கலப்புச்சுறா (வகைப்பாடு)
கலப்புச்சுறாக்கள்(Chimaeras) புதைப்படிவ காலம்: | |
---|---|
Callorhinchus milii | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | முழுத்தலைக் குருத்தெலும்பி
|
வரிசை: | ஆழ்கடல் குருத்தெலும்பி Dmitry Obruchev, 1953
|
குடும்பங்கள் | |
|
கலப்புச்சுறா (வகைப்பாடு) என்ற (இலத்தீன்:Chimaera[2]; ஆங்கிலம்:ghost sharks (அ) ratfish (அ) spookfish (அ) rabbitfish) மீனினம் தான், உயிர்வாழும் மீன்களிலேயே மிகப் பழமையானதாகவும், உயிரோடு இருப்பதுமான மீனினம் என 2009 ஆம் ஆண்டு கண்டறிந்துள்ளனர். [3] இவை புதிரான, வியக்கத்தகுந்த, விந்தையான மீனினம் ஆகும். சுறாவுடன் மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால், 40கோடி ஆண்டுகளுக்கு முன்னரே பிரிந்து, சிற்சில மாற்றங்களுடன், சுறா மீன் களைப்போன்ற தோற்றத்தை உடையனவாக இருக்கின்றன. [3] மிக ஆழமான கடலில்(2600மீட்டர்) வாழும் இயல்புடையதாக உள்ளன. [3] இவற்றில் 50 சிற்றினங்கள் வாழ்கின்றன. இந்நூற்றாண்டில் ஏறத்தாழ 10 கண்டறியப்பட்டன. இவை எலும்பு மீன்களுக்கும், குருத்தெலும்பு மீன்களுக்கும் இடைபட்டத் தன்மைகளையும், இருவித மீனின இயல்புகளையும் பெற்றுள்ள கலப்பு மீனினம் ஆகும். எனவே, இதனை கலப்புச்சுறா வகைப்பாட்டில் வைத்துள்ளனர்.
சூழல் தகைமைகள்
தொகுதோற்றம்
தொகுஇவற்றின் தொல்லுயிர் எச்சம் சரிவர கிடைக்காமையால், மரபியல் ஆய்வுகளில், டி. என். ஏ அடிப்படையிலான முடிவுகள் பொருத்தமாக அமைந்து இவ்வுயிரினத்தின் தோற்றத்தை விவரிக்கிறது.[4] இந்த விலங்கியல் வரிசை, சைலூரியன் காலத்தில், 42 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக அறியப்படுகிறது. இவ்வுயிரினக் கிளையின் மிக அடித்தளமாக callorhinchids அமைந்து, callorhinchid, rhinochimaerid, chimaerid என்ற மூன்று குடும்பங்களைக் கொண்டுள்ளது. அக்குடும்பங்களில் தற்போது வாழும் 39 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இம்மூன்று குடும்பங்களும், பின் சுராசிக் காலம் முதல் முன் கிரீத்தேசியக் காலம் வரை பிரிந்து வளர்ந்தன. இதுபற்றி மேலும் கீழே வகைப்பாட்டியல் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
வாழிடம்
தொகுஇம்மீனினங்கள் பெருங்கடலின் தரையில் 2,600 மீட்டர்களுக்கும் (8,500 அடிகள்) கீழே வாழும் இயல்புடையவை ஆகும். இதற்கு விதிவிலக்காக, 200 மீட்டர்கள் (660அடிகள்) ஆழத்திலும் வாழும் இயல்புடையாதாக, Callorhinchus என்ற பேரினத்தின் மீனினங்கள் (எ.கா. Chimaera monstrosa, Hydrolagus colliei) வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. குறைவான ஆழத்தில் வாழும் மீன்களில் சில, மீன்காட்சியகத்திலும் (public aquaria) பேணப்படுகின்றன. [5]
வளரியல்பு
தொகுபெரும்பாலான இம்மீனினங்கள், மென்மையான நீண்ட உடலையும், பெரிய தலையையும், ஒரு செவுள் திறப்பையும் பெற்றிருக்கின்றன. இவைகள் 150 சென்டிமீட்டர்கள் (4.9 அடி) நீளம் வளரும் தன்மையுடையது. வெகுசில குறைவான நீளமிருக்கின்றன. எ.கா. Harriotta raleighana இனமானது, 1.0 - 1.5 மீட்டர் நீளமிருக்கிறது. சிலவகை இனங்களில் வால் நீளமாக இருக்கின்றன. பல இனங்களில், நீளமான மூக்குப்பகுதி, நீண்ட உணர் உறுப்பாக மாறியுள்ளது. [6] இவைகள் கறுப்பு நிறத்திலிருந்து, பழுப்பு நிறம் வரை உள்ளன. இவற்றின் உடலின் மேற்பக்கத்துடுப்புக்கு(dorsal fin) முன்னே, நச்சுத்தன்மையுள்ள முள்ளைப் பெற்றிருக்கின்றன.
ஒத்த இயல்புகள்
தொகுசுறா மீனினத்தில் இருக்கும் சில இயல்புகள், இம்மீனினத்தில் காணப்படுகின்றன. சுறாவில் காணப்படுவது போன்று பெண்ணுடன் சேரும் ஆணுக்கு ஒரு சிறப்பான உறுப்பு உள்ளது. இது சுறாவில் வால்பக்கம் உள்ளது. ஆனால், இந்த மீனினத்தின் இந்த அணையுறுப்பு(clasper), இடுப்புத்துடுப்பின் முன்பக்கத்தில், தலைபக்கமாக அமைந்துள்ளது. [6] ஏனெனில், உடலுறவின் போது, பெண் மீனை நகராமல் பிடித்துக் கொள்ள, இந்த அணைப்புறுப்புப் பயனாகிறது.[7] பெண்மீன்கள் உள்இனப்பெருக்கம் செய்ய, நூற்கண்டு போல வடிவமுடைய, தோல் போன்ற அமைப்புடையப் பெட்டகத்திற்குள் முட்டைகளை இடுகிறது.[1]
மாறுபடும் இயல்புகள்
தொகுசுறா மீனினத்தில் இல்லாத சில இயல்புகளும், இம்மீனினத்தில் காணப்படுகின்றன. இவைகளின் மேல்தாடைகள், மண்டையோட்டு எலும்புடன் கலந்து உள்ளது. மலவாயும், இனப்பெருக்க சிறுநீர் திறப்புகளும் தனித்தனியாக அமைந்துள்ளன. பற்கள் நிலையானவை. புது பல்வரிசை, மறுபடியும் தோன்றா இயல்புடையவை ஆகும். மூன்று இணையான அரைக்கும் தட்டுகளாக, பல்லமைப்பு அமைந்துள்ளது. இம்மீன்களில், எலும்பு மீன்களைப் போன்ற செவுள்மூடிக் (operculum) காணப்படுகின்றன. [6] இந்த முதுகெலும்பி மீன் இனத்தில் (Chimaera) மட்டுமே, கால்கை போன்ற மூன்றாவது இணை உறுப்பிற்கான தடயங்கள் காணப்படுகின்றன.[8]
வகைப்பாட்டியல்
தொகுஉயிரியல் வகைப்பாட்டியல் படி, இவை விலங்கியல் என்ற பெரும்பிரிவினுள் அமைகின்றன. எனவே, நாம் விலங்கியல் வகைப்பாடு என்பதனைக் கடைபிடிக்க வேண்டும். அதன்படி வகைப்பாட்டியலில், இவ்வுயிரினத்தை விவரிக்கலாம்.
வகைப்பாட்டியல் கூறுகள்
தொகுஇவை மெய்க்கருவுயிரியைப் பெற்றுள்ள, கடல் விலங்குகளின் கீழ் வருகின்றன. இவற்றின் கருக்கோளம் (en:gastrula), சில அடுக்குகளாக (germ layer) அமைந்து, அடுக்குக்கருக்கோள (Eumetazoa) விலங்குகளில் அடங்குகின்றன. மேலும், இவை அனைத்தும் இருபக்கச்சமச்சீர்(Bilateria) உடலமைப்பைப் பெற்ற விலங்குகளாகவும் உள்ளன. கருவளர்ச்சியின் போது தோன்றும் துளைகளில், ஒன்று உணவுவாயாகவும், மற்றொன்று மலவாயாகவும் மாறும். அத்தகைய மாற்றம் பெறும் விலங்குகளில் (Nephrozoa) இரு உட்பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றில் முதல் துளை மலவாயாகவும், இரண்டாவதாகத் தோன்றும் துளையானாது, உணவு வாயாக மாறும். அத்தகைய இயல்பைப் பெற்றுள்ள விலங்குகள், இரண்டாம்துளைத்தோற்ற விலங்குகள் (Deuterostomia) என அழைக்கப்படுகின்றன. இத்தகைய விலங்குகள், தொகுதிகளாகப் பிரிகின்றன.
அத்தொகுதிகளில் ஒன்று, முதுகுநாணிகள் தொகுதி ஆகும். அவற்றின் ஒரு கிளையாக வன்முதுகுநாணிகள் (Chordata Craniata) உள்ளன. இத்தகைய வன்முதுகுநாணிகளின், கீழ்வரும் தொகுதியான முதுகெலும்பிகளில், இவை அடங்குகின்றன. அத்தகைய முதுகெலும்பிகளின் உட்தொகுதியில் வரும், தாடைவாய் விலங்குகளாக (Gnathostomata ) இவைப் பிரிகின்றன. இதனை அடுத்து குருத்தெலும்பிகள் (Chondrichthyes) என்பது உள்ளன.
Chondrichthyes என்ற வகுப்பானது, கிரேக்கம்: χονδρ - ἰχθύς இலத்தீன்: chondr - ichthys தமிழ் : குருத்தெலும்பு - மீன் என்ற சொற்களில் இருந்து உருவாகிறது. இந்த குறுத்தெலும்பிகள், தாடைகள் உடையன; இரு இணையான மூக்குத் துளைகளை உடையன; நீந்துவதற்கான இணைத்துடுப்புகளையும், செதில்களையும், வரிசையான இதய அறைகளையும், எலும்புக்கூடானது குருத்தெலும்பாலும் ஆனவையாக இருக்கின்றன.
இவ்வகுப்பின் கீழ் அமைந்துள்ள Holocephali என்ற சொல்லானது, 'முழுமைப்பெற்றத் தலைகள்' என்பதைக் குறிக்கிறது. Chimaeriformes என்ற வரிசையானது, ஆழ்கடலில் வாழும் குருத்தெலும்பு மீன் கூட்டத்தைக் (Chimaeridae) குறிக்கிறது. இத்தகைய மீன்கள், மென்மையானத் தோலினையும், கூம்புகின்ற உடலையும், சாட்டைப் போன்ற வாலினையும் பெற்றிருக்கின்றன.
Chimera என்பது, கிரேக்க தொன்மவியலின் படி, சிங்கம், ஆடு, பாம்பு ஆகிய உயிரின உடல்களின் பகுதிகளை கலந்து தன்னகத்தே உடைய, பயத்தை உண்டாக்கும் கற்பனை விலங்கினக் குறிக்கிறது. அதுபோல, இந்த மீன்வகை, குருத்தெலும்பு மீன்களின் இயல்புகளையும், எலும்பு மீன்களின் இயல்புகளையும் பெற்று விளங்குவதால் இப்பெயரை வைத்துள்ளனர்.
வகைப்பாட்டியல் ஒப்பீடு
தொகுஅண்மைய வகைப்பாட்டியல் குறிப்புகள், மூலமொழியான இலத்தீனிய மொழியில் தரப்பட வேண்டும் என்பது, அனைத்துலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி ஆகும். எனவே, அவ்வகைப்பாட்டினை நன்கு புரிந்து கொள்ள, கீழ்கண்ட அட்டவணைத் தரப்படுகிறது.
இலத்தீனிய வகைப்பாடு | பயன்பாட்டுக் குறிப்புகள் ( கலந்துரையாடல் ) | |
Superregnum: Eukaryota | மேற்திணை: மெய்க்கருவுயிரிகள் | |
Regnum: Animalia | திணை: விலங்குகள் | உலகம்(தமிழ்நாடு) இராச்சியம்(இலங்கை) |
Subregnum: Eumetazoa | கீழ்த்திணை: அடுக்குக்கருக்கோள விலங்குகள் | |
Cladus: Bilateria | உயிரினக்கிளை: இருபக்கச்சமச்சீர் விலங்குகள் | |
Cladus: Nephrozoa | உயிரினக்கிளை : வாய்தோற்ற விலங்குகள் | இருவகை வாய்த்தோற்ற விலங்குகளின் விவரம். |
Superphylum: Deuterostomia | மேற்தொகுதி: இரண்டாம் வாய்தோற்ற விலங்குகள் | ... |
Phylum: Chordata | தொகுதி : முதுகுநாணிகள் | |
Cladus: Chordata Craniata | உயிரினக்கிளை: வன்முதுகுநாணிகள் | ... |
Subphylum: Vertebrata | கீழ்தொகுதி: முதுகெலும்பிகள் | |
Infraphylum: Gnathostomata | உட்தொகுதி: தாடைவாயி | |
Classis: Chondrichthyes | வகுப்பு: குருத்தெலும்பி | |
Subclassis: Holocephali | கீழ்வகுப்பு: முழுத்தலைக் குருத்தெலும்பி | இதன் தலையானது, பரிணாம அடிப்படையில் முழுமைப் பெற்றதாகும். |
Ordo: Chimaeriformes | வரிசை: ஆழ்கடல் குருத்தெலும்பி | இவை பெரும்பாலும் ஆழ்கடலிலே வாழும் இயல்புடையவை ஆகும். |
Subordo: Chimaeroidei | கீழ்வரிசை: குட்டைமூக்குக் குருத்தெலும்பி | இதன் மூக்குக் குட்டையானது |
Familia: Chimaeridae | குடும்பம்: உருண்டகுட்டைமூக்குக் குருத்தெலும்பி |
Callorhinchidae = கலப்பைமூக்குக் குருத்தெலும்பி Hydrolagus colliei Rhinochimaeridae = கொம்புமூக்குக் குருத்தெலும்பி Hydrolagus trolli |
Genus: Chimaera | பேரினம் : கலப்புச்சுறா | ஏறத்தாழ சுறா போன்ற மீனினம் ஆகும். |
வகைப்பாட்டியல் உட்பரிவுகள்
தொகு21 ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகளும், அருங்காட்சிய இவ்வுயிரின மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட வகைப்பாட்டியல் ஆய்வுகளும், இதிலுள்ள புதிய இனங்களை அடையாளம் காட்டின [3] ஆறு பேரினங்களில் 50க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் வகைப்படுத்தப்பட்டன. இதன் மூன்று குடும்பங்களில் இரண்டு தொல்லியல் படிமங்கள் வழியாக்க கண்டறியப்பட்டன. † என்ற குறியீடு இருக்கும் இனங்கள் காலத்தால் அழிந்தவை ஆகும்.
குடும்பம் (Callorhinchidae)
தொகு- குடும்பம் Callorhinchidae Samuel Garman 1901
- பேரினம் Callorhinchus Bernard Germain de Lacépède, 1798
- Callorhinchus callorynchus (லின்னேயஸ், 1758) (கலப்பைமூக்கு கலப்புச்சுறா)
- Callorhinchus capensis Auguste Henri André Duméril, 1865 (கேப் யானைமீன்)
- Callorhinchus milii Jean Baptiste Bory de Saint-Vincent, 1823 (ஆசுத்திரேலிய பேய்சுறா)
- பேரினம் †Edaphodon- முன்வரலாற்றுக்காலம்
- †Edaphodon agassizi William Buckland, 1835
- †Edaphodon antwerpiensis M. Leriche, 1926
- †Edaphodon bucklandi Louis Agassiz, 1843
- †Edaphodon eyrensis J.A. Long, 1985
- †Edaphodon kawai Christopher Consoli, 2006
- †Edaphodon laqueatus Joseph Leidy, 1873
- †Edaphodon leptognathus - (முன்பு வகைப்படுத்தப் படவில்லை) Louis Agassiz
- †Edaphodon minor
- †Edaphodon mirabilis - (முன்பு வகைப்படுத்தப் படவில்லை)
- †Edaphodon mirificus Joseph Leidy, 1856
- †Edaphodon sedgwicki
- †Edaphodon smocki Edward Drinker Cope
- †Edaphodon stenobryus Edward Drinker Cope
- †Edaphodon tripartitus Edward Drinker Cope
குடும்பம் (Chimaeridae)
தொகு- குடும்பம் Chimaeridae Charles Lucien Bonaparte|Bonaparte, 1831
- பேரினம் Chimaera லின்னேயஸ், 1758
- Chimaera argiloba Peter R. Last, William T. White & Pogonoski, 2008 (வெண்துடுப்பு கலப்புச்சுறா)
- Chimaera bahamaensis Jenny M. Kemper, David A. Ebert, Dominique A. Didier Dagit & Leonard Joseph Victor Compagno, 2010 (பகாமா பேய்சுறா)
- Chimaera cubana Luis Howell-Rivero, 1936
- Chimaera fulva Dominique A. Didier Dagit, Peter R. Last & William T. White, 2008 (தென் கலப்புச்சுறா)
- Chimaera jordani Shigeho Tanaka (I), 1905 (சோர்டனின் கலப்புச்சுறா )
- Chimaera lignaria Dominique A. Didier Dagit, 2002 (கார்பென்டர்'சு கலப்புச்சுறா)
- Chimaera macrospina Dominique A. Didier Dagit, Peter R. Last & William T. White, 2008 (நீளமுள் கலப்புச்சுறா)
- Chimaera monstrosa லின்னேயசு, 1758 (முயல் மீன் )
- Chimaera notafricana Jenny M. Kemper, David A. Ebert, Leonard Joseph Victor Compagno & Dominique A. Didier Dagit, 2010 கேப் கலப்புச்சுறா
- Chimaera obscura Dominique A. Didier Dagit, Peter R. Last & William T. White|, 2008 (குட்டைமுள் கலப்புச்சுறா)
- Chimaera opalescens Elena A. Luchetti, Samuel Paco Iglésias & Daniel Y. Sellos, 2011[9]
- Chimaera owstoni Shigeho Tanaka|S. Tanaka (I), 1905 (ஓசுடன்சு கலப்புச்சுறா)
- Chimaera panthera Dominique A. Didier Dagit, 1998 (சிறுத்தை கலப்புச்சுறா)
- Chimaera phantasma David Starr Jordan & John Otterbein Snyder, 1900 (வெள்ளி கலப்புச்சுறா)
- பேரினம் Hydrolagus Theodore Gill, 1863
- Hydrolagus affinis (Félix António de Brito Capello , 1868) (சின்னக்கண் முயல்மீன்)
- Hydrolagus africanus (John Dow Fisher Gilchrist, 1922) (ஆப்பிரிக்க கலப்புச்சுறா)
- Hydrolagus alberti Henry Bryant Bigelow & William Charles Schroeder, 1951
- Hydrolagus alphus Kimberly L. Quaranta, Dominique A. Didier Dagit, Douglas J. Long & David A. Ebert, 2006[10]
- Hydrolagus barbouri (Samuel Garman, 1908)
- Hydrolagus bemisi Dominique A. Didier Dagit, 2002 (வெளுத்த பேய் சுறா)
- Hydrolagus colliei (George Tradescant Lay & Edward Turner Bennett, 1839) (புள்ளிய எலிமீன்)
- Hydrolagus deani (Hugh McCormick Smith & Lewis Radcliffe, 1912) (பிலிப்பைனிய கலப்புச்சுறா)
- Hydrolagus eidolon (David Starr Jordan & Carl Leavitt Hubbs, 1925)
- Hydrolagus homonycteris Dominique A. Didier Dagit, 2008 (கருப்பு பேய்சுறா )
- Hydrolagus lemures (Gilbert Percy Whitley|Whitley, 1939) (கருந்துடுப்பு பேய்சுறா)
- Hydrolagus lusitanicus Teresa Moura|Moura, Ivone Figueiredo, Pedro Bordalo-Machado|Bordalo-Machado, Conceição Almeida & Leonel Serrano-Gordo, 2005
- Hydrolagus macrophthalmus Don Fernando de Buen y Lozano|de Buen, 1959
- Hydrolagus marmoratus Dominique A. Didier Dagit, 2008 (பளிங்கு பேய்சுறா)
- Hydrolagus matallanasi Jules Marcelo Rosa Soto & Carolus Maria Vooren, 2004 (வரியுள்ள முயல்மீன்)
- Hydrolagus mccoskeri Lewis A. K. Barnett, Dominique A. Didier Dagit, Douglas J. Long & David A. Ebert, 2006 (காலபேகோசு பேய்சுறா)
- Hydrolagus melanophasma Kelsey C. James, David A. Ebert, Douglas J. Long & Dominique A. Didier Dagit, 2009 (கிழக்கு பசிபிக்கின் கருப்பு பேய்சுறா)
- Hydrolagus mirabilis (Robert Collett, 1904) (பெருங்கண் முயல்மீன்)
- Hydrolagus mitsukurii (David Starr Jordan & John Otterbein Snyder, 1904) (பிசாசு சுறா)
- Hydrolagus novaezealandiae (Henry Weed Fowler, 1911) (இருள் பேய்சுறா)
- Hydrolagus ogilbyi (Edgar Ravenswood Waite|Waite, 1898)
- Hydrolagus pallidus Graham S. Hardy & Matthias Stehmann, 1990
- Hydrolagus purpurescens (Charles Henry Gilbert, 1905) (இளஞ்சிவப்பு கலப்புச்சுறா)
- Hydrolagus trolli Dominique A. Didier Dagitr & Bernard Séret, 2002 (கூர்மூக்கு நீல கலப்புச்சுறா)
- Hydrolagus waitei Henry Weed Fowler, 1907
- Hydrolagus sp. D/G பெரும் கருப்பு கலப்புச்சுறா
- Hydrolagus sp. F பெருவியன் எலிமீன்
குடும்பம் (Rhinochimaeridae)
தொகு- குடும்பம் Rhinochimaeridae Samuel Garman, 1901
- பேரினம் Harriotta George Brown Goode & Tarleton Hoffman Bean, 1895
- Harriotta haeckeli Christine Karrer, 1972 (சிறுமுள் பிசாசுசுறா )
- Harriotta raleighana George Brown Goode & Tarleton Hoffman Bean, 1895 (பசிபிக்கின் நீள்மூக்கு கலப்புச்சுறா)
- பேரினம் Neoharriotta Henry Bryant Bigelow & William Charles Schroeder, 1950
- Neoharriotta carri Harvey R. Bullis & James S. Carpenter, 1966 (குள்ள அரிவாள்துடுப்பு கலப்புச்சுறா)
- Neoharriotta pinnata (Schnakenbeck, 1931) (அரிவாள்துடுப்பு கலப்புச்சுறா)
- Neoharriotta pumila Dominique A. Didier Dagit & Matthias Stehmann, 1996 (அரபிய அரிவாள்துடுப்பு கலப்புச்சுறா)
- பேரினம் Rhinochimaera Samuel Garman, 1901
- Rhinochimaera africana Leonard Joseph Victor Compagno, Matthias Stehmann& David A. Ebert, 1990 (துடுப்புமூக்கு கலப்புச்சுறா)
- Rhinochimaera atlantica Ernest William Lyons Holt & Byrne, 1909 (நீண்டமூக்கு முயல்மீன் )
- Rhinochimaera pacifica (Kakichi Mitsukuri, 1895) (பசிப்பிக்கின் பிசாசுசுறா)
குடும்பம் (Squalorajidae)
தொகு- குடும்பம் †Squalorajidae
- பேரினம் Squaloraja Agassiz, 1836
குடும்பம் (Echinochimaeridae)
தொகு- குடும்பம் †Echinochimaeridae
- பேரினம் Echinochimaera Lund, 1977
- †Echinochimaera meltoni Lund, 1977
- †Echinochimaera snyderi Lund, 1988
ஊடகங்கள்
தொகு-
குருத்தெலும்பு மீன்களின் பரிணாமம்
-
Hydrolagus colliei
-
Chimaera monstrosa
-
Callorhinchus callorynchus
-
Chimaera monstrosa
-
Hydrolagus affinis
-
Harriotta raleighana
-
Hydrolagus alberti
-
Harriotta raleighana
-
'பிலக்காயிடு' செதில்
இக்கட்டுரைகளையும் காணவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2009). "Chimaeriformes" in FishBase. January 2009 version.
- ↑ * Chimaera in the World Register of Marine Species
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Ancient And Bizarre Fish Discovered: New Species Of Ghostshark From California And Baja California". ScienceDaily. September 23, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
- ↑ Inoue JG, Miya M, Lam K, Tay BH, Danks JA, Bell J, Walker TI, Venkatesh B.(2010). Evolutionary origin and phylogeny of the modern holocephalans (Chondrichthyes: Chimaeriformes): A mitogenomic perspective. Mol. Biol. Evol.
- ↑ Tozer, H., & D. D. Dagit (2004). Husbandry of Spotted Ratfish, Hydrolagus colliei.[தொடர்பிழந்த இணைப்பு], Chapter 33 in: Smith, M., D. Warmolts, D. Thoney, & R. Hueter (editors). Elasmobranch Husbandry Manual: Captive Care of Sharks, Rays, and their Relatives. Ohio Biological Survey, Inc.
- ↑ 6.0 6.1 6.2 Stevens, J. & Last, P.R. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N. (ed.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Freaky New Ghostshark ID’d Off California Coast, a September 22, 2009 blog post from Wired Science
- ↑ American Wildlife, Wm. H, Wise & Co., Inc. New York, 1947. p. 279
- ↑ Luchetti, E.A., Iglésias, S.P. & Sellos, D.Y. (2011): Chimaera opalescens n. sp., a new chimaeroid (Chondrichthyes: Holocephali) from the north-eastern Atlantic Ocean. Journal of Fish Biology, 79 (2): 399–417.
- ↑ Quaranta et al. (2006). "A new species of chimaeroid, Hydrolagus alphus sp. nov. (Chimaeriformes: Chimaeridae) from the Galapagos Islands". Zootaxa 1377: 33–45. http://www.mapress.com/zootaxa/2006f/z01377p045f.pdf.
பொதுவான மேற்கோள்கள்:
- Froese, Rainer, and Daniel Pauly, eds. (2006). "Chimaeriformes" in FishBase. January 2006 version.