முசீராபாத்து பள்ளிவாசல்
முசீராபாத் மஸ்ஜித் (Musheerabad Mosque) ( முசீராபாத் பாடி மஸ்ஜித் அல்லது ஜமா மஸ்ஜித் முசீராபாத் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலாகும். [1] [2] [3] அசல் பகுதியை குதுப் ஷாஹி வம்சத்தின் நான்காவது சுல்தானான இப்ராஹிம் குலி குதுப் ஷா கட்டியுள்ளார். இது ஐதராபாத்தின் ஹயாத்நகர் பகுதியில் அமைந்துள்ள ஹயாத் பக்சி பள்ளிவாசலை ஒத்துள்ளது.
முசீராபாத்து பள்ளிவாசல் | |
---|---|
சுமார் 1940களில் குலாம் யாஸ்தானி என்பவரால் எடுக்கப்பட்ட பள்ளிவாசிலின் புகைப்படம். | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஐதராபாத்து, தெலங்காணா |
சமயம் | இசுலாம் |
வரலாறு
தொகுஇதன் கட்டுமானம் 1580 இல் தொடங்கி 1611 இல் நிறைவடைந்தது. கோல்கொண்டாவின் வீழ்ச்சிக்குப் பின்னர், பள்ளிவாசல் பயன்பாட்டில் இல்லை. இந்த பகுதி நிசாம் அலிகானின் ஆட்சியின் போது பிரதம மந்திரி நவாப் அரஸ்து ஜாவின் சாகிராகும் வரை இது கைவிடப்பட்டது. இது 1951ஆம் ஆண்டில் சரி செய்யப்பட்டது. இன்று, பழைய கட்டமைப்பு பாழடைந்த நிலையில் உள்ளது.
தொழுகைகளுக்கு இடமளிக்கும் வகையில் புதிய நான்கு மாடிப் பகுதி கட்டப்பட்டுள்ளது. இன்று புதிய பகுதி ஒரு பெரிய முற்றத்துடன் அமைந்துள்ளது. [4]
கட்டுமானம்
தொகுகட்டிடங்களுக்கு நான்கு வாயில்கள் கட்டுவதும் சுண்ணாம்புடன் அழகான வடிவமைப்புகளை செதுக்குவதும் ஈரானிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஐதராபாத்து நகரில் உள்ள பல்வேறு கட்டமைப்புகளில் ஈரானியர்கள் செல்வாக்கு செலுத்தினர். முசீராபாத் பள்ளிவாசலும் ஈரானிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதியில் ஐந்து உயரமான வளைவுகளும் மூலைகளில் இரண்டு மினார்களும் உள்ளன.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Hyderabad: The grandeur of Qutb mosque" (in en). https://www.deccanchronicle.com/nation/current-affairs/030618/hyderabad-the-grandeur-of-qutb-mosque.html.
- ↑ "Jamia Masjid Musheerabad, Musheerabad Mosque Hyderabad – Temples In India Information". templesinindiainfo.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-20.
- ↑ "There lies a forgotten story" (in en-IN). https://www.thehindu.com/society/history-and-culture/the-musheerabad-badi-masjid-narrates-a-lesser-known-chapter-in-hyderabads-history/article19523546.ece.
- ↑ Bilgrami, Syed Ali Asgar (1992). Landmarks of the Deccan: A Comprehensive Guide to the Archaeological Remains of the City and Suburbs of Hyderabad (in ஆங்கிலம்). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120605435.