முகேசு ராஜ்புத்

இந்திய அரசியல்வாதி

முகேசு லோதி ராஜ்புத் (Mukesh Rajput) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய மக்களவை மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பரூக்காபாது மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2] இவர் பரூக்காபாது மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும், பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16ஆவது மற்றும் 17ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக பரூக்காபாது தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முகேசு ராஜ்புத்
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்சல்மான் குர்சித்
தொகுதிபரூக்காபாது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 ஆகத்து 1968 (1968-08-08) (அகவை 56)
பரூக்காபாது, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்பரூக்காபாது
As of 22 ஆகத்து, 2024
மூலம்: [1]

இளமை

தொகு

முகேசு லோதி ராஜ்புத் 1968 ஆகத்து 8 அன்று சிறீ லஜ்ஜாராம், சந்தவதி ஆகிய இணையரின் மகனாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரூக்காபாது நகரத்தில் பிறந்தார். உத்தரப் பிரதேசத்தின் பரூக்காபாத்தில் உள்ள கமல்கஞ்சில் உள்ள ஆர். பி. பட்டக் கல்லூரியில் தனது இளம் அறிவியல் (பி. எஸ்சி.) பட்டம் பெற்றார். இவர் சௌபாக்கியவதியை 1980 சூன் 10 அன்று மணந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mukesh Rajput | National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-06-27.
  2. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-06-27.
  3. "BJP Farrukhabad Lok Sabha candidate Mukesh Rajput allegedly threatens power department engineer after being refused no dues certificate". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-04-03. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  4. "हिंदी खबर, Latest News in Hindi, हिंदी समाचार, ताजा खबर". Patrika News (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகேசு_ராஜ்புத்&oldid=4075876" இலிருந்து மீள்விக்கப்பட்டது