முகமது அலி மணிக்கூட்டுக் கோபுரம்
முகமது அலி மணிக்கூட்டுக் கோபுரம் (Muhammad Ali Tower) மேலும் யுனா கோபுரம் அல்லது அராவாலா கோபுரம் எனவும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான குசராத்தின் சித்தபூரில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாகும். இது 4 ஏப்ரல் 1915 அன்று திறக்கப்பட்டது.
முகமது அலி மணிக்கூட்டுக் கோபுரம் | |
---|---|
முகமது அலி மணிக்கூட்டுக் கோபுரம் | |
மாற்றுப் பெயர்கள் | யுனா கோபுரம் , அராவாலா கோபுரம், சித்தபூர் கோபுரம் |
பொதுவான தகவல்கள் | |
வகை | மணிக்கூட்டுக் கோபுரம் |
கட்டிடக்கலை பாணி | இந்தோ சரசனிக் பாணி |
இடம் | சித்தபூர், குசராத்து |
நாடு | India |
ஆள்கூற்று | 23°55′09″N 72°22′12″E / 23.9192595787644°N 72.36997024328086°E |
துவக்கம் | ஏப்ரல் 4, 1915 |
செலவு | 50cro |
கட்டுவித்தவர் | ஜி. எம். முகமது அலி நிறுவனம் |
உரிமையாளர் | சித்தபூர் நகராட்சி |
உயரம் | 60 அடி (18 m) |
வரலாறு
தொகுமுகமது சேக் சரபல்லி அரர்வாலா, சித்தபூரைச் சேர்ந்த உலகின் கோடீஸ்வர சமூகங்களில் ஒன்றான தாவூதி போரா வணிகர் ஆவார். இவர் அபிசீனியாவில் (இப்போது எத்தியோப்பியா ) ஜி. எம். முகமது அலி என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். 1914இல், தனது மகளின் திருமண விழாவில், அவர் மூன்று மாதங்களுக்கு சித்தபூரை மின் விளக்குகளால் ஒளிரச் செய்தார். சித்தபூர் கெய்க்வாட் ஆட்சியாளர்கள் அவருக்கு ஒரு யானையை பரிசளித்தனர். திருமண ஊர்வலத்துக்காக அந்த யானையின் நுழைவுக்காக நகரத்தின் தேவடி வாசல் இடிக்கப்பட்டது. இடிப்பின் இழப்பீடாக, ₹15,000 (US$190) செலவில் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றை அவர் எழுப்பினார்.[1][2] இது இளவரசர் ஜெயசிங்ராவ் சாயாஜிராவ் கெய்க்வாட் அவர்களால் 4 ஏப்ரல் 1915 [1] அன்று திறந்து வைக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டில், இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை ஒரு நினைவுச்சின்னமாக உருவாக்க சித்தபூர் நகராட்சி முன்மொழிந்துள்ளது.[1]
அமைப்பு
தொகுமணிக்கூட்டுக் கோபுரம் 60 அடி உயரம் கொண்டுள்ளது. அதன் நான்கு பக்கங்களிலும் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்கள் உள்ளன.[1] இது பிரித்தானிய குடியேற்றக் கால கட்டிடக்கலை பாணியில் மேலே ஏகாதிபத்திய கிரீடத்துடன் கட்டப்பட்டுள்ளது. இது நகரத்தின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சான்றுகள்
தொகு- ↑ Kadi, Zoyab A. (2019-12-02). The Birth and Death of a Style: The Vohrawaads of Sidhpur (in ஆங்கிலம்). Notion Press. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-64587-749-3.