முத்தாலங்குறிச்சி காமராசு

முத்தாலங்குறிச்சி காமராசு (Muthalankurichi Kamarasu) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தில் வாழ்ந்து வரும் ஓர் எழுத்தாளராவார். 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி இவர் பிறந்தார். வரலாற்றுச் செய்திகளைத் திரட்டி நூலாக்கும் கட்டுரையாளராக தொடர்ந்து இவர் இயங்கி வருகிறார். ஆதிச்சநல்லூர்,[1] கொற்கை, தாமிரபரணி, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள பகுதிகளுக்கு களப்பணியாளராகச் சென்று ஆய்வுகள் நடத்தி இதுவரை 51 நூல்களை எழுதியுள்ளார். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலங்கடத்திவந்த மத்திய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்து[2] வெற்றி கண்டவர் என்பதால் தமிழருலகில் நன்கு அறியப்படுகிறார்.[3] ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கவும் மேலும் சில பகுதிகளில் அகழ்வாராய்ச்சியைத் தொடரவும் இவரது வழக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முத்தாலங்குறிச்சி காமராசு
Muthalankurucikamarasu
பிறப்புச. காமாராசு
அக்டோபர் 8, 1966
முத்தாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்செய்துங்கநல்லூர்,
ஸ்ரீவைகுண்டம் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம்
தேசியம்இந்தியர்
கல்விபன்னிரண்டாம் வகுப்பு (+2)
பணிஒளிப்படக் கலைஞர்
அறியப்படுவதுஎழுத்தாளர், தொல்லியல் ஆர்வலர்
சமயம்இந்து
பெற்றோர்பெ. சங்கரசுப்பு (தந்தை),
சொர்ணம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
பொன்சிவகாமி
பிள்ளைகள்கா. அபிஷ்விக்னேஷ் (மகன்)
கா. ஆனந்தசொர்ணதுர்கா (மகள்)
உறவினர்கள்ச. தங்கப்பாண்டியன் (சகோதரர்),
ச. ஆறுமுகக்கனி (சகோதரி)
விருதுகள்1. தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது
2. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி வழங்கிய
தமிழ்ரத்னா சிறப்பு விருது
3. தமிழ்நாடு அரசின் கலை நன்மணி விருது.
வலைத்தளம்
http://www.muthalankurichikamarasu.com/

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சி என்ற தாமிரபரணி நதிக்கரையோர கிராமத்தில் சங்கரசுப்பு, சொர்ணம்மாள் தம்பதியருக்கு காமராசு மகனாகப் பிறந்தார்.முத்தாலங்குறிச்சி மற்றும் பாளையங்கோட்டையில் தொடக்கக்கல்வியை முடித்த இவர் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தார். பேருந்து நடத்துனராக காமராசு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மேடை நாடக நடிகர், நெல்லை வானொலி நாடக எழுத்தாளர், நூல் ஆசிரியர், திரைப்பட நடிகர் என தமிழ் உலகில் பன்முகங்களுடன் செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் ஒரு புகைப்பட நிறுவனத்தை நடத்திவரும் இவர் பொன்சொர்ணா என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

எழுத்துலக அறிமுகம்

தொகு

1987 ஆம் ஆண்டு தேவி வார இதழில் ஒரு துணுக்கு எழுத்தாளராக காமராசு எழுத்துலகுக்கு அறிமுகமானார். நாடக விழா நாடகங்கள் உள்பட இதுவரை நெல்லை வானொலிக்காக இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.கோயில் தல புராணங்களை நாளிதழ்களில் எழுத ஆரம்பித்த இவர் தற்போது கோயில்கள் தொடர்பான நூல்களையும் வரிசையாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

எழுதியுள்ள நூல்கள் சிலவற்றின் பட்டியல்

தொகு
  1. நெல்லை தமிழ் முரசு இதழில் இவர் 5 ஆண்டுகளாக எழுதிய நதிக்கரையோரத்து அற்புதங்கள் என்ற தொடர் தலைத்தாமிரபரணி என்ற 1000 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.
  2. சக்தி விகடன் இதழில் காமராசு எழுதிய தாமிரபரணி கரையினிலே என்ற தொடரும் நூலாக வெளிவந்துள்ளது. ஆனந்த விகடன் இந்நூலை வெளியிட்டுள்ளது.
  3. அத்ரி மலை யாத்திரை என்ற தொடரை காமராசு தினகரன் நாளிதழில் தொடர்ந்து எழுதிவந்தார்.சூரியன் பதிப்பகம் இத்தொடரை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளது.[4]
  4. இருபது தென்னாட்டு சமீன்தாரர்களின் வரலாற்றைத் தொகுத்து ஒரு நூலாக இவர் வெளியிட்டுள்ளார். இவற்றைத் தவிர தினகரன், தினத்தந்தி நாளிதழ்களில் இவர் எழுதிய தொடர்களும் பல நூல்களாக வெளிவந்துள்ளன.
  5. ஆதிச்சநல்லூர் பற்றிய வல்லுநர்கள் கருத்துகளையும் ஆதிச்சநல்லூர் மாதிரி அறிக்கையையும் தொகுத்து ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 என்ற நூல் தி தமிழ் திசை இந்து நாளிதழ் நூலாக வெளியிட்டுள்ளது.
  6. குணவதியம்மன் என்ற இவரது வரலாற்று நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
  7. வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடம்[5]
  8. பொருநை பூக்கள்[6]
  9. பொதிகை மலை அற்புதங்கள்
  10. என் உயிரே விட்டுக்கொடு
  11. தாமிரபரணி கரை சித்தர்கள்[7]
  12. ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
  13. தென்னக கோயில்கள்
  14. தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் [8]
  15. களரி அடிமுறை பாகம் 1 [9]

திரைப்படங்கள்

தொகு

நடிகை ரோகிணி இயக்கிய அப்பாவின் மீசை, இப்ராகிம் ராவுத்தர் இயக்கத்தில் வெளியான புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், (பேருந்து நடத்துனராக) ராட்டினம் கே.எசு.தங்கசாமி இயக்கத்தில் வெளிவந்த எட்டுத்திக்கும் மதயானை போன்ற திரைப்படங்களில் காமராசு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

விருதுகள்

தொகு
  • நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்ரத்னா சிறப்பு விருது (2019) [12]
  • தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் வழியாக மாவட்ட அளவில் வழங்கப்பெறும் கலை நன்மணி விருது. (2021-2022) [13]
  • கலைஞர் தொலைக்காட்சி வழங்கிய சிறந்த எழுத்தாளருக்கான விருது.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "Artefacts recovered at Sivakalai, Adichanallur displayed". The Hindu (in Indian English). 2020-09-12. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  2. Balaji. "மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு". tamil.thesubeditor.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  3. "உலக நாகரிகத்தின் தொட்டில் ஆதிச்சநல்லூர்: முத்தாலங்குறிச்சி காமராசு". ETV Bharat News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  4. "கண்டோம் கருப்பசாமியை!". www.dinakaran.com. Archived from the original on 2021-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. "காவ்யா பொருநை பூக்கள் /முத்தாலங்குறிச்சி காமராசு. Kāvyā porunai pūkkaḷ /Muttālaṅkur̲icci Kāmarācu. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  7. காமராசு, முத்தாலங்குறிச்சி. "திருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  8. அறியப்படாத தியாகிகள் நூல் வெளியீட்டு விழா
  9. களரி அடிமுறை பாகம் 1 வெளியீட்டு விழா. முனைவர் ரமேஷ் ரத்தினகுமார் வாழ்த்துரை
  10. "Praise pours in for Tamil Semmal award winner". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  11. "எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு 'தமிழ் ரத்னா' விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்". Dailythanthi.com. 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  12. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி செய்தி
  13. கலை விருதுகளுக்கு 15 பேர் தேர்வு
  14. கலைஞர் தொலைக்காட்சி செய்தி