ஜோராவர் (இலகு ரக பீரங்கி வண்டி)
ஜோராவர் எல் டி (Zorawar LT), இமயமலை போன்ற மிக உயரமான போர்க்களங்களில், குறிப்பாக லடாக் போன்ற, சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்தியத் தரைப்படையினர் பயன்படுத்துவதற்காக, இந்தியப் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) மற்றும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஒரு இலகு ரக பீரங்கிகளுடன் கூடிய கவச வாகனம் ஆகும். இது குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டத்திலுள்ள துறைமுக நகரான அசிராவில் தயாரிக்கப்படுகிறது.
ஜோராவர் எல் டி (இலகு ரக பீரங்கி வண்டி) | |
---|---|
வகை | இலகு ரக பீரங்கி வண்டி |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | இந்தியத் தரைப்படை பயன்படுத்த உள்ளது |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | இந்தியப் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) லார்சன் அன்ட் டூப்ரோ |
வடிவமைப்பு | 2022-2024 |
தயாரிப்பாளர் | லார்சன் அன்ட் டூப்ரோ |
உருவாக்கியது | சூலை 2024 |
எண்ணிக்கை | முன்மாதிரி 1 [1] |
அளவீடுகள் | |
எடை | 25 டன்கள் |
பணிக் குழு | 3 |
முதல் நிலை ஆயுதங்கள் | ஜான் காக்கரில் நிறுவனம், 105 mm சுடு குழல்[2][3] |
இரண்டாம் நிலை ஆயுதங்கள் | 1 × NSV மெசின் கன் மற்றும் 12.7mm] சுடுகுழல் 2 × side mounted ATGM 16 × 81mm கையெறி குண்டுகள்,[4] |
இயந்திரம் | 816 குதிரைத் திறன் கொண்ட டீசல் இயந்திரம்[5][6] |
ஆற்றால்/எடை | 30-40 30-40 hp/tonne[7] |
இதன் முன்மாதிரி பீரங்கி வண்டி 6 சூலை 2024 அன்று வெளியியானது.[8]முதல்கட்டமாக 59 இலகு ரக ஜோராவர் பீரங்கி வண்டிகள் தயாரிக்க இந்திய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. 2027ஆம் ஆண்டிற்குள் 295 ஜோராவர் இலகு ரக பீரங்கி வண்டிகளை செய்யத் திட்டமிட்டுள்ளது.[9]-[10]
25 டன் எடை கொண்ட ஜோராவரின் பீரங்கி வண்டிக்கான 8V199 ரக எஞ்சின் ரோல்ஸ்ராய் நிறுவனம் அக்டோபர் 2024ல் வழங்க உள்ளது. [11]இந்த இலகு ரக ஜோராவர் பீரங்கி வண்டிகளை உலங்கு வானூர்திகளில் எளிதாக லடாக் போன்ற சீன எல்லைப்புறங்களில் கொண்டு செல்ல முடியும்.[12]
ஜோரவார் பீரங்கியின் தேவை
தொகு40 முதல் 70 டன் எடை கொண்ட முதன்மை பீரங்கி வண்டிகளை இமயமலை போன்ற உயரமான போர்க்களங்களுக்கு எளிதாக கொண்டு செல்ல இயலாத காரணத்தினால், 25 டன்கள் கொண்ட ஜோராவர் போன்ற இலகு ரக பீரங்கி வண்டிகளை உற்பத்தி செய்ய காரணமானது.
பெயர்க் காரணம்
தொகுஜம்மு காஷ்மீரை ஆண்ட டோக்ரா பேரரசின் தலைமைப் படைத்தலைவரான ஜோராவர் சிங் நினைவாக இந்த இலகு ரக பீரங்கி வண்டிக்கு ஜோராவர் எனப்பெயரிடப்பட்டது.[13]
கொள்முதல்
தொகுதொடக்க கட்டமாக இந்திய இராணுவம் 59 ஜோராவர் இலகு ரக வண்டிகளை உற்பத்தி செய்ய லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள 295 ஜோராவர் பீரங்கிகளை 2027ஆம் ஆண்டிற்குள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பாரத் போர்ஜ் நிறுவனம் ஜோராவர் பீரங்கி வண்டிகளை தயாரிக்க 14 மே 2024 அன்று திட்டமிட்டுள்ளது.[14]
எதிர்காலத்தில் இயக்குபவர்கள்
தொகு- இந்தியா
- இந்தியத் தரைப்படை - 59 உற்பத்தி செய்ய அனுமதி; எதிர்காலத்தில் 295 உற்பத்தி செய்ய திட்டம்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Army: Indigenously Developed 'Zorawar' Light Tank to Begin Trials Later This Month". the Wire (in ஆங்கிலம்). 2023-11-16.
- ↑ "India's 'Zorawar' Light Tank, Designed For Operations On China Border, To Be Ready This Month For Trials In December". பார்க்கப்பட்ட நாள் 2024-06-26.
- ↑ "L&T gets order to build prototype of light tank for Sino-India border". Business Standard. 2023-04-14.
- ↑ "Battlefield Protection System" (PDF). Defence Research and Development Organisation. Defence Scientific Information & Documentation Centre. பார்க்கப்பட்ட நாள் 10 July 2024.
- ↑ Dalip, Singh. "Light tank 'Zorawar' goes through test trial, likely to be inducted into Army by 2027". businessline. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
- ↑ "Land Defense brochure" (PDF). MTU. Rolls-Royce Group. பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
- ↑ "India unveils ‘Zorawar' light tank". Janes. 8 July 2024. https://www.janes.com/osint-insights/defence-news/defence/india-unveils-zorawar-light-tank.
- ↑ DRDO unveils indigenous light tank Zorawar
- ↑ India showcases light battle tank 'Zorawar' for high-altitude warfare
- ↑ What is the 'Zorawar' light battle tank that India will deploy at China border?
- ↑ Light tank ‘Zorawar’ goes through test trial, likely to be inducted into Army by 2027
- ↑ "'Zorawar' is India's answer to increased armoured threat on the Northern borders". TNIE. https://www.newindianexpress.com/nation/2022/aug/26/zorawar-is-indias-answer-to-increased-armoured-threat-on-the-northern-borders-2491711.html.
- ↑ "DRDO light tank 'Zorawar' to be ready for trials by year-end along China border". ET. https://economictimes.indiatimes.com/news/defence/drdo-light-tank-zorawar-to-be-ready-for-trials-by-year-end-along-china-border/articleshow/100356991.cms.
- ↑ "‘Developing under 25 tonnes light tank for Army’". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/developing-under-25-tonnes-light-tank-for-army/amp_articleshow/110098271.cms.