முகைதீன் பள்ளிவாசல், லட்சத்தீவு

முகைதீன் பள்ளிவாசல் (Mohidden Mosque) இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் தலைநகரான கவரத்திக்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் உஜ்ரா பள்ளிவாசல் எனவும் அழைக்கப்படுகிறது.

முகைதீன் பள்ளிவாசல்,லட்சத்தீவு
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கவரத்தி, லட்சத்தீவு
புவியியல் ஆள்கூறுகள், லட்சத்தீவு, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்10°34′N 72°37′E / 10.57°N 72.62°E / 10.57; 72.62
சமயம்இசுலாம்

வரலாறு தொகு

பழமையான இந்த பள்ளிவாசல் சேக் முகம்மது காசிம் என்பவரால் கட்டப்பட்டது. இந்த பள்ளிவாசல் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சறுக்கு மரத்தாலான அழகான மேற்கூரையை கொண்டுள்ளது.[1]

அமைப்பு தொகு

இப்பள்ளிவாசலின் தூண்கள் கடுஞ்சிக்கலான சிற்ப வேலைபாடுகள் கொண்டுள்ளது. இப்பள்ளிவாசலை கட்டிய சேக் முகம்மது காசிம்க்கு இங்கேயே அடக்கத்தலம் உள்ளது. பள்ளிவாசல் தேவைகளுக்கு கிணறு உள்ளது. அங்கு மீன் அருங்காட்சியகம் உள்ளது. அதில் பல வண்ணங்களில் மீன்கள் உள்ளன.[1]

இந்த பள்ளிவாசல் பழமையான சறுக்கு மர வேலைபாடுகள் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Official website of lakshadweep Government". Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-25.
  2. "Islands in the sun". The Hindu.