முதன்மை பீரங்கி வண்டி
முதன்மை பீரங்கி வண்டி (Main battle tank (MBT) என்பதை உலகாளாவிய பீரங்கி வண்டி என்றும் அழைப்பர்.[1]எடை மிக்க இத்தகைய பீரங்கி வண்டிகள் குண்டு துளைக்காத வகையில் உருக்கு கவசப்பட்டைகள் கொண்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1950களில் இத்தகைய முதன்மை பீரங்கி வண்டிகளை கவச அமைப்புகளுடன் ஐக்கிய இராச்சியம் முதலில் உற்பத்தி செய்தது.[2] இதனால் சாதாரண பீரங்கி வண்டிகளின் உற்பத்தி கைவிடப்பட்டது. முதன்மை பீரங்கி வண்டிகள் அனைத்து நாடுகளின் இராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது.இந்த முதன்மை போர்க்கள பீரங்கி வண்டிகள் தரைப்படைகள், எதிரிகளை தாக்கி போர்க்களத்தில் முன்னேற மிக உதவியாக உள்ளது.[3]
வேகம் மற்றும் எடை
தொகுமுதன்மை போர்க்கள பீரங்கி வண்டிகள் அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதன் அதிகபட்ச எடை 40 முதல் 70 டன்கள் ஆகும். இது 16 அடி ஆழமுள்ள நீரிலும் கடந்து செல்லும்.
முதன்மை போர்க்கள பீரங்கி வண்டியின் பாகங்கள்
தொகு
|
இலகு ரக முதன்மை பீரங்கி வண்டி
தொகுதற்போது இந்தியாவின் லடாக், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மலைப்பாங்கான போர்க்களங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப 25 டன் எடை கொண்ட ஜோராவர் இலகு ரக பீரங்கி வண்டிகளை குஜராத் மாநிலத்தின் அசிராவில் இந்தியா உற்பத்தி செய்து வருகிறது.[4][5]இலகு ரக பீரங்கிகளை உலங்கு வானூர்திகளில் மலைப்பாங்கான போர்க்களங்களுக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ogorkiewicz 2018 p222
- ↑ Forty, George (1979). Chieftain. London: I. Allan. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7110-0943-0. இணையக் கணினி நூலக மைய எண் 16495641.
- ↑ Tranquiler, Roger, Modern Warfare. A French View of Counterinsurgency trans. Daniel Lee,
Pitting a traditional combined armed force trained and equipped to defeat similar military organisations against insurgents reminds one of a pile driver attempting to crush a fly, indefatigably persisting in repeating its efforts.
- ↑ India showcases light battle tank 'Zorawar' for high-altitude warfare
- ↑ DRDO unveils indigenous light tank Zorawar