முகம்மது அல்-புகாரி
முகம்மது அல்-புகாரி (முகம்மது இப்னு இஸ்மாஈல் இப்னு இப்றாகீம் இப்னு அல்-முஙீரா இப்னு பர்திஸ்பாஹ் அல்-புகாரீ, அரபு மொழி: محمد بن اسماعيل بن ابراهيم بن مغيره بن بردزبه بخاری), பொதுவாக புகாரி அல்லது இமாம் புகாரி, (கிபி 810 - 870), இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு (கி.பி.810) ஷவ்வால் மாதம் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு பிறந்தவர்.[1][2][3]
தமது 12ஆவது வயதில் (ஹிஜ்ரி 206இல்) புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு, ஹதீத் எனும் நபி மொழிகளைத் திரட்டுவதற்காக மக்காவிலிலேயே தங்கி விட்டார்.
மக்கா, மதீனா உள்ளிட்ட ஹிஜாஸ் பகுதியில் ஆறாண்டுகள் தங்கியிருந்த இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் நபிமொழிகளை அறிந்திருந்தோரிடமிருந்து நேரடியாக அவற்றைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்காக எகிப்து, சிரியா, ஈராக் முதலான நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டார். அன்றைய நபிமொழி அறிவிப்பாளர்களிடமிருந்து அன்னார் கேட்டு மனனம் செய்த ஹதீஸ்கள் பல இலட்சங்களாகும்.
இருப்பினும் நம்பத் தகுந்த வலுவான ஆதாரம் கொண்ட அறிப்பாளர் தொடர் வழியாகக் கிடைத்த நபிமொழிகளை மட்டுமே தமது முதன்மையான நூலாகிய ஸஹீஹ் அல்-புகாரீ என்ற புகழ் மிக்க நூலில் இடம் பெறச் செய்தார். இந்நூலில் இடம் பெறச் செய்வதற்கு அன்னார் தமக்குத் தாமே சில விதிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டார். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அன்னார் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7563.
இமாம் புகாரி எழுதிய பிற நூல்கள்
தொகு- அல்-அதபுல் முஃப்ரத்
- அத்-தாரீகுல் கபீர்
- அத்-தாரீஸ் ஸஃகீர்
- அல்-முஸ்னதுல் கபீர்
- அத்-தஃப்சீரல் கபீர்
- அல்-மப்சத்
- அல்-ஹிபா
- அல்-வஹ்தான்
- அல்-இலல்.
இமாம் புகாரி ஹிஜ்ரி 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதலாம் நாள் சனிக்கிழமை இரவு சமர்க்கந்து (கர்க்கந்த் ரஷ்யா) நகரில் தமது 62 ஆவது வயதில் மறைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ibn Rāhwayh, Isḥāq (1990), Balūshī, ʻAbd al-Ghafūr ʻAbd al-Ḥaqq Ḥusayn (ed.), Musnad Isḥāq ibn Rāhwayh (1st ed.), Tawzīʻ Maktabat al-Īmān, pp. 150–165
- ↑ "Encyclopædia Britannica". Archived from the original on 8 March 2021.
- ↑ Melchert, Christopher "al-Bukhārī". Encyclopaedia of Islam. Brill Online. [தொடர்பிழந்த இணைப்பு]