முகர்ரக்கு

முகர்ரக்கு (Muharraq) (அரபு மொழி: المحرق‎;) அல்லது முகற்றக்கு என்பது பகுரைன் நாட்டிம் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். 1932 ஆம் ஆண்டு மனாமா தலைநகராக மாற்றப்படும் வரை பகுரைனின் தலைநகராகவும் செயல்பட்டது[1][2]. 2012 ஆம் ஆண்டில் முகாரக்கின் மக்கள் தொகை 176,583 ஆகும்.

முகர்ரக்கு நகரம்
Muharraq City

مدينة المحرق
முகர்ரக்கின் தோற்றம் பின்னணியில் மனாமா
முகர்ரக்கின் தோற்றம் பின்னணியில் மனாமா
Countryபகுரைன்
GovernorateAl Muharraq Governorate
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்1,76,583 [2]
 • அடர்த்தி32.9/km2 (85/sq mi)

இந்நகரம் முகர்ரக்குத் தீவில் அமைந்துள்ளது. நீண்டகாலமாக ஒரு மதத்தின் மையமாகவும் திகழ்கிறது. பகுரைன் சர்வதேச விமான நிலையமும் இத்தீவில் அமைந்துள்ளது. முகர்ரக்கிற்கு அருகில் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்வாச் தீவுகள் இருக்கிறது. பெரிய கட்டிடங்கள், உணவு விடுதிகள், கடற்கரைகள் என்பன இத்தீவின் சிறப்பம்சங்களாகும். அதிகமான வெற்றிகளை ஈட்டித்தந்த பகுரைனின் காற்பந்தாட்ட சங்கமான முகர்ரக்குச் சங்கம் முகர்ரக்கு நகரில் இருந்தது. மேலும் இந்நகரம், சூக் எனப்படும் பாரம்பரிய சந்தை, பாரம்பரிய கலைகள், இசை என்பவற்றின் தாயகமாக விளங்கியது. அலிபகார் என்ற பிரபலமான வெற்றிப்பாடகர் முகர்ரக்கைச் சார்ந்தவர் ஆவார்.

வரலாறு தொகு

பண்டைய இரும்பு கற்கால நாகரிகமான பொனிசியனின் பிறப்பிடமான தைலாசில் இருந்து முகாரக்கின் தோற்றம் தொடங்குகிறது. மேலும் இந்நகரம் 5000 ஆண்டு பழமை வாய்ந்த தில்முன் நாகரிகத்திற்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் தைலாசு சகாப்தத்தில்தான் வரலாற்றுப் பதிவுகளில் முன்னிலை பெற்றுள்ளது. அப்போது பகுரைன் கிரேக்கர்களின் செலுசிட் பேரரசின் கீழ் இருந்தது. முகர்ரக்கு நகரம், சுறா கடவுளுக்கான பேகன் வழிபாட்டுத் தளமாக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. இந்நகர மக்கள் பிழைப்பிற்காக கடற்பயணம் மேற்கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களாக இருந்தனர். நகரத்தில் சுறாவின் மிகப்பெரும் சிலையை அமைத்து ஆவால் தெய்வத்தை வழிபாடு செய்தனர்.

5 ஆம் நூற்றாண்டில் நெசுடோரியன் இறையியல் கொள்கையை மையமாகக் கொண்ட கிறித்துவ சமயத்தின் பிரதான மையமாக முகாரக் விளங்கியது. அச்சமயத்தில் பாரசீக வளைகுடாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் இக்கிறித்துவப் பிரிவு ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதுவொரு மதப்பிரிவு எனக்கருதி இப்பிரிவை சார்ந்தவர்களை பைசண்டைன் பேரரசில் கொடுமைப்படுத்தினர். ஆனால் பகுரைன் அப்பேரரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே பாதுகாப்பை வழங்கியது. இன்று முகர்ரக் நகரைச் சுற்றியுள்ள பல கிராமங்களின் பெயர்களில் மடம் என்ற பொருள் கொண்ட அல்-டைர், பிக்குகளின் பாதை என்ற பொருள் கொண்ட குவாலாலி போன்றவை இடம்பெற்று இதைப் பிரதிபலிக்கின்றன.

1521 இல் போத்துக்கீசர்களும் 1602 இல் பாரசீகர்களும் ஆட்சியை எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து அல் முகாரக் 1783 இல் எஞ்சியிருந்த பகுரைன் பகுதிகளுடன் அல் காலிபா வம்சத்தின் கட்டுப்பாட்டில் சென்றது.[3]

பொருளாதாரம் தொகு

வளைகுடா விமான நிறுவனத்தின் தலைமையகம் முகாரக்கில் உள்ளது. பகுரைன் விமான நிறுவனத்தின் தலமையகமும் முகாரக்கின் முகமது மையத்தில் இருக்கிறது.[4][5]

அரசாங்கமும் உள்கட்டமைப்பும் தொகு

போக்குவரத்து அமைச்சகத்தின் சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்கள் துறைக்காக 586 வீடுகள் முகாரக்கில் கட்டப்பட்டுள்ளன.[6]

கல்வி தொகு

அரசாங்கத்தின் கல்வி அமைச்சகம் முகர்ரக்கில் அரசு பள்ளிகளை நடத்துகிறது. அபு பாரியாசு அல்-அம்தானி ஆண்கள் தொடக்கப்பள்ளி, அல்-மாரி ஆண்கள் தொடக்கப்பள்ளி, அசன் பின் தாபித் ஆண்கள் தொடக்கப்பள்ளி, ஓமர் பின் அப்துல்லசீசு ஆண்கள் தொடக்கப்பள்ளி, சேக் மொகம்மது பின் ஈசா அல்-கலீபா ஆண்கள் தொடக்கப்பள்ளி, ஓமர் அல்-கட்டாப் ஆண்கள் தொடக்க மற்றும் இடைநிலை பள்ளி, அப்துல் ஏ. ஆர். ரகுமான் அல்-நாசர் ஆண்கள் இடைநிலைப்பள்ளி, தாரிக் பின் செயாத் ஆண்கள் இடைநிலைப்பள்ளி, மற்றும் மொகாரக் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி போன்றவை கல்வி அமைச்சகம் நடத்துகின்ற சிறுவர்களுக்கான பள்ளிகள் சிலவாகும். ஆ'அமீனா பின்ட் வகாப் பெண்கள் தொடக்கப்பள்ளி அல்-முகாரக் பெண்கள் தொடக்கப்பள்ளி, மரியம் பெண்ட் ஒம்ரன் பெண்கள் தொடக்கப்பள்ளி , சுபைதா பெண்கள் தொடக்கப்பள்ளி, இசுதிக்லால் கதிசா அல்-குப்ரா பெண்கள் இடைநிலைப்பள்ளி சனூனாபியா பெண்கள் இடைநிலைப்பள்ளி மற்றும் முகாரக் பெண்கள் உயர் நிலைப்பள்ளி போன்றவை பெண்களுக்கான பள்ளிகளாகும்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Al Khalifa." Al Khalifa. Retrieved on 24 December 2011.
  2. "[1] பரணிடப்பட்டது 2012-05-13 at the வந்தவழி இயந்திரம்." Ibn Utub. Retrieved on 24 December 2011.
  3. Encyclopædia Britannica: Al-Muḥarraq.
  4. "Contact Us பரணிடப்பட்டது 2010-06-11 at the வந்தவழி இயந்திரம்." Bahrain Air. Retrieved on 22 June 2010.
  5. "HQ Map பரணிடப்பட்டது 2010-06-11 at the வந்தவழி இயந்திரம்." (image) Bahrain Air. Retrieved on 22 June 2010.
  6. "Contact Us" (Archive) Ministry of Transportation. Retrieved on February 7, 2014. "Civil Aviation Affairs P.O. Box 586 Kingdom of Bahrain Tel: +973 17351111 Courier address: Building 586, Road 2409, Muharraq 224" Address in Arabic (Archive): "شئون الطيران المدني هاتف: 0097317321189 فاكس: 0097317330123 صندوق بريد 586 مملكة البحرين العنوان: مبنى 586، طريق 2409، المحرق 224 "
  7. "Directory." Ministry of Education. Retrieved on 8 September 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகர்ரக்கு&oldid=3790031" இலிருந்து மீள்விக்கப்பட்டது