முஅம்மர் அல் கதாஃபி பள்ளிவாசல்

முஅம்மர் அல் கதாஃபி பள்ளிவாசல் என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவக மாநிலத்தின் பொகோர் மாவட்டத்தின் செந்துள் என்னுமிடத்தில் அமைந்துள்ள முதன்மையான ஜுமுஆப் பள்ளிவாசலாகும்.[1] இப்பள்ளிவாசலின் கட்டுமானத்திற்காக லிபியாவின் முன்னாள் அதிபர் தளபதி முஅம்மர் அல் கதாஃபி ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளத்தார்.[2] 2003 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இப்பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் இருபதாயிரம் பேர் தொழக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இதன் நிருவாகத்துக்கும் பராமரிப்புக்குமாக மாதாந்தம் இருபதாயிரம் அமெரிக்க டொலர் நிதியை வழங்கி வந்தார்.

2011 ஒக்டோபர் 20 அன்று லிபியாவின் கிளர்ச்சியாளர்களுக்கும் அரச படைகளுக்கும் இடையில் நடந்த மோதலின் பின்னர், கிளர்ச்சிப் படையினர் வசம் முஅம்மர் அல் கதாஃபி கைதாகிப் பின்னர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும், இப்பள்ளிவாசலில் அவருக்காக இறைஞ்சுதலும் தொழுகையும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை இந்தோனேசியாவின் எஸ்சேதேவே (இந்தோனேசிய மொழி ஒலிப்பு - SCTV) தொலைக்காட்சி 2011 ஒக்டோபர் 21 அன்று அடிக்கடி ஒளிபரப்பியது.

உசாத்துணைதொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. http://bujangmasjid.blogspot.com/2011/02/masjid-muammar-qaddafy-sentul-bogor.html முஅம்மர் அல்-கதாபி பள்ளிவாசல்