மீளாக்க வேளாண்மை

மீளாக்க வேளாண்மை (Regenerative agriculture) என்பது உணவும் வேளாண் அமைப்புகளுக்கான பாதுகாப்பும் மறுவாழ்வும் தரும் அணுகுமுறையாகும். இது மேற்பரப்பு மண் மீளுருவாக்கம் , பல்லுயிர் பெருக்கம் , ,[1]நீர் சுழற்சியை மேம்படுத்துதல் , [2] சுற்றுச்சூழல் சேவைகளை மேம்படுத்துதல் , உயிரியல் செய்முறையை ஏற்பது, [3] வேளாண்மையில் காலநிலை மாற்றத்தைச் சந்தித்தல், பண்ணை மண்ணின் வளத்தையும் உயிர்ப்பு ஆற்றலையும் வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

பல்லுயிர்ப் பெருக்கம், பூனே, இந்தியா

மீளாக்க வேளாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட நடைமுறை அல்ல. மாறாக , மீளாக்க வேளாண்மையை ஏற்பவர்கள் பல்வேறு பேணுந்தகவு வேளாண்மை நுட்பங்களை இணைத்து பயன்படுத்துகின்றனர். .[4] நடைமுறைகளில் பண்ணைக் கழிவுகளை முடிந்தவரை மறுசுழற்சி செய்தல், பண்ணைக்கு வெளியே உள்ள வாயில்களிலிருந்து உரம் ஆக்கப் பொருட்களைச் சேர்ப்பது ஆகியவை அடங்கும். .[5][6][7][8] சிறு பண்ணைகள், தோட்டங்களில் மீளாக்க வேளாண்மை பெரும்பாலும் பெர்மாகல்ச்சர், வேளாண்சூழலியல், வேளாண்காடுகள், மீளாக்கச் சூழலியல், சாரநிலை வடிவமைப்பு, முழுமையான மேலாண்மை போன்ற நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிய பண்ணைகளும் இத்தகைய நுட்பங்களைப் பேரளவில் பின்பற்றி வருகின்றன. மேலும் பெரும்பாலும் "உழவிலாத மற்றும் / அல்லது " குறை உழவு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன.

மண்ணின் வளம் மேம்படுவதால் , உள்ளிடல் தேவைகள் குறையக்கூடும்; மேலும் பயிர் விளைச்சல் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் மண் கடும் வானிலைக்கு எதிராக அதிக நெகிழ்திறனையும் குறைவான பூச்சிகள் தாக்கத்தையும் நோய்த்தொற்றுகளையும் கொண்டுள்ளது. .[9]

மீளாக்க வேளாண்மை கரிம ஈராக்சைடை அகற்றுவதால் காலநிலை மாற்றத்தைத் தணிக்கிறது. அதாவது இது வளிமண்டலத்திலிருந்து கரிமத்தை இழுத்துப் பிரிக்கிறது. கரிம உமிழ்வைக் குறைப்பதோடு கரிமப் பிரித்தெடுத்தல் நடைமுறைகளும் வேளாண்மையில் பரவலடைந்து வருகின்றன.

பூவில் உறிஞ்சும் தேனீ

வரலாறு

தொகு

தோற்றம்

தொகு

மீளாக்க வேளாண்மை என்பது பல்வேறு வெளாண்மை, சுற்றுச்சூழல் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது , இதில் குறிப்பாக சிறும மண் இடையூறு, உரம் தொகுப்பு நடைமுறைக்கு முதன்மை அளிக்கப்படுகிறது. .[10] மேனார்டு முர்ரே கடல் கனிமங்களைப் பயன்படுத்துவது போன்ற ஒத்த எண்னக்கருக்களைக் கொண்டிருந்தார். .[11][12] அவரது பணி வெப்பமண்டலப் பகுதிகளில் உழவு சாராத புதிய நடைமுறைகளுக்குத் திரும்பியது. வெட்டுதலும் தழைக்கூளம் ருவாக்குதைல் போன்ற புதிய நடைமுறைகளுக்கு வழிவகுத்தது. .[13][14][15] தாள் தழைக்கூளம் இடல் என்பது களைகளை மென்மையாக்கி , கீழுள்ள மண்ணில் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் ஒரு மீளுருவாக்க வேளாண்மை நடைமுறையாகும்.[16][17]

 
கமோயிசு வயல், பெல்ஜியம்

உரோடேல் நிறுவனம்1980 களின் முற்பகுதியில் ' மீளுருவாக்கம் வேளாண்மை ' என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியது. .[18] உரோடேல் வெளியீட்டு மீளாக்க வேளாண்மை நூல்வெளியீட்டுக் கழகத்தை உருவாக்கியது. இது 1987 ஆம், 1988 ஆம் ஆண்டுகளில் மீலாக்க வேளாண்மை நூல்களை வெளியிடத் தொடங்கியது.</ref> Rodale Publishing formed the Regenerative Agriculture Association, which began publishing regenerative agriculture books in 1987 and 1988.[19]

மேற்கோள்கள்

தொகு
  1. "Our Sustainable Future - Regenerative Ag Description". csuchico.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
  2. Underground, The Carbon; Initiative, Regenerative Agriculture; CSU (2017-02-24). "What is Regenerative Agriculture?". Regeneration International. பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
  3. Teague, W. R.; Apfelbaum, S.; Lal, R.; Kreuter, U. P.; Rowntree, J.; Davies, C. A.; Conser, R.; Rasmussen, M. et al. (2016-03-01). "The role of ruminants in reducing agriculture's carbon footprint in North America" (in en). Journal of Soil and Water Conservation 71 (2): 156–164. doi:10.2489/jswc.71.2.156. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4561. 
  4. Schreefel, L.; Schulte, R.P.O.; De Boer, I.J.M.; Schrijver, A. Pas; Van Zanten, H.H.E. (2020-09-01). "Regenerative agriculture – the soil is the base" (in en). Global Food Security 26: 100404. doi:10.1016/j.gfs.2020.100404. பன்னாட்டுத் தர தொடர் எண்:2211-9124. 
  5. "Regenerative Agriculture". regenerativeagriculturedefinition.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-11-03. பார்க்கப்பட்ட நாள் 2017-03-07.
  6. "Regenerative Agriculture". Regenerative Agriculture Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
  7. "Definition — The Carbon Underground : The Carbon Underground". thecarbonunderground.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-07.
  8. "Regenerative Organic Agriculture | ORGANIC INDIA". us.organicindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
  9. Moebius-Clune, B. N. (2016). "Comprehensive Assessment of Soil Health – The Cornell Framework (Version 3.2)". Cornell University, Cornell Soil Health Laboratory (Edition 3.2 ed.). பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
  10. Hensel, Julius (1917). Bread from stones : a new and rational system of land fertilization and physical regeneration. Planet Pub. House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-665-79105-4. இணையக் கணினி நூலக மைய எண் 1083992856. Republished by Acres USA, Austin, Texas, 1991
  11. Murray, Maynard. (2003). Sea energy agriculture. Acres U.S.A. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-911311-70-X. இணையக் கணினி நூலக மைய எண் 52379170. (originally published 1976).
  12. Phil, Nauta. (2012). Building soils naturally - innovative methods for organic gardeners. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60173-033-6. இணையக் கணினி நூலக மைய எண் 1023314099.
  13. Fukuoka, Masanobu. (2010). The one-straw revolution : an introduction to natural farming. New York Review Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59017-392-3. இணையக் கணினி நூலக மைய எண் 681750905. and Fukuoka, Masanobu Metreaud, Frederic P. (1993). The natural way of farming : the theory and practice of green philosophy. Bookventure. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85987-00-2. இணையக் கணினி நூலக மைய எண் 870936183.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  14. Hamaker, John D. (1982). The survival of civilization depends upon our solving three problems--carbon dioxide, investment money, and population : selected papers of John D. Hamaker. Hamaker-Weaver Publishers. இணையக் கணினி நூலக மைய எண் 950891698.
  15. Whatley, Booker T. How to Make $100,000 Farming 25 Acres. Emmaus, Pennsylvania, Regenerative Agriculture Association, 1987. 180 pages.
  16. Lanza, Patricia. (1998). Lasagna gardening: A new Layering System for bountiful gardens: no digging, no tilling, no weeding, no kidding. Emmaus, PA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87596-795-0. இணையக் கணினி நூலக மைய எண் 733752184.
  17. Holzer, Sepp. (2011). Sepp Holzer's permaculture : a practical guide to small-scale, integrative farming and gardening. Chelsea Green Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60358-370-1. இணையக் கணினி நூலக மைய எண் 1120375143.
  18. "AFSIC History Timeline". Alternative Farming Systems Information Center, United States National Agricultural Library, USDA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
  19. "Tracing the Evolution of Organic / Sustainable Agriculture (TESA1980) | Alternative Farming Systems Information Center| NAL | USDA" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீளாக்க_வேளாண்மை&oldid=4109231" இலிருந்து மீள்விக்கப்பட்டது