முச்சண்டி
முச்சண்டி (Muchandi) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் பெல்காம் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1][2]
முச்சண்டி Muchandi | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 15°53′N 74°34′E / 15.88°N 74.56°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெல்காம் |
வட்டம் (தாலுகா) | பெல்காம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,179 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முச்சண்டியில் 2649 ஆண்களும் 2530 பெண்களும் ஆக மொத்தம் 5179 பேர் இருந்தனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவலின்படி முச்சண்டி கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 597707 ஆகும். இது பெல்காமில் இருந்து 3 கிமீ தொலைவில் முச்சண்டி கிராமம் அமைந்துள்ளது. முச்சண்டி கிராமத்தின் மாவட்ட மற்றும் துணை மாவட்டத் தலைமையகமாகவும் அறியப்படுகிறது.[1]
கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 895.63 எக்டேர்களாகும். 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முச்சண்டியில் மக்கள் தொகை 5,622 ஆக இருந்தது. இதில் ஆண் மக்கள் தொகை 2,818 ஆகவும், பெண் மக்கள் தொகை 2,804 ஆகவும் உள்ளது. முச்சண்டி கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 67.24% இதில் 75.62% ஆண்களும் 58.81% பெண்களும் கல்வியறிவு பெற்றிருந்தனர். அப்போது முச்சண்டி கிராமத்தில் சுமார் 1,254 வீடுகள் இருந்தன.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Village code= 58700 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
- ↑ "Yahoomaps India : Muchandi, Belgaum, Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
- ↑ "Muchandi Village Population - Belgaum - Belgaum, Karnataka", www.census2011.co.in, பார்க்கப்பட்ட நாள் 2023-12-23