முகம்மதன் பொது நூலகம்

முகம்மதன் பொது நூலகம் (Muhammadan Public Library) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள ஒரு பொது நூலகம் ஆகும். இந்நூலகம் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை விடுமுறையாகும்.[1]

வரலாறு

தொகு

கடைசி ஆற்காடு நவாப்பான குலாம் முகமது கவுஸ் கான் பகதூரால் இந்நூலகம் நிறுவப்பட்டது. இங்கு 18, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 15,000 அரிய நூல்கள் உள்ளன. இங்கு பாரசீக மொழி, அரபி மொழி, உருது, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பல துறை சார்ந்த நூல்கள் உள்ளன.[2]

பழமையான இந்த நூலகக் கட்டடம் இடிக்கபட்டது. பின்னர் அதே இடத்தில் புதியதாக நூலகக் கட்டடமானது 2,200 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. புதிய கட்டடத்தில் மாநாட்டு அரங்கம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த நூலகம் வகுப்பு வாரியத்தின் கீழ் அல்லாமல் சங்கச் சட்டத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Muhammadan Public Library" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "சென்னையின் அறிவுச் சுரங்கங்கள்!". 2023-08-22. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. City, Chennai. "Muhammadan Public Library, Triplicane Chennai". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மதன்_பொது_நூலகம்&oldid=3873973" இலிருந்து மீள்விக்கப்பட்டது