முகமது பரூக் (பத்திரிகையாளர்)
முஹம்மது பரூக்[1] (உருது: محمد فاروق) ஒரு பத்திரிகையாளர் ஆவார்.[2] இவர் ஈவ்னிங் நியூஸ்பேப்பர் (மாலை செய்தித் தாளின்) நிறுவனர் ஆவார்.[3]
பத்திரிகை வாழ்க்கை
தொகுமுஹம்மது பாரூக் அரெய்ன் லாகூரில் உள்ள டெய்லி மஷ்ரிக் இதழின் துணை ஆசிரியராக பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் டெய்லி மஷ்ரிக் குவெட்டாவின் பணியகத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1997 ஆம் ஆண்டில், ஃபாரூக் சென்று குவெட்டாவின் தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 10, 2001 அன்று, முதல் பாகிஸ்தானின் ( மாலை செய்தித்தாள் )டெய்லி ஈவினிங் இதழை நிறுவினார். அதன் பதிப்பாளராகவும் பணிபுரிந்தார்.[4]
2004 ஆம் ஆண்டில், முகமது பாரூக் அரெய்ன் டெய்லி மஷ்ரிக் இதழின் இணை நிர்வாக ஆசிரியராக நியமனம் ஆனார்.[5] குவெட்டாவின் தலைமை அலுவலகத்தில் யுனிவர்சல் நியூஸ் ஏஜென்சியில் (யு.என்.ஏ) ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார். தனது பத்திரிகை வாழ்க்கையின் போது இவர் டெய்லி டின் லாகூர், டெய்லி அக்பர்-இ-லாகூர், மாதாந்திர கல்வி டைம்ஸ் லாகூர் ஆகிய பல நிறுவனங்களில் பணியாற்றினார். தற்போது அவர் பாகிஸ்தானின் முன்னணி செய்தித்தாள்களில் ஒன்றான டெய்லி பாகிஸ்தான் லாகூரின் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
பத்திரிகை சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காகவும் அவர் போராடிதனால் சில சிக்கலைச் சந்தித்தார்.[6] அவர் குவெட்டா பதிப்பக சங்கம் மற்றும் பலுசிஸ்தான் சங்க உறுப்பினராக இருந்தார்,[7] இப்போது லாகூர் பதிப்பக சங்கம் மற்றும் பஞ்சாப் எழுத்தாளர்கள் குழுமத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.
செய்தித் தொடர்பாளர்
தொகு1997 ஆம் ஆண்டில் பாரூக் ரேடியோ பாக்கிஸ்தானில் (குவெட்டா) ஒரு செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்தார். செப்டம்பர் 26, 1997 அன்று, முஹம்மது பாரூக் தனது முதல் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டார். அப்போது இவர் இது ரேடியோ பாகிஸ்தான், இப்போது நீங்கள் முஹம்மது பாரூக்கின் செய்திகளைக் கேட்கிறீர்கள் எனக் கூறினார்.[8]
2000 ஆம் ஆண்டில், முஹம்மது பாரூக்கின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு பிரைட் ஆஃப் பெர்ஃபாமன்ஸ் விருது வழங்கப்பட்டது.[9][10][11] ஃபாரூக் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் செய்தித் தொடர்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
அவர் பாகிஸ்தான் தொலைக்காட்சியின் ஆய்வாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பான பல பேச்சு நிகழ்ச்சிகளில் அவர் தோன்றினார், குறிப்பாக நடப்பு விவகார நிகழ்ச்சிகளான நியூஸ் மார்னிங் ஷோ மற்றும் பி.டி.வி குவெட்டா மையத்திலிருந்து கதம் பா கதம் உள்ளிட்டவை.[12]
விருதுகள்
தொகுஇதழியல்
தொகுபாக்கிஸ்தான் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிபிசி) சிறந்த உருது செய்தி ஒளிபரப்பு விருது மற்றும் செயல்திறன் விருது (2000).[13][14][15]
பாத்திமா ஜின்னா விருது (2003) இதனை பாகிஸ்தான் அரசாங்கத்தின் முன்னாள் மத்திய மத விவகார மற்றும் சிறுபான்மை அமைச்சர் முஹம்மது இஜாஸ்-உல்-ஹக் வழங்கினார்
யுனிசெஃப் மற்றும் பலூசிஸ்தான் சாரணர் சங்கம் சிறப்பு விருது வழங்கியது.
பாகிஸ்தானின் தேசிய குடிமைப் பணி பாதுகாப்பு விருது
சிறந்த பத்திரிகையாளர் விருது (2004) முன்னாள் எம்.பி.ஏ பலுசிஸ்தான் மிஸ் ரஹிலா துரானி மற்றும் முகமது ஷபிக் கான் ஆகியோரால் வழங்கப்பட்டது. (கோசியா இரத்த நன்கொடையாளர்கள் சங்கத்தால் வழங்கப்பட்டது) [16]
குறிப்புகள்
தொகு- ↑ "How do you say MOHAMMED FAROOQ?". Voice of America. பார்க்கப்பட்ட நாள் 2 May 2014.
- ↑ "Two day media workshop" (PDF). On Literacy and Basic Education. The United Nations Educational, Scientific and Cultural Organization. பார்க்கப்பட்ட நாள் 2 May 2014.
- ↑ "Editor Daily Evening Special Quetta".
- ↑ "Pakistani newspaper editors". duckduckgo.com. Archived from the original on 5 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.
- ↑ "Joint Executive Editor". Daily Mashriq (Quetta). November 2004. http://www.mashriqakhbar.com/. பார்த்த நாள்: 13 May 2014.
- ↑ "Protest for the rights of working journalists in Lahore". http://www.mashriqakhbar.com/. பார்த்த நாள்: 7 May 2014.
- ↑ "The delegation of Pakistan Federal Union of Journalists (PFUJ) met with Chief Minister of Balochistan Jam Muhammad Yousaf for the rights of working journalists in Quetta". http://www.mashriqakhbar.com/. பார்த்த நாள்: 7 May 2014.
- ↑ "Pakistani radio personalities". Like. பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Radio Pakistan's official Monthly Magazine "Ahang" 2001 January
- ↑ Daily The Balochistan Times Quetta 12 November 2000 p 3.
- ↑ Daily Lashkar Quetta 13 November 2000 Back Page.
- ↑ "Popular Pakistani Male Profiles". Fanphobia.net. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "PBC Awards" இம் மூலத்தில் இருந்து 28 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140528155154/http://www.dailyintekhab.com.pk/Multimedia/online_pages/current/page_1.html. பார்த்த நாள்: 11 May 2014.
- ↑ "Radio Pakistan Awards". http://dailybaakhabar.com/. பார்த்த நாள்: 11 May 2014.
- ↑ "Best Urdu Newscaster Award" இம் மூலத்தில் இருந்து 13 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140513010703/http://quettapoint.com/daily-dunya-newspaper.html. பார்த்த நாள்: 11 May 2014.
- ↑ Awards ceremony.