முதுபாலை என்னும் துறையைச் சேர்ந்த பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு உள்ளன. [1] இந்தத் துறை புறநானூற்றில் புறத்திணையில் ஒன்றான பொதுவியல் என்னும் பகுதியில் வருகிறது.

இந்தத் துறைப்பாடல்களில் இன்னார் எனப் பெயர் சுட்டும் பழக்கம் இல்லை.

இலக்கியம்

தொகு

உடன் செல்லும்போது காட்டில் கணவனை இழந்த பெண் சொல்கிறாள்.

  • சாறு இழந்த கரும்புச் சக்கை போல அவரை இழந்து வளையல் இல்லாத வறுங்கையுடன் சுற்றத்தாரிடம் எப்படிச் செல்வேன். [2]
  • ஆலமரத்தில் பறவைகள் ஒலிப்பது போல ‘வளையல் இழந்து இப்படி ஆய்விட்டாளே’ என ஊரெல்லாம் பேசும்போது, என் நலனைப் பெரிதாகப் பேசும் என் தாய் முன் எப்படிச் செல்வேன்? [3]
  • கணவனை இழந்தவளை அவள் வளையல் கைகளைப் பிடித்து மற்றவர்கள் தேற்றுகின்றனர். ‘உனக்குத் தீங்கிழைத்த கூற்றும் இரதியும் காமனை இழந்து துடிக்கட்டும்’ துடிக்கட்டும் [4]
  • ’என் கணவனைப் புதைக்கத் தாழி செய்யும் குயவனே! என்னையும் சேர்த்துப் புதைக்கும் அளவுக்குப் பெரிய தாழியாக வனைக’ கணவனை இழந்தவள் வேண்டுகிறாள். [5]

இலக்கணம்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 253, 254, 255, 256
  2. புறநானூறு 253,
  3. புறநானூறு 254,
  4. புறநானூறு 255,
  5. புறநானூறு 256
  6. நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து
    தனி மகள் புலம்பிய முதுபாலை தொல்காப்பியம், புறத்திணையியல் 19, காஞ்சித்திணை
  7. காம்பு உயர் கடத்திடைக் கணவனை இழந்த
    பூங்கொடி மடந்தை புலம்பு உரைத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 254)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுபாலை&oldid=1269637" இலிருந்து மீள்விக்கப்பட்டது