முட்டை பொதியுறை
முட்டை உறை அல்லது முட்டை பொதியுறை, பெரும்பாலும் தேவதை பணப்பை (An egg case or egg capsule, often colloquially called a mermaid's purse) என்று அழைக்கப்படுவது ஓவிபாரஸ் வகை சுறாக்கள், சிலவகை திருக்கை மீன்கள், கலப்புச்சுறாக்களின் முட்டைகளைக் கொண்டுள்ள ஒரு உறை ஆகும். பொதுவாக முட்டை பொதியுறைகளானது ஒரு கருவைக் கொண்டதாக இருக்கும். என்றாலும் பெரிய திருக்கை மீன் மற்றும் பல்வண்ண மணல் திருக்கை மீன் போன்றவற்றின் முட்டை பொதியுறைகளில் 7 கருக்கள் இருக்கும். [1]
விளக்கம்
தொகுமுட்டை பொதியுறைகள் கொலாஜன் புரத இழைகளால் [2] ஆனவை. இந்த உறைகள் பெரும்பாலும் தடித்த தோல் போன்று உறுதியானதாகவும் இருக்கும். [3] சில முட்டை பொதியுறைகளின் வெளிப்புறத்தில் கொடிச்சுருள் போன்ற அமைப்பு கொண்டிருக்கும். இதன் மூலம் இந்த பொதியுறையானது தாவரங்கள், பாறைகள் போன்றவற்றை பற்றிக் கொள்ளும். [1] [4] சில பொதியுறைகள் ஒளி ஊடுருவும் கண்ணாடி போன்ற தோற்றம் உடையவை. புல்ஹெட் சுறா முட்டைகளைத் தவிர, பிற முட்டை பொதியுறைகளின் ஒவ்வொரு மூலையிலும் கொம்புகள் எனப்படும் அமைப்புகளோடு செவ்வக வடிவத்தில் இருக்கும். [1] [4] குரங்கன் சுறாவின் முட்டை பொதியுறையானது திருகு போன்ற தோற்றத்தில் காணப்படும். இந்த முட்டையை இட்ட பிறகு தாய்ச் சுறா அதை வாயில் கவ்விச் சென்று பவளப்பாறை இடுக்கில் வைத்துவிடும். இதனால் அந்த முட்டையானது கடல் அலைகளினால் அடித்துச் செல்லப்படாது பாதுகாப்பாக இருக்கும். பெரும்பாலும் ஒரு முறைக்கு இரண்டு முட்டை பொதியுறைகளை சுறாக்கள் இடும்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Ebert, David A., Davis, Chante D. (2007). "Descriptions of skate egg cases (Chondrichthyes: Rajiformes: Rajoidei) from the eastern North Pacific". Zootaxa 1393: 1-18.
- ↑ Evans, David H. (June 1981). "The egg case of the oviparous elasmobranch, Raja Erinacea, does osmoregulate" (PDF). Journal of Experimental Biology 92. http://jeb.biologists.org/content/jexbio/92/1/337.full.pdf.
- ↑ Compagno, Leonard (2002). "Sharks of the World". FAO Species Catalogue for Fishery Purposes 2: 31–50.
- ↑ 4.0 4.1 Treloar, M.A.; Laurenson, L.J.B.; Stevens, J.D. (2006). "Description of Rajid egg cases from southeastern Australian waters". Zootaxa.