எழுவாய் வேற்றுமை
முதலாம் வேற்றுமை/ பெயர் வேற்றுமை
(முதல் வேற்றுமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எழுவாய் வேற்றுமை என்பது வேற்றுமை உருபுகளை ஏற்காமல் இயல்பாக நிற்கின்ற பெயரே ஆகும். இது முதல் வேற்றுமை என்றும் அழைக்கப்படுகிறது. எழுவாய் வேற்றுமை வினாவையும் பெயரையும் வினையையும் பயனிலையாகக் கொண்டு முடியும். அதாவது வினையும் பெயரும் வினாவும் முடியும் சொல்லாய் வந்து நிற்க, அவற்றுக்குக் 'கருத்தாவாய் நிற்பதே அதன் பொருளாகும்.
“ | "எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே"[1] | ” |
என்பது எழுவாய் பெயராக நிற்கும் நிலையைக் குறிக்கிறது.
வேறு பெயர்கள்
தொகுஎழுவாய், முதல்வேற்றுமை, பெயர் வேற்றுமை, வினைமுதல், செய்பவன், கருத்தா - என்பன ஒரே பொருளைக் குறிக்கும் சொற்களாகும்.
எழுவாய்க்குரிய பயனிலைகள்
தொகு“ | "பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினை நிலை உரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று அன்றி யணைத்தும் பெயர்ப்பய னிலையே " [2] |
” |
என்பது` நூற்பாவாகும்.
சான்று
தொகு- பொருண்மை சுட்டல்--ஆ(பசு) உண்டு.
- வியங்கொள வருதல் --மன்னர் வாழ்க.
- வினைநிலை உரைத்தல்-- பாம்பு கிடந்தது.
- வினாவிற்கேற்றல்-- அவன் யார்?
- பண்பு கொள வருவது --- எழிலன் கரியன்( நிறப் பண்பு)
- பெயர்கொள வருதல் -- கோணங்கள் பல.
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகுதொல்காப்பியம். சொல்லதிகாரம் - சேனாவரையம்.