முகமது அப்துல் லத்தீப்

இந்திய அரசியல்வாதி

முகமது அப்துல் லத்தீப் (Muhammad Abdul Latip) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மணிப்பூர் சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1]

முகமது
அப்துல் லத்தீப்பு
Abdul Latip
உறுப்பினர், மணிப்பூர் சட்டப் பேரவை
பதவியில்
1972–1979
முன்னையவர்சி. இராச்மோகன்
பின்னவர்குமுச்சம் அமுதோம்பி சிங்
தொகுதிமயாங்கு இம்பால் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிமணிப்பூர் மக்கள் கட்சி

அப்துல் லத்தீப் 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள மயாங் இம்பால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். சுயேச்சை வேட்பாளராக இருந்த போதிலும், இவர் வெற்றி பெற்றார், மணிப்பூர் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான கைதேம் குலாம்சத்து சிங்கை தோற்கடித்தார்.[2] 1974 ஆம் ஆண்டில் நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலின் போது, இவர் மணிப்பூர் மக்கள் கட்சி அரசியல்வாதியாகப் போட்டியிட்டு, பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளர் கைடெம் மங்கோலைத் தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றார்.[1] 1980 ஆம் ஆண்டில் அப்துல் லத்தீப் சனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டார் ஆனால் தோல்வியடைந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Abdul Latip, Mayang Imphal". Latestly. பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.
  2. "M D Abdul Latif, Mayang Imphal". Latestly. பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.
  3. "1980 Mayang Imphal". Latestly. பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அப்துல்_லத்தீப்&oldid=3848089" இலிருந்து மீள்விக்கப்பட்டது