முகத்தல் அளவை
பொருட்களை முகந்து அளக்கும் அளவை முகத்தல் அளவையாகும்.தொடர்பு காரணமாக பெய்து அளத்தலும் முகத்தலுள் அடங்குகிறது.மரக்காலைக் கொண்டு நெல் முகந்து அளக்கப்பட, பால் நாழியுள் பெய்து அளக்கப்படுகிறது.இக்காலத்தில் பெய்து அளத்தலையும் முகந்து அளக்கின்றனர்.இது பிற நிறுத்தல்,நீட்டல் அளவைகளை விட சிறப்பும் செல்வாக்கும் பெற்ற அளவையாகும்.உணவுப்பொருட்களை அளக்கும் நிலை காரணமாக இவற்றின் பயன்பாடு மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றது.தொல்காப்பியர் இவ் அளவையை 'பனையென அளவும்' என்று சுட்டுகின்றனர்.
முகத்தல் அளவு கருவிகள்
தொகுதொல்காப்பியர் கலம்,பதக்கு,தூணி,உரி,நாழி,உழக்கு,பனை போன்றவற்றை வெளிப்படையாகக் கூறினர். இவற்றைவிட பிற பல அளவைகளும் உண்டு என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி
உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே
அவைதாம்
க ச த ப என்றா நமவ என்றா
அகர உகரமோடவை யெனமொழிப (தொகை-28)