முகமது ஜுபைர்
முகமது ஜுபைர் (ஆங்கில மொழி: Mohammed Zubair)(பிறப்பு: 1983) என்பவர் அல்ட் நியூஸ் என்கிற உண்மை சரிபார்ப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராவார். 2018 இல் இந்து மத நம்பிக்கையினைப் புண்படுத்தியதாகக் கூறி 2022 இல் தில்லி காவல்துறை இவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.[2][3]
முகமது ஜுபைர் | |
---|---|
2023 இல் ஜுபைர் | |
பிறப்பு | 29 திசம்பர் 1983[1] பெங்களூர், கருநாடகம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ராமையா தொழில்நுட்பக் கல்விநிலையம் |
பணி | பத்திரிகையாளர் |
அமைப்பு(கள்) | அல்ட் நியூஸ் |
பட்டம் | அல்ட் நியூஸ் இணை நிறுவனர் |
இளமைக் காலம்
தொகு1983 டிசம்பர் 29 இல் கருநாடக மாநில பெங்களூரில் ஜுபைர் பிறந்தார். ராமையா தொழில்நுட்பக் கல்விநிலையத்தில் பட்டம் பெற்றார்.[4][5] பத்தாண்டுகளாக மென்பொருள் பொறியாளராக நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[1]
பத்திரிகைப் பணி
தொகு2017 இல் பிரதிக் சிங்காவுடன் இணைந்து ஜுபைர் அல்ட் நியூஸ் என்ற உண்மை சரிபார்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.[1]
பாஜகவின் பேச்சாளர் நுபூர் ஷர்மா ஞானவாபி பள்ளிவாசல் பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் உரையாடலில் பேசிய சர்ச்சைப் பேச்சுக்கு இவர் கொடுத்த பதிலும் மறுநாள் நடந்த கைது நடவடிக்கையும் இவரை உலக அளவில் கவனம்பெறச் செய்தன.[6][7] 2022 ஜூன் 27 இல் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி டில்லி காவல்துறை இவரைக் கைது செய்தது.[8][9][10] இதன் மூலம் இந்திய அரசின் மீது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என்று ஊடகத்தினர் மற்றும் மனித உரிமைசெயல்பாட்டாளார்கள் கருத்து தெரிவித்தனர்.[11]
விருது
தொகு- தமிழ்நாடு அரசின் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தை 2024 ஆம் ஆண்டு பெற்றார்.[12]
டைம் இதழின் கருத்துப்படி 2022 இல் அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப்பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றது.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Langa, Mahesh (2 July 2022). "Mohammed Zubair | The man who chased facts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220715023756/https://www.thehindu.com/news/national/mohammed-zubair-the-man-who-chased-facts/article65590897.ece.
- ↑ "Mohammed Zubair: Supreme Court grants bail to Indian fact-checker" (in en-GB). BBC News. 8 July 2022. https://www.bbc.com/news/world-asia-india-62093974.
- ↑ "Mohammed Zubair: Supreme Court grants bail to Indian fact-checker". BBC News. 20 July 2022 இம் மூலத்தில் இருந்து 20 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220720115957/https://www.bbc.com/news/world-asia-india-62093974.
- ↑ Kuchay, Bilal (22 June 2022). "Who is Mohammed Zubair, Indian journalist arrested by Modi gov't?". Al Jazeera இம் மூலத்தில் இருந்து 14 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220714233053/https://www.aljazeera.com/news/2022/6/28/who-is-mohammed-zubair-indian-journalist-arrested-by-modi-govt.
- ↑ Jafri, Alishan (31 July 2022). "Zubair: 'A Muslim Man Asking For Accountability and Working as a Journalist Is Not a Crime'" (in en-IN). The Wire இம் மூலத்தில் இருந்து 31 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220731151321/https://thewire.in/media/mohammad-zubair-interiew-journalism-muslim. "I pulled up my socks and passed out of school with a decent score and then got into M.S. Ramaiah Institute of Technology, a reputed engineering college."
- ↑ Jamil, Nabeela. "Why the debate around the age of Aisha, the Prophet's wife, is irrelevant". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 7 June 2022. பார்க்கப்பட்ட நாள் 24 June 2022.
- ↑ "India: Muslim journalist Mohammed Zubair to be released on bail | DW | 20 July 2022". Deutsche Welle. 21 July 2022 இம் மூலத்தில் இருந்து 20 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220720180145/https://www.dw.com/en/india-muslim-journalist-mohammed-zubair-to-be-released-on-bail/a-62541604.
- ↑ "Mohammed Zubair: Indian police arrest journalist over tweets". BBC News. 28 June 2022 இம் மூலத்தில் இருந்து 11 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220711204653/https://www.bbc.com/news/world-asia-india-61956108.
- ↑ "Explained: Why Alt News co-founder Mohammed Zubair has been arrested". டெக்கன் ஹெரால்டு. 28 June 2022 இம் மூலத்தில் இருந்து 16 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220716114338/https://www.deccanherald.com/national/explained-why-alt-news-co-founder-mohammed-zubair-has-been-arrested-1122121.html.
- ↑ "Alt News co-founder Mohammed Zubair arrested for 'hurting religious sentiments'". Hindustan Times (in ஆங்கிலம்). 27 June 2022. Archived from the original on 21 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2 July 2022.
- ↑ See links below
- Yasir, Sameer (28 June 2022). "Arrest of Journalist in India Adds to Press Freedom Concerns" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 15 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220715050655/https://www.nytimes.com/2022/06/28/world/asia/indian-journalist-arrested-modi.html.
- ↑ Bureau, The Hindu (26 January 2024). "TN govt. honours Alt News' Mohammed Zubair with award for communal harmony" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-govt-honours-alt-news-mohammed-zubair-with-award-for-communal-harmony/article67779184.ece.
- ↑ "Nobel Peace Prize 2022 AltNews cofounders Pratik Sinha, Mohammed Zubair among favourites". தி இந்து.