றை தொடக்கத்தில் செய்து பழகினார். [1] சிக்கி என்பது பீகார் மற்றும் உத்திரபிரதேசத்தில் மட்டுமே காணப்படும் ஒரு புல் வகை ஆகும்.[2] இதிலிருந்து தங்கம் போன்ற இழைகள் கிடைக்கிறது.
தாக்கூர் பீகாரின் மதுபானி நகரில் வசிக்கிறார். அங்கு இவர் அசுதகலா விகாசு கேந்திரா என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவ்வமைப்பு பின்தங்கிய பெண்களுக்கு கைவினை வேலைகளில் பயிற்சி அளிக்கிறது.[2][3] நாட்டுப்புறக் கலை கைவினைப் பயிற்சி மையத்தையும் அமைத்துள்ளது.[4]
விருதுகள்
தொகுதில்லி கைவினை மன்றம் 1988ஆம் ஆண்டில் தாக்கூருக்கு பால் சில்பி கலைஞர் விருதை வழங்கியது. 2005ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இவருக்கு கைவினைப் பொருட்களுக்கான சிறந்த முத்திரையை வழங்கியது.[1][5] பன்னாட்டு மகளிர் தினமான 2022 அன்று தாக்கூருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Dhiman, Ramesh K. (16 December 2005). "Lifestyle". The Tribune இம் மூலத்தில் இருந்து 3 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103183020/http://www.tribuneindia.com/2005/20051216/ttlife.htm#4.
- ↑ 2.0 2.1 Bhatia, Gaurav (3 December 2012). "Creations of sikki grass draw visitors" (in en). The Times of India இம் மூலத்தில் இருந்து 4 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220404144059/https://timesofindia.indiatimes.com/city/chandigarh/creations-of-sikki-grass-draw-visitors/articleshow/17458697.cms.
- ↑ "29 get Nari Shakti Awards" (in en). The Tribune. 9 March 2022 இம் மூலத்தில் இருந்து 11 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220311063659/https://www.tribuneindia.com/news/nation/29-get-nari-shakti-awards-376200.
- ↑ 4.0 4.1 Kainthola, Deepanshu (8 March 2022). "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021" (in en). Tatsat Chronicle இம் மூலத்தில் இருந்து 9 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220309001953/https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/.
- ↑ "मधुबनी की मीरा को राष्ट्रपति ने किया सम्मानित, यूनेस्को सील ऑफ एक्सीलेंस अवॉर्ड मिला था 2005 में". Bihar Express. 11 March 2022 இம் மூலத்தில் இருந்து 4 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220404144027/https://bihar.express/president-of-madhubani-honored-meera-thakur-received-unesco-seal-of-excellence-award-in-2005/.