முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ் (Pope Anastasius I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் நவம்பர் 27, 399 முதல் திசம்பர் 19, 401 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 39ஆம் திருத்தந்தை ஆவார்[1].
முதலாம் அனஸ்தாசியுஸ் | |
---|---|
39ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | நவம்பர் 27, 399 |
ஆட்சி முடிவு | திசம்பர் 19, 401 |
முன்னிருந்தவர் | சிரீசியஸ் |
பின்வந்தவர் | முதலாம் இன்னசெண்ட் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | அனஸ்தாசியுஸ் |
பிறப்பு | தெரியவில்லை தெரியவில்லை |
இறப்பு | திசம்பர் 19, 401 |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | திசம்பர் 19 |
அனஸ்தாசியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
வரலாற்றுக் குறிப்புகள்
தொகுதிருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ் திருச்சபையின் தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் சிரீசியஸ் ஆவார். அனஸ்தாசியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் அவருக்கு ஒரு மகன் இருந்தார். அவர் அனஸ்தாசியுசின் சாவுக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலாம் இன்னசெண்ட் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.
இறையியலார் ஓரிஜென் கண்டனம் செய்யப்படுதல்
தொகுதிருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ் வரலாற்று முக்கியத்துவம் பெறுவதற்கு ஒரு காரணம் அவர் கி.பி. 2-3 நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்த ஓரிஜென்[2] என்னும் தலைசிறந்த இறையியலார் கிரேக்கத்தில் எழுதிய இறையியல் நூல் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டதும் அது தப்பறையான கொள்கைகளை உள்ளடக்கியதாகக் கருதப்பட்டதால் அவரைக் கண்டனம் செய்தது ஆகும்.[3]
தவறான கொள்கைகள் கண்டிக்கப்படல்
தொகுமுதலாம் அனஸ்தாசியுஸ் காலத்தில் கிறித்தவ மதம் துன்புறுத்தப்பட்ட பின்னணியில் தம் மதத்தை மறுத்து உரோமை அரசனுக்குப் பணிந்த கிறித்தவர்கள் தங்கள் தவற்றினை ஏற்று மீண்டும் கிறித்தவத்துக்குத் திரும்ப விரும்பினார்கள். அவர்கள் மீண்டும் ஏற்பது குறித்தும், அவர்களுக்கு மீண்டும் திருமுழுக்கு அளிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும் சர்ச்சை தொடர்ந்து நிகழ்ந்தது. டொனாட்டியக் கொள்கை, அவர்களுக்கு மறு-திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்று வாதாடியது.[4] அவர்களை மீண்டும் சபையில் ஏற்பது குறித்த நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று ஆப்பிரிக்க ஆயர்கள் சிலர் கேட்டனர். அதற்கு, திருத்தந்தை அத்தனாசியுஸ் கார்த்தேஜ் சங்கத்திற்கு (401) எழுதிய கடிதத்தில் பதில் அளித்தார்.
திருத்தந்தையின் ஆதரவாளர்கள்
தொகுமுதலாம் அனஸ்தாசியுசுக்கு ஆதரவு அளித்தவர்களுள் புனித ஜெரோம், புனித நோலா பவுலீனுஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். அவ்விருவரும் அனஸ்தாசியுசுக்கு முன் திருத்தந்தையாக இருந்த சிரீசியசின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க கால மேலைத் திருச்சபையின் தலைசிறந்த இறையியலராகக் கருதப்படும் புனித அகுஸ்தீன் (354-430) திருத்தந்தை அனஸ்தாசியுஸ் தப்பறைக் கொள்கைகளைக் கடிந்துகொண்டதைப் பாராட்டியுள்ளார். மேலும் அவர் அனஸ்தாசியுசின் நண்பராகவும் திகழ்ந்தார்.
இறப்பும் திருவிழாவும்
தொகுமுதலாம் அத்தனாசியுஸ் 401, திசம்பர் 19ஆம் நாள் இறந்தார். அவரது உடல் உரோமையில் போர்த்துவேன்சிசு சாலையில் அமைந்த போன்ந்தியன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது திருவிழா திசம்பர் 19ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Annuario Pontificio (Libreria Editrice Vaticana 2012 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-209-8722-0)
- ↑ ஓரிஜென்
- ↑ ஓரிஜெனின் தப்பறை
- ↑ டொனாட்டியக் கொள்கை
- Duff, Eamon. Saints and Sinners: A History of the Popes, Yale University Press, 2001, pp. 30–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-09165-6
- "Pope Athanasius I". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.