முசாபிர் ராம் பரத்வாஜ்

பவுன் மட என்ற நாட்டுப்புற இசைக் கருவி கலைஞர்

முசாபிர் ராம் பரத்வாஜ் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பவுன் மட என்ற நாட்டுப்புற  இசைக் கருவி கலைஞர் ஆவார். இவருக்கு 2014 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Musafir Ram Bhardwaj
பிறப்பு1930 (அகவை 93–94)
Himachal Pradesh, India
இசை வடிவங்கள்Indian folk
தொழில்(கள்)Instrumentalist
இசைக்கருவி(கள்)Paun Mata

வாழ்க்கை

தொகு

அவர் 1930 இல் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள பார்மூர் பகுதியில் உள்ள சுஞ்சாய் கிராமத்தில் தீவானா ராமு என்பவருக்கு பிறந்தார். அவருக்கு முறையான கல்வி கற்க வாய்ப்பு இல்லை  என்றாலும்  அவரது  13 வயதில் தனது தந்தையிடமிருந்து பவுனா மட இசைக்கருவியை பயன்படுத்த கற்றுக்கொண்டார். 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தனது இசைத்திறமையை உலகிற்கு காட்டியுள்ளார். அவர் ஒரு விவசாயி மற்றும் தையல்காரரும் ஆவார். பரத்வாஜுக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். [1]

பவுன மட

தொகு

பவுன மட என்பது செப்பு டிரம் மற்றும் ஆட்டுக்குட்டியின் தோலால் செய்யப்பட்ட இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பாரம்பரிய இசைக்கருவியாகும். பரத்வாஜ் குடும்பத்தினர் இசைக்கருவியை வாசிக்கிறார்கள், மேலும் அவர்கள் இசைக்கருவியை இசைக்க ஹிமாச்சல பிரதேசத்தில் சமூக மற்றும் மத விழாக்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.[1]

விருதுகள்

தொகு
  • பத்மஸ்ரீ, 2014 இல் இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருது [2]
  • வாழ்நாள் சாதனையாளர் விருது 2013 திவ்யா ஹிமாச்சல் [1]
  • 2009 இல் ராஷ்டிரபதி விருது [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Phull, Rajiv K. (2014-02-01). "Lifetime Achievement Award: Musafir Ram Bhardwaj". Divya Himachal இம் மூலத்தில் இருந்து 2014-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6NGMvA3oD?url=http://www.divyahimachal.com/himachal-news-2/himachal-excellence-awards-2013-9/. 
  2. "Padma Awards Announced". Press Information Bureau, Ministry of Home Affairs, Government of India. 25 January 2014. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசாபிர்_ராம்_பரத்வாஜ்&oldid=3768183" இலிருந்து மீள்விக்கப்பட்டது