முகுந்த தேவன்

முகுந்த தேவன் அல்லது முகுந்த அரிச்சந்திரன் (கிபி 1559-1568) தற்கால ஒடிசாவில் வேங்கியை ஆண்ட கீழைச் சாளுக்கியர் அரசமரபைத் தோற்றுவித்தவர்.[1][2][3]

முகுந்த தேவ ஹரிச்சந்திரன்
மகாராஜா
ஆட்சிக்காலம்கிபி 1559 - 1568
முடிசூட்டுதல்கட்டக்
முன்னையவர்இரகுராம் ராய சோடராயன்
(போய் வம்சம்)
பின்னையவர்முதலாம் இராமச்சந்திர தேவன்
(போய் வம்சம்)
இறப்புதற்கால ஜாஜ்பூர், ஒடிசா
மரபுகீழைச் சாளுக்கியர்
மதம்இந்து சமயம்

இவர் கிபி 1559இல் போய் வம்சத்தின் இறுதி மன்னர் இரகுராம் ராய சோடராயரைக் கொன்று, கட்டக் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு அரியணையில் ஏறினார். இவர் ஒன்றுபட்ட ஒரிசாவை நிறுவ முயற்சித்தார்.[4][5][6]

செயற்பாடுகள்

தொகு

இவர் புரி நகரத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் அருகே உள்ள குண்டிச்சா கோயிலுக்கு இரண்டு சிங்க நுழைவாயில்கள் மற்றும் தேரோடும் வீதிகள், அலங்கார வளைவுகள் மற்றும் மண்டபங்களை நிறுவினார்.[7]

தற்கால பாலசோர் மாவட்டத்தில் தொடர் கோட்டைக்களை நிறுவினார். இக்கோட்டைகள் 1558இல் நடைபெற்றப் போரில் வங்காள சுல்தானனின் படைத்தலைவர் காலாபாகாத் என்பவரால் சிதைக்கப்பட்டது.[8]

போர்கள்

தொகு

முகுந்த தேவன் ஆப்கானிய வங்காள சுல்தானுக்கு பகையாகவும்; முகலாயப் பேரரசர் அக்பருடன் நட்பாகவும் இருந்தார். இவர் வங்காள சுல்தானுக்கு எதிராக இரண்டு முறை போரிட்டார். 1560இல் நடைபெற்ற போரில் முகுந்த தேவன் வங்காள சுல்தான் படைகளை வீழ்த்தி வெற்றி பெற்றான். 1567இல் நடைபெற்ற போரில் வங்காள சுல்தானின் தளபதி காலாபாகாத் முகுந்த தேவனை கொன்று, நாட்டை சிதைத்தான்.[9][10]பின்னர் அரியணை ஏறிய முதலாம் இராமச்சந்திர தேவன், அக்பருடன் கூட்டுச் சேர்ந்ததால், ஆப்கானிய வங்காள சுல்தான்களின் இடையீடு இன்றி ஆட்சி நடத்தினார்.[5][11]

மேற்கோள்கள்

தொகு
  1. Suryanarayan Das (2010). Lord Jagannath. Sanbun Publishers. pp. 53–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80213-22-4.
  2. Cultural Heritage of [Orissa]: pts. 1-2. Katak. State Level Vyasakabi Fakir Mohan Smruti Samsad. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-902761-5-3.
  3. Journal of the Institute of Asian Studies. The Institute. 1992.
  4. India), Asiatic Society (Kolkata (1901). Journal (in ஆங்கிலம்).
  5. 5.0 5.1 S. C. Bhatt, Gopal K. Bhargava (2006). Land and People of Indian States and Union Territories: In 36 Volumes. Orissa. Gyan Publishing House. pp. 26–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-377-7.
  6. Cultural Heritage of [Orissa]: pts. 1-2. Katak (in ஆங்கிலம்). State Level Vyasakabi Fakir Mohan Smruti Samsad. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-902761-5-3.
  7. Suryanarayan Das (2010). Lord Jagannath. Sanbun Publishers. pp. 53–54–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80213-22-4.
  8. Crafts and Commerce in Orissa. Mittal Publications. pp. 21–. GGKEY:4EYA3F6QHL9.
  9. Durga Prasad Patnaik (1989). Palm Leaf Etchings of Orissa. Abhinav Publications. pp. 4–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-248-2.
  10. Orissa General Knowledge. Bright Publications. pp. 27–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7199-574-5.
  11. Mohammed Yamin. Impact of Islam on Orissan Culture. Readworthy. pp. 37–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5018-102-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுந்த_தேவன்&oldid=3713268" இலிருந்து மீள்விக்கப்பட்டது