முகமதியப் பெண்கள் உரிமை நாள்
முகமதியப் பெண்கள் உரிமைகள் நாள் (Muslim Women Rights Day) இந்தியாவில் முத்தலாக் நடைமுறையைத் தடை செய்யும் முகமதியப் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இயற்றப்பட்டதைக் கொண்டாடுவதற்காக, ஆகத்து மாதம் முதல் தேதியன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.[2][3]
முகமதியப் பெண்கள் உரிமைகள் நாள் Muslim Women Rights Day[1] | |
---|---|
கடைபிடிப்போர் | இந்தியா |
வகை | தேசம் முழுவதும் |
முக்கியத்துவம் | இந்தியாவில் முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் |
நாள் | 1 ஆகத்து |
நிகழ்வு | ஒவ்வோர் ஆண்டும் |
தொடர்புடையன | முகமதியப் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019 |
ஒரு முகமதிய ஆண் தனது மனைவியை மூன்று முறை "தலாக்" சொல்லி விவாகரத்து செய்யலாம். ஆனால் பெண்கள் இப்படி முத்தலாக்கை உச்சரிக்க முடியாது. சரியா சட்டம், 1937 ஆம் ஆண்டின் கீழ் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாட வேண்டும் என்பது முத்தலாக்கு நடைமுறையாகும்.
முத்தலாக்கை குற்றவியலின் கீழ் ஒரு குற்றமாக வகைப்படுத்தும் சட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று அமலுக்கு வந்தது. முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டது. முகமதிய தம்பதிகள் இசுலாமியச் சட்ட முறையினை தவிர்த்து, இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி விவாகரத்து செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். முமமதிய பெண்கள் உரிமைகள் தினம் முதன் முறையாக ஆகத்து 1, 2020 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.[4]
நாட்டின் முகமதியப் பெண்களின் சுயச்சார்பு, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை மற்றும் அரசியலமைப்பு, அடிப்படை மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பவற்றைக் குறித்து சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தர் அப்பாசு நக்வி தெரிவித்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Muslim Women Rights Day" (in en). https://www.drishtiias.com/daily-updates/daily-news-analysis/muslim-women-rights-day.
- ↑ Livemint (2021-07-31). "'Muslim Women Rights Day' to commemorate two years of triple talaq law". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
- ↑ "Significant decline in triple talaq cases after law against it came into effect: Naqvi". https://www.thehindu.com/news/national/significant-decline-in-triple-talaq-cases-after-law-against-it-came-into-effect-naqvi/article35650655.ece.
- ↑ "Muslim women's rights day | DD News". Archived from the original on 31 July 2021. பார்க்கப்பட்ட நாள் 31 July 2021.
- ↑ ""Muslim Women Rights Day" to be observed across the country on 1st August 2021". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.