முதலாம் விக்ரகராசன்

சபலக்ச நாட்டின் அரசன்

விக்ரகராசன் (Vigraharaja I) (ஆட்சி 734-759 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். [1]

முதலாம் விக்ரகராசன்
சகமான அரசன்
ஆட்சிக்காலம்சுமார் 734-759 பொ.ச.
முன்னையவர்முதலாம் அஜயராஜன்
பின்னையவர்முதலாம் சந்திரராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

இவர் தனது தந்தையான முதலாம் அஜயராஜனுக்குப் பிறகு சகமான ஆட்சியாளராக ஆனார். [2] பிரித்விராஜ விஜயம் என்ற நூல் வழக்கமான துதிகளைப் பயன்படுத்தி இவரைப் புகழ்கிறது. அது இவர் பல இராணுவ வெற்றிகளை அடைந்ததைக் குறிக்கிறது. [3]

பிருத்விராஜா விஜயத்தின் கூற்றுப்படி, விக்ரகராஜாவுக்கு சந்திரராஜா மற்றும் கோபேந்திரராஜா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்: இவருக்குப் பிறகு சந்திரராஜாவும், அவருக்குப் பிறகு கோபேந்திரராஜாவும் பதவியேற்றனர். [2] பிற்கால ஹம்மிர மகாகாவ்யம் சந்திரராஜாவை ("ஸ்ரீ சந்திரா") விக்ரகராஜாவின் மூதாதையரான நரதேவரின் மகன் என்று குறிப்பிடுகிறது. [4]

சான்றுகள்

தொகு
  1. Anita Sudan 1989, ப. 116.
  2. 2.0 2.1 R. B. Singh 1964, ப. 55.
  3. R. B. Singh 1964, ப. 88.
  4. Anita Sudan 1989, ப. 23.

உசாத்துணை

தொகு
  • Anita Sudan (1989). A study of the Cahamana inscriptions of Rajasthan. Research. இணையக் கணினி நூலக மைய எண் 20754525.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_விக்ரகராசன்&oldid=3429055" இலிருந்து மீள்விக்கப்பட்டது